ஓனரே வந்து சொல்லலனா இது யாருக்குமே தெரிஞ்சிருக்காது.. 21 வருஷ பழைய இண்டிகா கார் இவ்ளோ மைலேஜை தருதா!!
பழைய கார்களை புதுசு போல பராமரிப்பது எல்லாம் ஒரு தனி கலை. குறிப்பாக, வாகனம் மீது மிகுந்த பிரியம் கொண்டிருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும். அந்தவகையிலேயே, கார்கள் மீது தீராத காதல் கொண்டிருக்கும் ஓர் நபர் தன்னுடைய பல ஆண்டுகள் பழைய காரை வாங்கி ஓரிரு ஆண்டுகள் மட்டுமே ஆகின்ற வாகனத்தைப் போல பராமரித்து வருகின்றார். சொல்லப்போனால் இந்த கார் மாடல் மிகவும் பழையது என்பதை அவர் சொல்லவில்லை என்றால் யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு புதிதுபோல் அவர் அந்த காரை பராமரித்து வருகின்றார்.
இந்த சம்பவம் குறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம். டாடா இண்டிகா (Tata Indica), இந்த காரை யாராலும் மறக்க முடியாது. இது இப்போது விற்பனையில் இல்லை. மேலும், விற்பனையில் இருந்து அகற்றியே பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இத்தகைய ஓர் கார் மாடலையே பல ஆண்டுகளாக பயன்படுத்தியும், மேலும், புதிது போலும் பராமரித்து வருகின்றார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் நபர். ஓரிரு ஆண்டுகள் மட்டுமே பழைய காரை போல இருக்கும் இந்த வாகனம் 2003 ஆம் ஆண்டு மாடல் என்பது அந்த காரின் ஓனரே செல்லவே தெரிய வந்திருக்கின்றது.
ஆமாங்க, 21 ஆண்டுகள் பழைய காரே இந்த டாடா இண்டிகா வி2 டிஎல்இ மாடல் ஆகும். டாடா மோட்டார்ஸ்-ஆல் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கப்பட்ட மிக முக்கியமான கார் மாடல்களில் ஒன்றாக இண்டிகா காட்சியளிக்கின்றது. இதை ஓர் நபர் இப்போதும் புதிது போல் பராமரித்து வருகின்றார் என்பதுதான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
காரின் வெளிப்புறம் மட்டுமல்ல, உட்பக்கமும் பார்க்க சற்றே புதிது போலவே தென்படுகின்றது. இவ்வாறு எல்லாம் ஓர் காரை பராமரிக்க வேண்டும் என்றால் தீவிர கார் காதலராக அவர் இருக்க வேண்டும், இல்லை என்றால், அந்த காரின் மீது அதிகம் நேசம் கொண்டவராக இருக்க வேண்டும்.
அநேகமாக இண்டிகாவை புதிது போல் பார்த்து வரும் நபர் இந்த இரண்டுக்கும் சொந்தக்காரராக இருப்பார் என கணிக்க முடிகின்றது. ரத்தன் டாடா பொருப்பில் இருந்த போது தாயரிக்கப்பட்ட ஓர் கார் மாடலே இண்டிகா ஆகும். மேலும், டாடா மோட்டார்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு முன்னதாக டெல்கோ (Tata Engineering and Locomotive Company) என அழைக்கப்பட்ட காலகட்டத்திலேயே இந்த கார் தயாரிக்கப்பட்டது.

இந்த காரை மட்டுமல்ல அப்போதே சியாரா மற்றும் எஸ்டேட் போன்ற கார்களையும் டாடா தயாரித்து வந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் டாடா இண்டிகா-வில் காரை விற்கும் போது வழங்கப்பட்ட பாகங்கள் அப்படியே மாற்றப்படாமல் இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.
13 அங்குல ஸ்டீல், முன் பக்கத்தில் வழங்கப்பட்ட டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின் பக்கத்தில் வழங்கப்பட்ட டிரம் பிரேக்குகள் ஆகியவை அப்படியே இருக்கின்றன. இதேபோல் காரின் உட்பக்கத்தில் வழங்கப்பட்ட அதே இரண்டு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீலே இப்போதும் இடம் பெற்றிருக்கின்றது.
இத்துடன், இருக்கைகள், கியர் லிவர்கள் உள்ளிட்டவையும் அப்படியே உள்ளன. டேஷ்போர்டுகூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதை வைத்தே இந்த இண்டிகாவின் உரிமையாளர் மிகப் பெரிய கார் காதலர் என கூறப்படுகின்றது. எஞ்சின் இருக்கும் இடத்தையும் அவர் அவ்வளவு சுத்தமாக மெயின்டெயின் செய்து வருகின்றார்.
1.4 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்சினே இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றது. இது அதிகபட்சமாக 54 பிஎச்பி மற்றும் 83 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதேபோல், ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும் இந்த கார் இப்போதும் 13.64 கிமீ மைலேஜை தருவதாகவும் அதன் உரிமையாளர் தெரிவித்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பழைய கார்களை புதிதுபோல் பராமரித்து வரும் நிகழ்வு இந்தியாவில் அரங்கேறுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. ஆனால், டாடா இண்டிகாவிற்கு ஓர் நபர் இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருவது பலருக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








