ஸ்பெக்டர் படத்தில் ரூ.240 கோடி மதிப்பிலான அஸ்டன் மார்ட்டின் கார்கள் தகர்ப்பு!

By Saravana

ஜேம்ஸ்பாண்ட் துப்பறியும் கதை வரிசையில், புதிய ஸ்பெக்டர் திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்து வருகிறார்.

மேலும், ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஹீரோவுக்கு இணையான முக்கியத்துவத்தை கார்களும், அதன் சேஸிங் காட்சிகளும் பெற்று வருகின்றன. அதேபோன்று, புதிய ஸ்பெக்டர் படத்திலும் ஏராளமான ஸ்போர்ட்ஸ் கார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில், இந்த படத்திற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேகமான 7 அஸ்டன் மார்ட்டின் கார்களை ஒரே காட்சிக்காக தகர்த்துள்ளனர்.

பிரத்யேக மாடல்

பிரத்யேக மாடல்

ஸ்பெக்டர் சினிமாவுக்காக அஸ்டன் மார்ட்டின் டிபி10 கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தம் 10 கார்கள் தயாரிக்கப்பட்டன. அதில், 7 கார்களை காலி செய்துவிட்டனர்.

இஜெக்டர் இருக்கை

இஜெக்டர் இருக்கை

51 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த கோல்டுஃபிங்கர் ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு பின்னர், இந்த படத்தில் பயன்படுத்தப்படும் அஸ்டன் மார்ட்டின் கார்களில் இஜெக்டர் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ள

 மதிப்பு

மதிப்பு

ரோம் நகரில் நடந்த கார் சேஸிங் காட்சியின் இறுதியில், 7 கார்களை வெடிவைத்து தகர்த்துவிட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.244 கோடி.

காரின் சிறப்புகள்

காரின் சிறப்புகள்

அஸ்டன் மார்ட்டின் விஎச் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இந்த டிபி10 கார்களில் வாண்டேஜ் கார்களில் பயன்படுத்தப்படும் 4.7 லிட்டர் வி8 எஞ்சின்தான் பொருத்தப்பட்டது. ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காகவே தயாரிக்கப்பட்ட இந்த கார்கள் விற்பனைக்கு வந்தால் வாங்கலாம் என்று சில கோடீஸ்வர ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், வெடிவைத்து தகர்க்கப்பட்ட தகவல் அஸ்டன் மார்ட்டின் ரசிகர்களின் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரொம்ப அதிகம்

ரொம்ப அதிகம்

உலக சினிமா வரலாற்றில், ஒரு காட்சிக்காக அதிக செலவு செய்யப்பட்டது இதுதான் முதல்முறை என்று கருதப்படுகிறது.

ரிலீஸ்

ரிலீஸ்

இந்த மாதம் 26ந் தேதி இங்கிலாந்திலும், அடுத்த மாதம் 6ந் தேதி அமெரிக்காவிலும் ஸ்பெக்டர் படம் திரைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 24வது படமாகவும், டேனியல் கிரேக் ஹீரோவாக நடித்திருக்கும் 4வது ஜேம்ஸ்பாண்ட் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
According to reports, 240 Crore Worth Aston Martin Cars destroyed in Spectre Cinema.
Story first published: Thursday, October 1, 2015, 13:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X