கார் விலை குறைஞ்சது மட்டுமல்ல! 2025ல் நடந்த சுவரஸ்யமான சம்பவங்கள் இது தான்!
இன்றுடன் நாம் 2025ம் ஆண்டு முடிந்து 2026க்குள் நுழையப்போகிறோம். இந்த தருணத்தில் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் 2025ம் ஆண்டு நடந்த முக்கியமான விபரங்களை எல்லாம் இங்கே விரிவான காணலாம் வாருங்கள்.
குளோபல் மொபிலிட்டி ஆட்டோ எக்ஸ்போ
கடந்த ஜனவரி மாதம் டில்லியில் குளோபல் மொபிலிட்டி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி நடந்தது. இதில் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சி சர்வதேச அளவில் பேசு பொருளானது. உலகம் முழுவதும் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இதில் பங்கேற்றனர். லட்சகணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். இந்த கண்காட்சி வரலாற்று சாதனை படைத்த கண்காட்சியாக மாறியது.

பட்ஜெட் 2025
மத்திய அரசு கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கதல் செய்தது.இதன்படி 1600 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு இறக்குமதி வரி 100% த்தில் இருந்து 50%மாக குறைத்து அறிவிக்கப்பட்டது. இது போக இவி வாகனங்களுக்க தேவையான லித்தியம் அயான் பேட்டரி, கேத்தோடு மெட்டிரீயல், பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட விஷயங்களுக்கு இறக்குமதி வரியை முற்றிலுமாக ரத்து செய்தது.
இ20 பெட்ரோல்
கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் இ20 பெட்ரோல் சாத்தியமாகியுள்ளுது. இதற்கு முன்னர் பெட்ரோலில் 10 சதவீதம் மட்டுமே எத்தனால் கலக்கப்பட்டு வந்தது. ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் 20 சதவீத எத்தனால் கலப்புடன் விற்பனை செய்யப்பட்டது. இது வாகனத்தின் மைலேஜ் மற்றும் பெர்ஃபார்மென்ஸை பாதிப்பதாக விமர்சனங்களும் எழுந்தது.

இந்தியா இங்கிலாந்து இலவச வர்த்தக ஒப்பந்தம்
கடந்த ஜூலை மாதம் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே இலவச வர்த்த ஒப்பந்த கையெழுத்தானது. இந்த ஒப்பந்த்தின்படி தற்போது இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 110 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இது அடுத்த 5 ஆண்டுகளில் 10 சதவீதமாக படிப்படியாக குறைக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு குறைவான இறக்குமதி வரியில் கார்களை கொண்டு வர முடியும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கார்களை குறைவான வரியில் கொண்டு வர அனுமதி உண்டு. அஸ்டான் மார்டின், பென்ட்லி, மெக்லாரன், ஜேஎல்ஆர், ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் விலை இதனால் குறையும்.
பிரபல கார்களுக்கு பிறந்த நாள்
இந்த 2025ம் ஆண்டு பிரபலமாக விற்பனையாகி வரும் கார்கள் விற்பனையாகும் காலத்தின் மைல்கல்லை எட்டியது. இதன்படி கிரெட்டா கார் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது. டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனையை துவங்கி 20 ஆண்டுகளை நிறைவு செய்தது. மாருதி ஸ்விஃப்ட் காரும் இந்தியாவில் விற்பனைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மாருதி ஆல்டோ கார் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மஹிந்திராவின் பொலிரோ காரும் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

டெஸ்லா வருகை
மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை கடந்த ஜூலை மாதம் திறந்தது. முதல் காராக மாடல் ஒய் காரை இந்தியாவில் களம் இறக்கியுள்ளது. முதலில் இந்த ஷோரூம் மும்பையில் துவங்கப்பட்ட நிலையில் தற்போது டெல்லியிலும் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு தேவையான கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி 2.0
மத்திய அரசு இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றத்தை கொண்டு வந்தது.அதன்படி கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் இந்தியாவில் 28 சதவீதமாக வரி விதிக்கப்பட்ட வாகனங்கள் எல்லாம் 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதே போல செஸ் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் நீக்கப்பட்டு ஒரே வரியாக 40 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது.இதனால் வாகனங்களின் விலை அதன்வைக்கு ஏற்ப லட்ச கணக்கில் குறைந்தது. இதனால் இந்தியா முழுவதும் வாகன விற்பனை மிக வேகமாக அதிகரித்தது.
CAFE 3
மத்திய அரசு கார்பரேட் சராசரி எரிபொருள் செலவு குறித்த புதிய திட்டத்தை கொண்டுள்ளது. இதன்படி பயணிகள் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுவை கட்டுப்படுத்த திட்ட விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி வரும் 2027ம் ஆண்டிற்குள் ஒரு நிறுவனம் விற்பனை செய்யும் கார்கள் சராசரியாக 100 கி.மீ பயணிக்கு 3.73 லிட்டர் எரிபொருளை தான் செலவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. இதுவே 2032ம் ஆண்டு 3.01 லிட்டராக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தற்போதே வாகன தயாரிப்பு நிறுவனங்கள் செய்ய துவங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications









