ரூ. 21,000க்கு வாங்கிய சுஸுகி சாமுராய் இவ்ளோ விலைக்கு போயிருக்கா?.. ஊரு முழுக்க இப்ப இத பற்றிதான் பேச்சு!
டிவிஎஸ் சுஸுகி சாமுராய் (TVS Suzuki Samurai), இந்த பைக்கை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற டூ-ஸ்ட்ரோக் பைக் மாடல்களில் ஒன்றாக சாமுராய் இருக்கின்றது. ஆர்எக்ஸ் 100 அளவிற்கு இல்லை என்றாலும், அதற்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு இணையான வரவேற்பை பெற்ற டூ-ஸ்ட்ரோக் வகை மோட்டார்சைக்கிள்களில் இதுவும் ஒன்றாகும்.
சில இருசக்கர வாகன காதலர்கள் மத்தியில் இந்த பைக்கிற்கு இப்போதும் டிமாண்ட் பலமாக உள்ளது. இந்த நிலையிலேயே பல ஆண்டுகள் பழைமையான டிவிஎஸ் சுஸுகி சாமுராய் பைக் ஒன்று மிக மிக அதிக விலைக்கு எக்ஸ்சேஞ்ஜ் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

41 ஆயிரம் ரூபாய்க்கே அந்த பைக் டிவிஎஸ் டீலர் ஒருவரால் எக்ஸ்சேஞ்ஜ் எடுக்கப்பட்டு இருக்கின்றது. இது இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது. நல்ல நிலையில் இருக்கும் யமஹா ஆர்எக்ஸ்100 பைக்கை சந்தையில் பெறுவது மிகவும் சுலபமான ஒன்றாக இருக்கின்றது.
அதேவேளையில், சுஸுகி சாமுராய் பைக்கை சூப்பரான பராமரிப்பு நிலையில் பெறுவது என்பது முற்றிலும் கடினமான ஓர் விஷயமாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே நல்ல நிலையில் பராமரிக்கப்பட்ட சுஸுகி சாமுராய் தற்போது யாரும் எதிர்பார்த்திராத மதிப்பில் டிவிஎஸ் டீலரால் எக்ஸ்சேஞ்ஜ் செய்யப்பட்டு இருக்கின்றது.
டீலர் பெரும் தொகைக்கு எக்ஸ்சேஞ்ஜ் எடுத்திருக்கும் அந்த பைக் 27 ஆண்டுகள் பழையது ஆகும். அதன் உண்மை விலையே ரூ. 21 ஆயிரம்தான் என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே உண்மை விலையைக் காட்டிலும் 99 சதவீதம் அதிக தொகைக்கு கேரளாவில் உள்ள டிவிஎஸ் டீலர் ஒருவர் அப்பைக்கை எக்ஸ்சேஞ்ஜ் செய்திருக்கின்றார்.
இதில் சுவாரஷ்யம் என்னவென்றால், எக்ஸ்சேஞ்ஜ் செய்யப்பட்டிருக்கும் அந்த சுஸுகி சாமுராய் பைக் அதே டீலரிடம் இருந்தே வாங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, அந்த மோட்டா்சைக்கிள் அங்கீகரிக்கப்பட்ட அந்த டீலர் சர்வீஸ் மையங்களில் வைத்து மட்டுமே சர்வீஸ் செய்யப்பட்டும் இருக்கின்றது. மேலும், சுஸுகி சாமுராய் பைக்கை பயன்படுத்தி வந்த அந்த நபர் இது நாள் வரையிலும், அந்த சாமுராய் பைக்கைத் தாண்டி வேறு எந்த பைக்கையும் பயன்படுத்தவில்லை.
இதுபோன்ற காரணங்களினாலேயே அதிக விலைக்கு அந்த மோட்டார்சைக்கிள் தற்போது எக்ஸ்சேஞ்ச் செய்யப்பட்டு இருக்கின்றது. தற்போது அவர் எந்த மோட்டார்சைக்கிளை வாங்கி இருக்கின்றார் என்பது துள்ளியமாக தெரியவில்லை. இருப்பினும், அவர் செலுத்திய ஆன்-ரோடு தொகையான ரூ. 21 ஆயிரத்தையும் தாண்டி ரூ. 41 ஆயிரத்திற்கு அந்த கார் எக்ஸ்சேஞ்ச் செய்யப்பட்டு இருக்கின்றது.
கேரள மாநிலத்தில் அரங்கேறி இருக்கும் இந்த நிகழ்வு ஒட்டுமொத்த இருசக்கர வாகன காதலர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. டிவிஎஸ் சுஸுகி சாமுராய் 1994 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கில் 98.2 சிசி திறன் கொண்ட 2-ஸ்ட்ரோக் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 7.5 பிஎச்பி பவரையும், 9.8 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு சில வாகனங்களுக்கு வாகன ஆர்வலர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் பழைமையான டூ-வீலர்களாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் யமஹா ஆர்எக்ஸ் 100 உள்ளிட்டவை இருக்கின்றன.
இவற்றிற்கு இப்போதும் மிக மிக அமோகமான வரேவற்பு நாட்டு இளைஞர்கள் மத்தியில் நிலவிக் கொண்டு இருக்கின்றது. நல்ல நிலையில் மெயின்டெயின் செய்யப்பட்டு இருக்கும் எனில் அந்த பைக்கிற்கு லட்ச ரூபாயைக் கொட்டிக் கொடுக்கவும் ஒரு சிலர் தயாராக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








