21 கன் சல்யூட் விண்டேஜ் கார் திருவிழா - எக்ஸ்க்ளூசிவ் கவரேஜ்

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்த அதேவேளையில், மறுபுறம் 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு ஆட்டோமொபைல் பிரியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. கடந்த 6ந் தேதி துவங்கிய பாரம்பரிய கார் மற்றும் பைக்குகளுக்கான இந்த சர்வதேச அளவிலான திருவிழாவை ஹரியானா முதல்வர் மனோஹர் லால் கட்டார் துவங்கி வைத்தார். இந்த விழா நிகழ்வுகளின் பிரத்யேக படங்களின் தொகுப்பையும், கூடுதல் தகவல்களையும் தொடர்ந்து காணலாம்.

21 கன் சல்யூட் விண்டேஜ் கார் திருவிழா - எக்ஸ்க்ளூசிவ் கவரேஜ்

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் முதல் நாளில் பாரம்பரிய கார் மற்றும் பைக்குகள் டெல்லி செங்கோட்டையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர். இரண்டாவது நாள் விழாவின்போது பாரம்பரிய கார் மற்றும் பைக்குகளை புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பை உரிமையாளர்கள் பெற்றனர். இது ஒரு புதுவித அனுபவமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த விழாவில் கார்ல் பென்ஸ் உருவாக்கிய மோட்டார்வேகன் என்ற முதல் கார் மாடலின் அச்சு அசலாக காப்புரிமை பெற்று உருவாக்கப்பட்ட நகல் மோட்டார்வேகனும், ஹென்றி ஃபோர்டு உருவாக்கிய குவாட்ரா சைக்கிளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதுதவிர, ஜாகுவார், ரோல்ஸ்ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், பென்ட்லீ மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் புதுப்பிக்கப்பட்ட பாரம்பரிய கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களின் கண்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

கார்கள் மட்டுமின்றி, பாரம்பரிய மோட்டார்சைக்கிள்கள் பலவும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட பல பிராண்டுகளில் தயாரித்து வெளியிடப்பட்ட பழமையான மோட்டார்சைக்கிள் மாடல்களை பார்க்க முடிந்தது. குறிப்பா, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டர் 750சிசி மோட்டார்சைக்கிள் பலரையும் கவர்ந்தது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கார்களை பார்த்து பரவசப்பட்ட அதேநேரத்தில், பாரம்பரிய கார்களை காணும் வாய்ப்பு ஒருசேர கிடைத்தது ஆட்டோமொபைல் பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Wednesday, February 17, 2016, 10:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X