செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு!

உங்கள் வாகனத்தின்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகனங்களின் உரிமையாளர்கள் பதற்றத்தில் உரைந்துள்ளனர். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு!

வாகன பிரியர்கள் தங்களின் வாகனம் சாலையில் செல்லும்போது, தனித்துவமாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக சில விநோதமான செயலில் ஈடுபடுகின்றனர்.

அந்தவகையில், வாகனத்திற்கு அடர்த்தியான வண்ணம் கொடுப்பது, மின் விளக்குகள் பொருத்துவது மற்றும் ஸ்டிக்கரிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் அவர்களில் ஈடுபடுகின்றனர்.

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு!

இதில், பேன்சி நம்பர் பிளேட்டும் ஒன்று. பேன்சி நம்பர் பிளேட் என்பது, அரசு கொடுக்கும் பிரத்யேக வாகன பதிவெண்ணை சிறப்பு எழுத்துக்காளால் வடிவமைத்து, மற்றவர் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் மாற்றுவதாகும்.

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு!

உதாரணமாக, 8055 என்ற எண்ணை ஆங்கிளத்தில் பாஸ் (BOSS) என எழுதுவதாகும். அதேபோன்று, ஆங்கில எண்களை உள்ளூர் மொழிக்கு மாற்றி எழுதுகின்றனர். உதாரணமாக, 1234 என்பதை தமிழில் கஉஙச என மாற்றியமைக்கின்றனர்.

இதுபோன்று செய்வது மோட்டார் வாகன சட்டம் பிரிவு 51ன் படி குற்றமாகும்.

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு!

இந்த நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை நகர போலீஸார் இதுபோன்ற பேன்சி எண்களைப் பொருத்தியிருந்த வாகனங்கள்மீது நடவடிக்கை மேற்கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை தற்போது வரை நீடித்து வருகின்றது. இதில், இதுவரை 2,272 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு!

இந்நிலையில், கடந்த திங்களன்று இவர்கள் அனைவருக்கும் மும்பை போக்குவரத்துத்துறை சார்பில் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதில், உங்கள் வாகனத்தில் முறையற்ற பேன்சி எண்கள் அடங்கிய நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருந்த காரணத்தால், அபராதச் செல்லாண் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை நீங்கள் விரைவில் மாற்றி விடுவீர்கள் என நம்புகின்றோம். இல்லையெனில், மீண்டும் இதேபோன்று நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு!

அரசு விதியின்படி, எண்கள் மிகவும் தெளிவாக கருப்பு வண்ண எழுத்துக்களில், வெள்ளை நிற பிளேட்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதனை பல வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதே இல்லை இதன்காரணமாக இதுபோன்ற சட்ட சிக்கலில் பெரும்பாலானோர் சிக்கி தவிக்கின்றனர்.

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு!

அதேபோன்று, பலர் நம்பர் பிளேட்டுகளில் புகைப்படம் அல்லது வசனத்தை சேர்த்து ஓட்டுகின்றனர். இதில், பெரும்பாலான இடத்தை பதிவெண்களுக்கு பதிலாக மற்றவைக்கே பயன்படுத்துகின்றனர். இதனால், பதிவெண்களின் அளவு குறைந்து, கண்களுக்கு எளிதில் புலப்படாத நிலையை அடைகின்றன.

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு!

ஆகையால், இதுபோன்ற சூழலை தவிர்க்கும்விதமாக, மும்பை நகர போலீஸார் அண்மைக் காலங்களாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்காரணமாகவே, இத்தகைய அளவிலான வாகன ஓட்டிகள் தற்போது சிக்கியுள்ளனர்.

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு!

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நகரத்தின் சாலைகளில், இதுபோன்று பேன்சி எழுத்துக்களைக் கொண்ட வாகனங்கள் சுற்றித்திரிவதை நம்மால் காண முடிகின்றது. அதில் பெரும்பாலான எண்கள் மராத்தி எழுத்துகளை அடங்கியவையாக இருக்கின்றன. உதாரணமாக, 4141 என்ற எண்ணிற்கு பதிலாக டாடா (DADA) என மராத்தியில் எழுதுகின்றனர். அதேபோன்று, 2124 என்ற எழுத்தை ஷரத் (Sharad) என்றும் 4912 என்ற எழுத்தை (Pawar) என்றும் எழுதுகின்றனர்" என்றார்.

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு!

மேலும் பேசிய அவர், "மராத்தி எழுத்துகளைப் போன்று ஆங்கிலத்தில் எழுதும் எழுத்துக்களை பேன்சி லெட்டர்களில் எழுதுகின்றனர். அவை வித்தியாசமானதாக காணப்படுவதால், அவற்றை இனம் காண்பதில் சிக்கல் ஏற்படுகின்றது. அது, பல முறைகேட்டை அரங்கேற்ற வழிவகுக்கின்றது" என தெரிவித்தார்.

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு!

முக்கியமாக, இதுபோன்ற எண்களை அடங்கிய வாகனங்களை இரவு நேரத்தில் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியால் வாகன உரிமையாளர்கள் பதற்றம்: 2,275 பேர் மீது வழக்கு பதிவு!

மேலும் பேசிய அவர், "பேன்சி எண்ணை பொருந்திய கார் ஒன்று அதிவேகமாக காவலர்களின் இரவு நேர தணிக்கையில் நிறுத்தாமல் செல்கின்றது என்றால் அவற்றை எப்படி நம்மால் இனங்காண முடியும். அதனை காவலர்கள் பதிவு செய்வதற்குள், அந்த வாகனம் அங்கிருந்து பறந்து சென்றுவிடுகின்றது. ஆகையால், பல முறைகேடுகள் அரங்கேற இது வழி வகுக்கின்றது" என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 21, 2019, 11:06 [IST]
English summary
2,275 Case Register For Fancy Number Plates. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+