என்னங்க சொல்றீங்க... இந்த 25 ஏர்போர்ட்ல நைட் ஒரு விமானம் கூட தரையிறங்காதா? என்ன காரணம் தெரியுமா?
இந்தியாவில் உள்ள 25 விமான நிலையங்களில் இரவு நேரத்தில் விமானத்தைத் தரையிறக்கும் வசதியில்லை என்ற தகவல் சிவில் ஏவியேஷன் துறை மூலம் ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் விமான போக்குவரத்து பெரிய அளவில் கட்டுமான வசதிகள் பெறாமல் இருக்கிறது. தற்போது வரை பெரிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் உலக நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான விமானங்கள் வந்து செல்கின்றன.

முக்கிய நகரமான டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, ஆகிய நகரங்களைத் தாண்டி அடுத்த காட்டமாக மற்ற மாநிலங்களில் தலை நகர்ப் பகுதியில் உள்ள விமான நிலையங்களும் பிசியாக உள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களைக் கையாண்டு வருகின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக டயர் 2 நகரங்களாகக் கருதப்படும் வளர்ந்து வரும் நகரங்களில் சில நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட விமான நிலையங்கள் மட்டும் பிஸியாக இருக்கிறது. மற்ற விமான நிலையங்கள் எல்லாம் பெயருக்கு ஒரு சில விமானங்களை மட்டுமே கையாண்டு வருகிறது.

உதாரணமாக மதுரை போன்ற விமான நிலையங்களில் நேரடியாக வெளிநாட்டிற்குச் செல்லும் விமானங்கள் கையாளப்படுகிறது. ஆனால் தூத்துக்குடி விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் மட்டுமே கையாளப்படுகிறது. இது போன்ற சிறிய விமான நிலையங்களும் நாடு முழுவதும் செயல்பாட்டிலிருந்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய சிவில் ஏவியேசன் துறை சமீபத்தில் பாராளுமன்றத்தில் அளித்த பதில் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இரவு நேர லேண்டிங் குறித்து எம்பி ஒருவர் கேட்ட கேள்விக்கு அந்த துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்ள 25 விமான நிலையங்களில் இரவு நேரத்தில் விமானங்களை லேண்டிங் செய்யும் வசதியே இல்லாமல் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இது பலர் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இது குறித்து அந்த துறை அளித்த பதிலில் விமான நிலையங்களில் உள்ள வசதிகளை எல்லாம் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தான் செய்து கொண்டிருக்கிறது. இந்த வசதிகள் எல்லாம் தேவைகளுக்கு ஏற்கனவே செய்யப்படுகின்றனர். குறிப்பிட்ட விமான நிலையத்தில் உள்ள டிராபிக், தேவையான இட வசதி, உள்ளிட்ட ல விஷயங்களை மனதில் வைத்து முடிவு செய்கின்றனர்.

தற்போது இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தில் குளு, தர்மசாலா, சிம்லா உ.பி மாநிலம் குஷிநகர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஷ்பூர், ஜக்தல்பூர், கர்நாடக மாநிலத்தின் காலபுராக்கி, மகாராஷ்டிரா மாநிலத்தின் கோல்ஹாபூர், சிந்து துர்கா, பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா ஆகிய விமான நிலையங்களில் இரவு நேரத்தில் விமானம் தரையிறங்க லைட் வசதிகள் செய்யப்படாமல் இருக்கிறது.

மேலும் இது குறித்து சிவில் ஏவியேஷன் துறை அளித்த பதிலில் இந்தியாவில் மொத்தம் 100 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதில் இரவு நேர லைட்டிங் வசதி இல்லாத விமான நிலையங்கள் என்றால் அது மிகவும் குறைவான பயணிகளைக் கையாளும் விமான நிலையமாக இருக்கும். இந்த வசதி அந்த விமான நிலையங்களில் செய்யப்படாததற்கு முக்கியமான காரணம் விமான நிறுவனங்கள் தான் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏதாவது விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட விமான நிலையங்களுக்கு இரவு நேர விமானச் சேவையைத் துவங்க விருப்பம் தெரிவித்தால் ஏர்போர்ட் அத்தாரிட்டி குறிப்பிட்ட விமான நிலையங்களுக்கு இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்கும் லைட் வசதி செய்து கொடுக்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்தியா வேகமாக முன்னேறி வரும் நாடு என நாம் எல்லோரும் கருதி வரும் நிலையில் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களில் 4ல் 1 பங்கு விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானத்தைத் தரையிறக்கும் வசதியே இல்லை என்ற தகவல் நம்மை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஆனால் இந்த விமான நிலையங்களில் இதற்கான தேவைகள் இல்லை என்பது இதில் ஒரு தெளிவைக் குறிக்கிறது. இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








