சூப்பர்... 7 கோடி ரூபாய் காரை மனைவிக்கு பரிசளித்த கணவர்... எதற்காக என தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க...

7 கோடி ரூபாய் மதிப்புடைய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை கணவர் ஒருவர் அவரது மனைவிக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதற்கான காரணம் தெரிந்தால் நீங்கள் பொறாமைப்படக்கூடும்.

சூப்பர்... 7 கோடி ரூபாய் காரை மனைவிக்கு பரிசளித்த கணவர்... எதற்காக என தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க...

நமது மனதுக்கு நெருக்கமானவர்கள் அளிக்கும் பரிசு எதுவாக இருந்தாலும், அது மிகுந்த மகிழ்ச்சியை நமக்கு கொடுக்கும். அதுவே விலை உயர்ந்த பரிசுகள் என்றால் அந்த மகிழ்ச்சி அப்படியே இரட்டிப்பாகும். அப்படி ஒரு மகிழ்ச்சி தற்போது ஏனி பிலிப்பிற்கு (Anie Phillip) கிடைத்துள்ளது. ஏனி பிலிப்பின் கணவர், அவருக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய கார் ஒன்றை தற்போது பரிசாக வழங்கியுள்ளார்.

சூப்பர்... 7 கோடி ரூபாய் காரை மனைவிக்கு பரிசளித்த கணவர்... எதற்காக என தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க...

கணவரிடம் இருந்து ஏனி பிலிப்பிற்கு பரிசாக கிடைத்திருப்பது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) கார் ஆகும். இது சூப்பர் லக்ஸரி எஸ்யூவி ரகத்தை (Super Luxury SUV) சேர்ந்த மிக விலை உயர்ந்த கார். ஏனி பிலிப்பும், அவரது கணவரும் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்தியர்கள் ஆவர். ஆனால் அவர்கள் தற்போது கனடாவின் வான்கூவர் நகரில் வசித்து வருகின்றனர்.

சூப்பர்... 7 கோடி ரூபாய் காரை மனைவிக்கு பரிசளித்த கணவர்... எதற்காக என தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க...

ஏனி பிலிப்பிற்கு அவரது கணவர் வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த காரின் இன்டீரியர் சிகப்பு நிற லெதர் மூலம் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. எனவே காண்பவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு, இந்த கார் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கிறது. ஏனி பிலிப்பிற்கு இப்படியொரு பரிசு கிடைத்திருப்பதற்கான காரணம் சுவாரஸ்யமானது.

சூப்பர்... 7 கோடி ரூபாய் காரை மனைவிக்கு பரிசளித்த கணவர்... எதற்காக என தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க...

பொதுவாக திருமண நாட்கள் என்றாலே சிறப்பு வாய்ந்தவைதான். அதுவும் 25வது திருமண நாள் என்றால், சொல்லவே வேண்டாம். இந்த 25வது திருமண நாளை முன்னிட்டுதான் ஏனி பிலிப்பிற்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் பரிசாக கிடைத்துள்ளது. இதன் மூலமாக வட அமெரிக்க கண்டத்தில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை சொந்தமாக்கிய முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

சூப்பர்... 7 கோடி ரூபாய் காரை மனைவிக்கு பரிசளித்த கணவர்... எதற்காக என தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க...

ஏனி பிலிப்பும், அவரது கணவரும் கடந்த மார்ச் 30ம் தேதி தங்களது 25வது திருமண நாளை கொண்டாடினர். அன்றைய தினம்தான் இந்த தம்பதியருக்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஏனி பிலிப்பும், அவரது கணவரும் கார்களை அதிகம் நேசிக்க கூடியவர்கள். அவர்களிடம் இருக்கும் விலை உயர்ந்த கார்கள் மூலமாக அது தெரிய வருகிறது.

சூப்பர்... 7 கோடி ரூபாய் காரை மனைவிக்கு பரிசளித்த கணவர்... எதற்காக என தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க...

ஏனி பிலிப்பும், அவரது கணவரும் சொந்தமாக்கும் முதல் சொகுசு கார் இது கிடையாது. ஆனால் இதுதான் அவர்களின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கார். இந்தியாவிலும், கனடாவிலும் அவர்களிடம் ஏராளமான சொகுசு கார்கள் இருக்கின்றன. ஏனி பிலிப் குடும்பத்தினரிடம் லக்ஸரி பேக்கேஜ் உடன் 2005 ஹம்மர் எச்2 கார் தற்போது இருக்கிறது.

சூப்பர்... 7 கோடி ரூபாய் காரை மனைவிக்கு பரிசளித்த கணவர்... எதற்காக என தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க...

மேலும் 2016 போர்ஷே கேயென் மற்றும் 2019 லெக்ஸஸ் என்எக்ஸ் (எஃப்-ஸ்போர்ட் பேக்கேஜ்) ஆகிய கார்களும் உள்ளன. தற்போது அவர்களது குடும்பத்தினரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரும் இணைந்திருக்கிறது. அதே சமயம் இந்தியாவில் அவர்களிடம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்350 எஸ்யூவி கார் இருக்கிறது. இந்தியா வரும்போதெல்லாம் அந்த காரை அவர்கள் பயன்படுத்தி கொள்வார்கள்.

சூப்பர்... 7 கோடி ரூபாய் காரை மனைவிக்கு பரிசளித்த கணவர்... எதற்காக என தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க...

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில், 6.5 லிட்டர் வி12 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 560 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்திய ரூபாய் மதிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை எவ்வளவு தெரியுமா? 6.95 கோடி ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி). உலக கோடீஸ்வரர்கள் பலரையும் கவர்ந்திழுக்கும் காராக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் திகழ்கிறது.

Image Courtesy: Roshan Philip/Facebook

More from DriveSpark

Article Published On: Thursday, April 9, 2020, 20:50 [IST]
English summary
25th Wedding Anniversary - Husband Gifts Wife A Rolls Royce Cullinan Luxury SUV. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+