பஸ் டிரைவராக உருவெடுத்த 24 வயது பெண் மெக்கானிக்கல் இன்ஜினியர்... வியக்க வைக்கும் சாதனை பயணம்

24 வயது பெண் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர் பஸ் டிரைவராக உருவெடுத்துள்ளார். வியக்க வைக்கும் அவரது சாதனை பயணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஸ் டிரைவராக உருவெடுத்த 24 வயது பெண் மெக்கானிக்கல் இன்ஜினியர்... வியக்க வைக்கும் சாதனை பயணம்

கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை பெண்கள் தற்போது அதிகளவில் ஓட்ட தொடங்கி விட்டனர். நகர சாலைகளில் வாகனம் ஓட்டும் பெண்களை நம்மால் எளிதாக பார்க்க முடிகிறது. ஆனால் கனரக வாகனங்கள் என வந்து விட்டால், பெண் டிரைவர்களை காண்பது என்பது இன்றளவும் மிகவும் அரிதான ஒரு விஷயமாகவே உள்ளது.

பஸ் டிரைவராக உருவெடுத்த 24 வயது பெண் மெக்கானிக்கல் இன்ஜினியர்... வியக்க வைக்கும் சாதனை பயணம்

கேப் உள்ளிட்ட கமர்ஷியல் வாகனங்களை இயக்கும் பெண் டிரைவர்களும் இருக்கவே செய்கின்றனர். ஆனால் பஸ் மற்றும் லாரி போன்ற கனரக வாகனங்களை இயக்குவது கடினம். எனவேதான் இத்தகைய வாகனங்களில் பெண் டிரைவர்களை பார்க்க முடிவதில்லை. ஆனால் இந்த வழக்கத்தை உடைத்து எறிந்துள்ளார் பிரதிக்ஸா தாஸ்.

பஸ் டிரைவராக உருவெடுத்த 24 வயது பெண் மெக்கானிக்கல் இன்ஜினியர்... வியக்க வைக்கும் சாதனை பயணம்

மும்பையை சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரான பிரதிக்ஸா தாஸ் பஸ் டிரைவராக உருவெடுத்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் மலாடு பகுதியில் உள்ள தாகூர் கல்லூரியில் பயின்ற பிரதிக்ஸா தாஸ் சமீபத்தில்தான் மெக்கானிக்கல் இன்ஜினியராக தேர்ச்சி பெற்றுள்ளார். பிரதிக்ஸா தாசுக்கு தற்போது 24 வயதாகிறது.

பஸ் டிரைவராக உருவெடுத்த 24 வயது பெண் மெக்கானிக்கல் இன்ஜினியர்... வியக்க வைக்கும் சாதனை பயணம்

மும்பை நகரில் பேருந்து சேவைகளை இயக்கி கொண்டுள்ள பெஸ்ட் குழுமத்தில், (Brihanmumbai Electric Supply and Transport - BEST) பிரதிக்ஸா தாஸ் டிரைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 24 வயது மட்டுமே நிரம்பியவர்கள் என்ன செய்வார்கள்? நண்பர்களுடன் ஷாப்பிங் செல்வார்கள், திரைப்படத்திற்கு செல்வார்கள். அவை அனைத்தையும் பிரதிக்ஸா தாசும் செய்கிறார்.

பஸ் டிரைவராக உருவெடுத்த 24 வயது பெண் மெக்கானிக்கல் இன்ஜினியர்... வியக்க வைக்கும் சாதனை பயணம்

ஆனால் அவர்களுக்கும் பிரதிக்ஸா தாசுக்கும் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம், போக்குவரத்து நெரிசல் நிறைந்த மும்பை நகர சாலைகளில், சிகப்பு நிற 6 டன் பஸ்ஸை இயக்குவதுதான். பிரதிக்ஸா தாஸ்தான் மும்பையின் முதல் பெண் பஸ் டிரைவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த நேர்காணலில், கனரக வாகனங்களை இயக்குவதில் தனக்கு உள்ள ஆர்வத்தை பிரதிக்ஸா தாஸ் பகிர்ந்து கொண்டுள்ளார். கனரக வாகனங்களை இயக்குவதில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்ற ஆர்வம் தனக்கு இருந்ததாகவும் பிரதிக்ஸா தாஸ் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் பிரதிக்ஸா தாஸ் மோட்டார்சைக்கிள்களை இயக்க தொடங்கியுள்ளார்.

பஸ் டிரைவராக உருவெடுத்த 24 வயது பெண் மெக்கானிக்கல் இன்ஜினியர்... வியக்க வைக்கும் சாதனை பயணம்

அதன்பின் படிப்படியாக கார்களையும் அவர் ஓட்ட தொடங்கினார். தற்போது பஸ் மற்றும் லாரிகளை இயக்குவதிலும் கை தேர்ந்து விட்டார் பிரதிக்ஸா தாஸ். பிரதிக்ஸா தாஸ் மிக இளம் வயதிலேயே மோட்டார்சைக்கிள்களை ஓட்ட பழகி விட்டார். பிரதிக்ஸா தாஸ் 8ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது, வெறும் இரண்டே நாட்களில் பைக்கை ஓட்ட கற்று கொண்டார். இது அவரது குடும்பத்தினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பஸ் டிரைவராக உருவெடுத்த 24 வயது பெண் மெக்கானிக்கல் இன்ஜினியர்... வியக்க வைக்கும் சாதனை பயணம்

தற்போது பஸ் டிரைவராக உருவெடுத்து அனைவரது புருவங்களையும் உயர்த்தியுள்ளார் பிரதிக்ஸா தாஸ். ஆனால் இந்த வேலை அவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை. இது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் வேலை. உடன் பணியாற்றும் சில ஆண் ஊழியர்களிடம் இருந்து எதிர்மறையான விமர்சனங்களையும் பிரதிக்ஸா தாஸ் பெற்றுள்ளார்.

ஒரு சிலர் பிரதிக்ஸா தாஸின் உயரம் தொடர்பாகவும் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். உயரம் குறைவாக இருந்து கொண்டு இவ்வளவு பெரிய வாகனத்தை உன்னால் இயக்க முடியுமா? என்பது போன்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். அதே சமயம் பிரதிக்ஸா தாஸின் பஸ்ஸில் வருபவர்களோ, அவரை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

பஸ் டிரைவராக உருவெடுத்த 24 வயது பெண் மெக்கானிக்கல் இன்ஜினியர்... வியக்க வைக்கும் சாதனை பயணம்

ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் வேலையில் மட்டும் முழு கவனம் செலுத்தி வருகிறார் பிரதிக்ஸா தாஸ். ஆரம்பத்தில் பஸ்ஸை திருப்புவதிலும், லேன் மாறுவதிலும் பிரதிக்ஸா தாஸ் சில சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். ஆனால் தற்போது அனைத்திலும் அவர் நிபுணத்துவம் பெற்று விட்டார் என்றே சொல்லலாம்.

பிரதிக்ஸா தாஸ் மோட்டார்சைக்கிள் ரேஸர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 2019 ஆசியா ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிப்பிலும் அவர் பங்கேற்றுள்ளார். ஹோண்டா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களின் பல்வேறு ரேஸ்களிலும் அவர் கலந்து கொண்டுள்ளார். கடந்த காலங்களில் அவர் இரண்டு முறை டிவிஎஸ் ரேஸிங் சாம்பியன்ஷிப் டிராபிகளையும் வென்றுள்ளார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Meet 24 Year old Pratiksha Das Who Is Mumbai’s First Female Bus Driver. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X