23 வயசுலையே இந்த காரை வாங்கிட்டாரா! இந்த 2கே கிட்ஸ் நம்ப 90ஸ் கிட்ஸை ரொம்ப வெறுப்பேத்துறாங்கப்பா!

சூப்பர் கார் (Supercar) காதலர்களின் பிரியமான கார் மாடலாக லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan) இருக்கின்றது. மேலும், பலருக்கு கனவு வாகனமாகவும் லம்போர்கினி ஹூராகேன் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய காரையே இந்தியாவைச் சேர்ந்த வெறும் 23 வயது மட்டுமே ஆன இளைஞர் ஒருவர் வாங்கி இருக்கின்றார்.

மிருதுல் எனும் இளைஞரே அந்த காரை வாங்கியவர் ஆவார். இந்த காரை மிருதுல் வாங்கியதனால் இந்தியாவின் மிகவும் இளம் வயது கொண்ட லம்போர்கினி ஹூராகேன் கார் உரிமையாளர் என்கிற புகழை அவர் அடைந்திருக்கின்றார். இந்த காரை அவர் யூஸ்டு கார் மார்க்கெட் (Used Car Market)-இல் இருந்து வாங்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Lamborghini huracan

அதாவது, மிருதுல் வாங்கி இருக்கும் லம்போர்கினி ஹூராகேன் செகண்ட் ஹேண்ட் வாகனம் ஆகும். அது பாண்டிச்சேரி பதிவெண்ணைக் கொண்டிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது. திடீரென முடிவெடுத்து வாங்கப்பட்ட கார் மாடலே லம்போர்கினி ஹூராகேன் என மிருதுல் தெரிவித்து இருக்கின்றார். முன்னாடி நாள் யோசித்து மறு நாள் வாங்கப்பட்டது என்கிற ரகசியத்தையும் அவர் வெளியிட்டு இருக்கின்றார்.

மிருதுல்லின் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு நிறைந்த குடும்பம் என கூறப்படுகின்றது. இதனால்தான் அவரால் லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரை மிக சுலபமாக வாங்க முடிந்திருக்கின்றது. இந்த லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரின் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 3 கோடிக்கும் ஆகும்.

Lamborghini huracan 23 youngest owner

புதிதாக வாங்க வேண்டும் என்றால் ரூ. 4 கோடிக்கும் அதிகமாக செலவிட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய அதிக விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே மிக அரிதாக அந்த கார் மாடல் சாலையில் காட்சி தந்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய விலை உயர்ந்த காரையே செகண்ட் ஹேண்ட் சந்தையில் சற்று மலிவான விலையில் வாங்கி இருக்கின்றார்.

இதன் டயர்களை சமீபத்திலேயே அவர்கள் மாற்றியதாக கூறப்படுகின்றது. டயர்களை மாற்ற மட்டும் 2 லட்சம் செலவாகுமாம். இதேபோல், ஒரு முறை சர்வீஸ் விட்டால் நான்கு லட்ச ரூபாய் முதல் 5 ரூபாய் வரை செலவாகும் என்று அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அடித்தட்டு மக்களின் இரண்டு ஆண்டு வருமானம் இதுவாகும்.

இதை வைத்து பார்க்கையில் அந்த காரை வாாங்குவதை விட அதை மெயின்டெயின் செய்வது மிகவும் காஸ்ட்லியானதாக இருக்கும் என தெரிகின்றது. அதேவேளையில், மைலேஜையும் இது பெரிய அளவில் முழுமையாக டேங்க் ஃபுல் செய்தாலே 260 கிமீ தூரம் வரை மட்டுமே அதில் பயணிக்க முடியும்.

எனவேதான் இந்த காரை பலர் வெறும் கனவு வாகனமாக மட்டுமே வைத்திருக்கின்றனர். 5.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் வி10 எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 602 பிஎச்பி மற்றும் 560 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

மேலும், இதனால் வெறும் 3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய அதிக வேகத்தில் பயணிக்கும் சூப்பர் காரையே 23 வயது மட்டுமே கொண்ட இளைஞர் தற்போது வாங்கி இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சூப்பர் கார்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு சமீப காலமாக பலமடங்கு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதற்கு சான்றாக சூப்பர் கார் விற்பனை புள்ளி விபரமும் அமைந்திருக்கின்றன. குறிப்பாக திரைப் பிரபலங்கள் அதிகளவில் சூப்பர் கார்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அதேவேளையில், தொழிலதிபர்களும் நாங்கள் மட்டும் என்ன குறைச்சலா என கூறும் வகையில் அவர்களும் அதிகளவில் சூப்பர் கார்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 11, 2024, 15:55 [IST]
English summary
23 year old buys lamborghini huracan super car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+