தமிழ்நாடு எங்கயோ போயிருச்சு! ஆனா குஜராத் இன்னும் கீழதான் இருக்கு! ஆதாரத்துடன் உண்மையை போட்டு ஒடச்சுட்டாங்க!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன. பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதுதான் இதற்கு காரணம். அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை (Crude Oil) இறக்குமதி செய்வதற்கு இந்தியா பெரும் தொகையை செலவிட்டு வருகிறது. இந்த செலவை குறைக்க வேண்டும் என்றால், இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுடைய பயன்பாடு அதிகரித்தாக வேண்டும்.

எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில், இந்தியா சமீப காலமாக தீவிரம் காட்டி கொண்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டுமென்றால், முதலில் போதுமான எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் (Public EV Charging Stations) இருக்க வேண்டும்.

Charging Station

இந்தியாவில் தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக 26,367 பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில், கர்நாடக மாநிலத்தில் மட்டும் 5,879 பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கின்றன. இந்தியாவிலேயே பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் அதிகளவில் இருக்க கூடிய மாநிலம் என்ற பெருமையை கர்நாடகா கொண்டுள்ளது.

அத்துடன் இந்தியாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது சார்ஜிங் ஸ்டேஷன்களை கொண்டுள்ள ஒரே மாநிலம் என்ற பெருமையையும் கர்நாடகா தன்வசம் வைத்துள்ளது. கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக இந்த பட்டியலில் 2வது இடத்தில் உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் 3,842 பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் மட்டுமே இருக்கின்றன.

Hyundai Charging Station

இந்த பட்டியலில் உத்தர பிரதேசம் 3வது இடத்தில் இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 2,113 பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்தியாவில் இந்த 3 மாநிலங்களில் மட்டுமே 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன. மற்ற மாநிலங்களில் பொது சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 8 மாநிலங்களில் மட்டுமே 1,000 அல்லது அதற்கும் அதிகமான பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் நாம் மேலே பார்த்த 3 மாநிலங்களும் அடங்கும். இதுதவிர டெல்லியில் 1,951 பொது சார்ஜிங் ஸ்டேஷன்களும், தமிழ்நாட்டில் 1,495 பொது சார்ஜிங் ஸ்டேஷன்களும், கேரளாவில் 1,288 பொது சார்ஜிங் ஸ்டேஷன்களும் உள்ளன.

மறுபக்கம் ராஜஸ்தானில் 1,285 பொது சார்ஜிங் ஸ்டேஷன்களும், குஜராத்தில் 1,008 பொது சார்ஜிங் ஸ்டேஷன்களும் இருக்கின்றன. ஆக மொத்தத்தில் இந்த 8 மாநிலங்கள் மட்டுமே ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான பொது சார்ஜிங் ஸ்டேஷன்களை கொண்டுள்ளன. அதே நேரத்தில் இந்தியாவின் 11 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பொது சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

அதாவது இந்த 11 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 50க்கும் குறைவான பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் மட்டுமே உள்ளன. அவை அருணாச்சல பிரதேசம் (44), மேகாலயா (43), புதுச்சேரி (42), நாகலாந்து (36), சண்டிகர் (14), மிசோரம் (13), சிக்கிம் (11), தாத்ரா நாகர் ஹாவேலி மற்றும் டையூ டாமன் (6), அந்தமான் நிக்கோபர் (4), லடாக் (1) மற்றும் லட்சத்தீவு (1) ஆகியவை ஆகும்.

இந்த விவரங்களை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பொது சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பொது சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அப்போது மட்டுமே ரேஞ்ச் பற்றிய கவலை மற்றும் பயம் இல்லாமல், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற மக்கள் முன்வருவார்கள் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, February 14, 2025, 18:12 [IST]
English summary
26367 public electric vehicle charging stations across india morth
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+