22 வயது இளம்பெண்ணின் அபரீத வளர்ச்சி! பானி பூரி விற்றே ரூ.10 லட்சத்தில் கார்... பாராட்டுகள் குவியுது!!

ராயல் என்ஃபீல்டு புல்லட் (Royal Enfield Bullet) பைக்கில் பானி பூரி விற்றுவந்த இளம் பெண் புதியதாக மஹிந்திரா தார் வாகனத்தை வாங்கியுள்ளார். இதனை அறிந்த ஆனந்த் மஹிந்திரா அந்த பெண்ணை வெகுவாக பாராட்டி உள்ளார். யார் இந்த பெண்? எங்கு உள்ளார்? எவ்வாறு பானி பூரியை விற்றே கார் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்? என்பதை இனி பார்க்கலாம்.

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டீவ்வாக இருக்கக் கூடியவர். குறிப்பாக, எக்ஸ் தளத்தில் பல்வேறு விதமான விஷயங்களை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துக் கொண்டதை நிறைய முறை பார்த்திருக்கிறோம். முக்கியமாக, ஏழ்மையில் இருப்பவர்கள் புது முயற்சியாக செய்யும் தொழில்களை வெகுவாக பாராட்டக் கூடியவர், ஆனந்த் மஹிந்திரா.

அந்த வரிசையில், ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் பக்கத்தில் தற்போது வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில், மஹிந்திரா தார் வாகனத்தில் பானி பூரி விற்கும் இளம் பெண் குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. டாப்சி உபாத்யாய் (வயது 22), டெல்லியை சேர்ந்தவரான இந்த பெண் இளங்கலை தொழிற்நுட்பவியல் (பி.டெக்) வரையில் படித்திருந்தும், கௌரவம் பார்க்காமல் பானி பூரி விற்க ஆரம்பித்தார்.

இதனாலேயே, பிடெக் பானி பூரி கேர்ள் என சுற்றுவட்டார பகுதிகளில் பிரபலமடைய துவங்கிய டாப்சி உபாத்யாய், பின்னர் அதே 'பிடெக் பானி பூரி வாலி' என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை துவங்கி, தனது அன்றாட செயல்பாடுகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர ஆரம்பித்தார். இதன் பின்னரே, டெல்லி முழுவதும் அறியப்பட துவங்கிய டாப்சி உபாத்யாய்க்கு மற்ற மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் கிடைக்க ஆரம்பித்தனர்.

girl buys mahindra thar

இதன் எதிரொலிரயாக, இந்த இளம் பெண்ணின் பானி பூரி வியாபாரம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக சூடுப்பிடிக்க ஆரம்பித்தது. இவரது பானி பூரியை சாப்பிடவே பல கிமீ-கள் பயணம் செய்து வாடிக்கையாளர்கள் வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம், மேற்கு டெல்லியில் பல கிளைகளை திறந்த டாப்சி உபாத்யாய், ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக் ஒன்றை வியாபாரத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்தார்.

அதாவது, வெவ்வேறான இடங்களுக்கு புல்லட் பைக்கில் சென்று பானி பூரிகளை இவர் வழங்கி வந்தார். இது டாப்சி உபாத்யாய்யை மேலும் பிரபலமாக்கியது. நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் கூட, 'புல்லட் பைக்கில் பானி பூரி விற்கும் பெண்' என சில வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை பற்றி பார்த்திருந்தோம். இந்த நிலையில், டாப்சி உபாத்யாய் புதியதாக மஹிந்திரா தார் வாகனத்தை வாங்கி உள்ளார்.

girl buys mahindra thar

இந்த விஷயம் ஆனந்த் மஹிந்திராவின் காதில் விழ, மஹிந்திரா தாருக்கு தனது வாகனத்தை அப்கிரேட் செய்துக் கொண்ட டாப்சி உபாத்யாய்யை ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெகுவாக பாராட்டி உள்ளார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த எக்ஸ் பதிவில், "ஆஃப்-ரோடு வாகனங்கள் என்ன செய்ய வேண்டும்? மக்கள் இதுவரை செல்லாத இடங்களுக்கு செல்ல உதவும். சாத்தியமற்றதை ஆராய மக்களுக்கு உதவும்.

குறிப்பாக எங்கள் கார்கள் மக்கள் உயரவும், அவர்களின் கனவுகளை வாழவும் உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நான் ஏன் இந்த வீடியோவை விரும்புகிறேன் என்று இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும்" என குறிப்பிட்டுள்ளார். ஆஃப்-ரோடு வாகனங்கள் என இந்த பதிவில் மஹிந்திரா தார் வாகனத்தை ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

girl buys mahindra thar

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 3 கதவுகளை மட்டுமே கொண்ட வாகனமாக இருப்பினும், மஹிந்திரா தாரின் குறைந்தப்பட்ச விலையே ரூ.10 லட்சத்தை தாண்டி உள்ளது. ஏனெனில், அந்த அளவிற்கு எந்தவொரு சாலைக்கும் கொண்டு செல்லக்கூடிய வாகனம் தார் ஆகும். இப்படிப்பட்ட வாகனத்தை 22 வயது மட்டுமே ஆன ஒரு இளம்பெண் பானி பூரி விற்று வாங்கியுள்ளார் என்றால் அவரது வியாபாரம் எந்த அளவிற்கு வளர்ச்சி பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 24, 2024, 12:17 [IST]
English summary
22 year old girl buys mahindra thar by selling pani puri check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X