ஜப்பான் புல்லட் ரயில் தோத்துப்போகும்! 250 கிமீ வேகத்தில் பயணிக்கும் ரயிலை தயாரிக்கும் சென்னை ஐசிஎஃப்!
சென்னை ஐசிஎஃப் ஆலையில் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் புதிய ரயில் ஒன்றை வடிவமைக்க ஆர்டர் வந்துள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகம் தற்போது இதை அதிகாரப்பூர்வமாக சென்னை ஐசிஎஃப் ஆலைக்கு உத்தரவாக பிறப்பித்துள்ளது. ஏற்கனவே வந்தே பாரத் ரயில்கள் 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ரயில்களாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் ரயிலை வடிவமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் இந்த ரயில் தயாராகும் என கூறப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னை ரயில் கட்டுமானத்திற்கு மிகவும் பெயர் பெற்ற ஆலையாக இருக்கிறது. இந்த ஆலையில் தான் இந்தியாவில் மக்கள் பலரால் விரும்பப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு அனுப்பப்படுகின்றன. சர்வதேச தரத்தில் புல்லட் ரயிலுக்கு சமமாக இந்த வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஏற்கனவே இயங்கி வரும் ரயில்கள் எல்லாம் அதிகபட்சம் 150 கிலோமீட்டர் வேகத்தில் தான் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் நிலையில், சென்னை ஐசிஎஃப் நிர்வாகம் வந்தே பாரத் ரயிலை 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைத்திருந்தது. இது மக்கள் பலரை ஈர்த்தது. இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும்போது ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த ரயிலை விட மிக வேகமாக பயணிக்கும் என்பதால் பயண நேரம் குறைந்தது.
மக்கள் பலர் இந்த ரயிலை விரும்பிய நிலையில், தற்போது மத்திய ரயில்வே அமைச்சகம் சென்னை ஐசிஎஃப் ஆலைக்கு புதிய ஆர்டர் ஒன்றை அனுப்பி உள்ளது. அதன்படி அடுத்த ஓராண்டிற்குள் சென்னை ஐசிஎஃப் ஆலை இரண்டு புதிய ரயில்களை தயாரிக்க வேண்டும். அந்த ரயில்கள் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் அதே பிளாட்ஃபார்மில் தான் இந்த ரயிலையும் தயாரிக்க ஐசிஎஃப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதில் மொத்தம் எட்டு பெட்டிகள் இடம் பெற உள்ளன கடந்த ஓர் ஆண்டுகளாகவே இதற்கான திட்டங்கள் எல்லாம் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வந்துள்ளது. இந்நிலையில் இதற்கான பணிகளை விரைவில் ஐசிஎஃப் ஆலையில் துவங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த புதிய இரண்டு ரயில்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படும். பிராட்கேஜ் அமைப்பில் இல்லாமல் ஸ்டாண்டர்ட் கேஜ் அமைப்பில் தான் உருவாக்கப்படுகின்றன. இதற்காக கடந்த ஓராண்டுக்கு முன்பே ராஜஸ்தான் பகுதியில் ஸ்டாண்டர்ட் கேஜ் அகலத்தில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு அதை சோதனைக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.

சர்வதேச அளவில் ஸ்டாண்டர்ட் கேஜ் அகலத்தில் உள்ள தண்டவாளங்கள் தான் அதிகம் இருக்கின்றன. இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த ரயிலை வெளிநாட்டு ரயில்வே பயன்பாட்டுக்காக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் அது ஸ்டாண்டர்ட் கேஜ் அகலத்தில் தான் இருக்க வேண்டும். அதற்காக தான் இந்த ரயிலை இப்படியாக தயாரிக்கிறார்கள்.
இந்த ரயில் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டால், இந்த இரண்டு ரயிலும் வெளிநாடுகளுக்கு தான் ஏற்றுமதி செய்யப்படும். இது போல தான் வந்தே பாரத் ரயிலும் முதன்முதலாக தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பின் வெளிநாட்டுக்கு தான் டிரையின் 18 என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
அதன் பின்னர் அதே வடிவமைப்பை இந்திய ரயில் தண்டவாள அமைப்பிற்கு ஏற்றார் போல் மாற்றி வடிவமைத்து இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கலாம். வந்தே பாரத் ரயிலும், டிரெயின் 18 என்ற பெயரில் இப்படியாக தான் வடிவமைக்கப்பட்டு பின்னர் வந்தே பாரத் ரயிலாக மாறியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முழுமையாக இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் ரயிலை வெற்றிகரமாக வடிவமைத்து விட்டால் இந்த ரயில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படும் உலகில் புல்லட் ரயில்கள் தான் மிக வேகமாக பயணிக்கும் ரயில்களாக பார்க்கப்படும் நிலையில், கிட்டத்தட்ட புல்லட் ரயிலுக்கு சமமான வேகத்தில் பயணிக்கும் ரயிலாக இது உருவாக்கப்படும்.


Click it and Unblock the Notifications









