22 ஆண்டுகள் பழைய ஸ்கார்பியோவை புதுசு போல ஆக்கிட்டாங்க.. இப்போதான் ஷோரூம்ல இருந்து இறக்கினதைப் போல இருக்கு..

மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக ஸ்கார்பியோ இருக்கின்றது. இந்த கார் மாடலுக்கு இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பல அரசியல்வாதிகள் டொயோட்டா இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் என தங்களின் வாகனங்களை மாற்றி வருகின்ற போதிலும், இப்போதும் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் ஸ்கார்பியோவையே பயன்படுத்தி வருவதை நம்மால் காண முடிகின்றது.

ஆஃப்-ரோடு மற்றும் நகர பயன்பாடு என இரண்டிற்கும் உகந்த கார் மாடலாக ஸ்கார்பியோ காட்சியளிக்கின்றது. இத்தகைய ஓர் கார் மாடலையே மிக மிக பழைய நிலையில் இருந்து புதிதுபோல் மாற்றி இருக்கின்றனர் ஆட்டோ ரவுண்டர்ஸ் எனும் கார் அலங்கரிப்பு நிறுவனம் ஒன்று.

Mahindra scorpio transformed

20 ஆண்டுகள் பழைய ஸ்கார்பியோ காரையே அவர்கள் புத்தம் புதிது போல் மாற்றி இருக்கின்றனர். இது ஓர் முதல் தலைமுறை ஸ்கார்பியோ ஆகும். மாடிஃபிகேஷனால் இது தற்போது புதிய தலைமுறை ஸ்கார்பியோவாக மாறி இருக்கின்றது. இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

இப்போது சந்தையில் ஸ்கார்பியோ இரண்டு விதமான மாடல்களாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகியவையே அவை ஆகும். இதில், ஸ்கார்பியோ கிளாசிக் மாடலாகவே முதல் தலைமுறை ஸ்கார்பியோ மாற்றப்பட்டு இருக்கின்றது. ஷோரூம் இருந்து புதிய ஸ்கார்பியோ கிளாசிக்-ஐ இறக்கினால் எப்படி இருக்குமோ அப்படியாகவே இந்த கார் மாடல் தற்போது காட்சியளிக்கின்றது.

Scorpio converted

ஆகையால், இந்த காரின் உரிமையாளர்கள் தற்போது மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றிருக்கின்றனர். இதற்கான செலவு பற்றிய விபரங்களை அந்த காரின் உரிமையாளரும் வெளியிடவில்லை, காரை அலங்கரித்த நிறுவனமும் வெளியிடவில்லை. எப்படியும் ஒரு சில லட்சக் கணக்கான ரூபாயை இதற்காக ஸ்கார்பியோ காரின் உரிமையாளர் செலவிட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

இப்போதைய நிலவரப்படி ஓர் புதிய ஸ்கார்பியோ கிளாசிக் காரை வாங்க வேண்டும் என்றால் ரூ. 11.99 லட்சத்தை செலவிட வேண்டியிருக்கும். இது வெறும் ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 13 லட்சத்திற்கும் அதிகமாக இதன் விலை இருக்கும்.

Mahindra scorpio steering

இவ்வளவு பெரிய தொகையை செலிவிடுவதற்கு பதிலாக மிகவும் ஸ்மார்ட்டாக ஓரிரு லட்ச ரூபாய் செலவிலேயே பழைய தலைமுறை ஸ்கார்பியோவை புதிய ஸ்கார்பியோ கிளாசிக்காக மாற்றி இருக்கின்றனர். இதனால்தான் இணைய வாசிகள் இந்த செயலுக்காக ஸ்கார்பியோ காரின் உரிமையாளரையும், அதை மாற்றியவர்களையும் பாராட்டி வருகின்றனர்.

ஸ்கார்பியோ கிளாசிக் கார் மாடலில் மஹிந்திரா நிறுவனம் ஏகப்பட்ட சிறப்பு கருவிகள் மற்றும் நவீன கால அம்சங்களை வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், எல்இடி டெயில் லைட்டுகள், 2வது வரிசை இருக்கைகளுக்கும் ஏசி துவாரங்கள், ஹைட்ராலிக் வாயிலாக இயங்கும் பான்னெட், பான்னெட் ஸ்கூப், ஏர் பேக், மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம், இன்டெல்லி பார்க் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Mahindra scorpio seat

இத்துடன், 22.86 செமீ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புருவத்தைப் போன்ற எல்இடி லைட்டுகள், ஸ்பாய்லர், டைமண்ட் கட் அலாய் வீல்கள், முன் பக்க இருக்கைகளுக்கு ஆர்ம் ரெஸ்ட் போன்ற அம்சங்களையும் இந்த காரில் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இந்த அம்சங்களை எல்லாம் இப்போது மாற்றப்பட்டு இருக்கும் பழைய ஸ்கார்பியோவில் காண முடியாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அந்த காரில் பழைய தலைமுறை ஸ்கார்பியோவில் இருக்கக் கூடிய அம்சங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். அதேவேளையில், இதுபோன்று தொழில்நுட்ப அம்சங்களை மாடிஃபிகேஷன் வாயிலாக சேர்த்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆஃப்டர் மார்க்கெட்டில் இது அனைத்தும் சாத்தியமே என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 10, 2024, 10:06 [IST]
English summary
22 years old scorpio converted into brand new scorpio classic
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X