21 கன் சல்யூட் விண்டேஜ் கார் ராலி ஸ்பெஷல்... செவர்லே பெல் ஏர் காரின் ஸ்கெட்ச்!

By Saravana

பாரம்பரிய கார்களை போற்றும் விதத்தில் நடைபெற இருக்கும் 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் ராலி கார் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நம் நாட்டின் பாரம்பரிய கார்கள் தவிர்த்து சில வெளிநாட்டு பாரம்பரிய கார்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க இருப்பதால், ஆவலை தூண்டியிருக்கிறது.

இந்த சர்வதேச பாரம்பரிய கார் விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில், எமது தளத்தின் எடிட்டர் சந்தோஷ் ராஜ்குமார் கைவண்ணத்தில் உருவான 1957 செவர்லே பெல் ஏர் காரின் பென்சில் ஸ்கெட்ச் படத்தை வாசகர்களின் கண்களுக்கு வார இறுதி விருந்தாக படைக்கிறோம்.

1950ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை இந்த செவர்லே பெல் ஏர் கார் உற்பத்தி செய்யப்பட்டது. அமெரிக்காவின் மிக பெருமைவாய்ந்த கிளாசிக் கார் மாடலாக தற்போது புகழப்படுகிறது.

2 டோர் ஹார்டுடாப், 2 டோர் கூபே, 4 டோர் செடான், 4 டோர் ஸ்டெஷன் வேகன் மற்றும் 2 டோர் கன்வெர்ட்டிபிள் ஆகிய பாடி ஸ்டைல்களில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டது.

இந்த காரில் 145 பிஎச்பி முதல் 315 பிஎச்பி வரையில் சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 3.9 லிட்டர் மற்றும் 5.7 லிட்டர் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டது. 3 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 2 ஸ்பீடு பவர்கிளைடு ஆட்டோ கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைத்தது.

இன்றைக்கு கிளாசிக் கார் சேகரிப்பாளர்களால் போற்றப்படும் இந்த அமெரிக்க பாரம்பரிய காரின் பெருமையை போற்றும் விதத்தில், இந்த பிரத்யேக ஸ்கெட்ச் படத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 7, 2015, 14:40 [IST]
English summary
The Bel Air was produced by Chevrolet between 1950 and 1981, with the car seeing a dramatic styling transition over the years. However, the most loved and sought-after model (even today) is the 1957 Bel Air. The car was available in three body styles-2-door hardtop, 2-door coupe, 4-door sedan, 4-door station wagon and 2-door convertible, like the one featured here.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+