ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கி கொடுத்துட்டு எவ்வளவு சிம்பிளாக இருக்காரு... மொத்த அசையும் சொத்து இவ்வளவுதான்!!

2024 பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் இனிதே நிறைவடைந்தன. 126 பதக்கங்கள் உடன் அமெரிக்கா முதலிடத்தையும், 91 பதக்கங்கள் உடன் சீனா 2வது இடத்தையும் பிடித்து உள்ளது. ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள் உடன் நம் இந்தியா 71வது இடத்தில் 2024 ஒலிம்பிக்கை நிறைவு செய்துள்ளது. தங்க பதக்கம் எதுவும் இந்தியா சார்பில் பெறப்படவில்லை. இந்தியாவிற்கான அந்த ஒரேயொரு வெள்ளி பதக்கத்தை பெற்று தந்தவர் நீராஜ் சோப்ரா (Neeraj Chopra) ஆவார்.

ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா 2020இல் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கத்தை வென்று மொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார். இத்தகைய உலக தரமிக்க இந்திய ஈட்டி எறிதல் வீரரிடம் உள்ள கார் & பைக் கலெக்‌ஷன்ஸை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

neeraj chopra car bike collections

மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஜாவேலின் எடிசன் (Mahindra XUV700 Javelin Edition): 2020 ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றதை கொண்டாடும் விதமாகவும், நீராஜ் சோப்ராவை பாராட்டும் விதமாகவும் மஹிந்திரா நிறுவனம் அவருக்கு எக்ஸ்யூவி700 ஜாவேலின் எடிசன் காரை பரிசளித்தது. 2020 ஒலிம்பிக்கில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து நீராஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றதை குறிப்பிடும் விதமாக, காரின் முன்பக்க ஃபெண்டரில் '87.58' என்கிற முத்திரை இடம்பெற்றுள்ளது.

மஹிந்திரா தார் (Mahindra Thar): மஹிந்திராவில் இருந்து நீராஜ் சோப்ரா வாங்கிய மற்றொரு வாகனம் தார் ஆகும். பளபளப்பான கருப்பு நிறத்தில் இந்த ஆஃப்-ரோடு வாகனத்தை நீராஜ் சோப்ரா வாங்கி இருந்தார். இவர் வைத்திருப்பது, மஹிந்திரா தாரின் ஹார்ட்-டாப் வேரியண்ட் ஆகும். அதாவது, நீராஜ் சோப்ராவின் தார் வாகனத்தில் மேற்கூரையை அகற்ற முடியாது.

neeraj chopra car bike collections

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner): நீராஜ் சோப்ராவின் கார் கலெக்‌ஷன்ஸில் வெள்ளை நிறத்திலான ஃபார்ச்சூனர் காரும் உள்ளது. இவரிடம் இருப்பது ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடுக்கு முந்தைய ஃபார்ச்சூனர் கார் ஆகும். ஃபார்ச்சூனரின் ஆல்ஃபா 4 வேரியண்ட்டை நீராஜ் சோப்ரா வைத்துள்ளார். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஃபார்ச்சூனர் காரை தனது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொண்டு நீராஜ் சோப்ரா பயன்படுத்தி வருகிறார்.

neeraj chopra car bike collections

ரேஞ்ச் ரோவர் வேலர் (Range Rover Velar): கடந்த 2023ஆம் ஆண்டு துவக்கத்தில் நீராஜ் சோப்ரா ஒரு ரேஞ்ச் ரோவர் காரை வாங்கி இருந்தார். அதுதான், ரூ.90 லட்சம் மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் வேலர் கார் ஆகும். நீராஜ் சோப்ராவின் வெள்ளை நிறத்திலான வேலர் காரில் என்ன மாதிரியான என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை.

neeraj chopra car bike collections

ஃபோர்டு மஸ்டங் (Ford Mustang): நீராஜ் சோப்ராவிடம் உள்ள மிக விலையுயர்ந்த கார் இது எனலாம். ஆனால், இதனை செகண்ட்-ஹேண்டில் மஹாராஷ்டிராவில் இருந்து இவர் வாங்கியதாக கூறப்படுகிறது. முன்பு கருப்பு நிறத்தில் இருந்த இந்த மஸ்டங் காரை நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் நீராஜ் சோப்ரா வைத்துள்ளார். இந்த மஸ்டங் காரில் 5.0 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

neeraj chopra car bike collections

பஜாஜ் பல்சர் 220எஃப் (Bajaj Pulsar 220F): ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பு நீராஜ் சோப்ராவிடம் இருந்த பைக் இது ஒன்று மட்டுமே ஆகும். மற்ற இளைஞர்களை போன்று, பல்சர் 220எஃப் பைக்கில் நீராஜ் சோப்ரா ஆர்வம் கொண்டவராக இருந்தார். கருப்பு நிறத்தில் பல்சர் 220எஃப் பைக்கை இப்போதும் இவர் வைத்துள்ளார்.

neeraj chopra car bike collections

ஹார்லி-டேவிட்சன் 1200 ரோட்ஸ்டர் (Harley Davidson 1200 Roadster): 2019ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஹார்லி-டேவிட்சன் 1200 ரோட்ஸ்டர் பைக் ஒன்றையும் நீராஜ் சோப்ரா வைத்துள்ளார். சாடின் கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த ஹார்லி-டேவிட்சன் பைக்கில் 1202சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 78 பிஎச்பி மற்றும் 98 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ராவிடம் உள்ள வாகனங்களில் பெரும்பாலானவை கருப்பு நிறத்தில் உள்ளன. இதில் இருந்து, இவருக்கு கருப்பு நிறம் என்றால் பிடிக்கும் என்பது தெரிகிறது. இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ளவை யாவும் 2024 ஒலிம்பிக் போட்டிக்கு முன் நீராஜ் சோப்ரா வாங்கியவை. 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இவர் மேலும் ஒரு வெள்ளி பதக்கத்தை சொந்தமாக்கி உள்ளதால், வரும் மாதங்களில் புதிய, புதிய வாகனங்களை இவர் வாங்கக்கூடும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 12, 2024, 19:43 [IST]
English summary
2024 paris olympics indian silver medalist neeraj chopra car bike collections
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X