யமுனா விரைவு சாலையில் 25 கார்கள் மோதி விபத்து!
டெல்லி: யமுனா விரைவு சாலையில் இன்று காலை 25 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. இதில், பலர் படுகாயமடந்தனர். வட மாநிலங்களில் அதிகாலை நேரங்களில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை கடும் பனி மூட்டம் காரணமாக யமுனா விரைவுசாலையில் 25 கார்கள் சங்கிலித் தொடர் போல் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கின. இதில், பலர் காயமடந்ததனர்.
இதுபோன்று கடும் பனி மூட்டம் நிலவும் வேளையில் பயணத்தை தவிர்ப்பது நலம். அல்லது முகப்பு விளக்குகள் மற்றும் பனி விளக்குகளை ஒளிரவிட்டு மிகவும் எச்சரிக்கையாக மிதமான வேகத்தில் செல்வதும் அவசியம்.
<center><center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/HdEq_0zXlV0?" frameborder="0" allowfullscreen></iframe></center></center>


Click it and Unblock the Notifications








