இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் இருக்கும் புத்திசாலித்தனமான வசதிகள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் வழங்கப்படும் புத்திசாலித்தனமான வசதிகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் இருக்கும் புத்திசாலித்தனமான வசதிகள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

இன்றைய காலகட்டத்தில் புதிய கார்களை வாங்குபவர்கள் வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். கார்களில் வழங்கப்பட்டுள்ள வசதிகளின் பட்டியல், அனுமர் வால் போல் நீண்டதாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. இதை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு இருக்கிறது.

இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் இருக்கும் புத்திசாலித்தனமான வசதிகள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

எனவே கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் வசதிகளை வாரி வழங்குகின்றன. இதில் சில வசதிகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. சில வசதிகள் தேவையற்றதாகவும் இருக்கின்றன. எனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் வழங்கப்படும், மிகவும் அவசியமான மற்றும் புத்திசாலித்தனமான வசதிகளை தேர்ந்து எடுத்து இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் இருக்கும் புத்திசாலித்தனமான வசதிகள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

இது சூப்பரான பாதுகாப்பு வசதி!

தற்போது நிறைய கார்களில் இந்த வசதி காணப்படுகிறது. இது மிகவும் அவசியமான பாதுகாப்பு வசதிகளில் ஒன்றாகும். எமர்ஜென்ஸி அஸிஸ்டன்ஸ் சிஸ்டம் (Emergency Assistance System) என்ற பெயரில் இந்த வசதி அழைக்கப்படுகிறது. இந்த வசதி உங்கள் காரில் இருந்தால் டேஷ்போர்டு அல்லது ஐஆர்விஎம் (IRVM)-ல் அதாவது உட்புற ரியர் வியூ மிரரில், SOS பட்டன் வழங்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் இருக்கும் புத்திசாலித்தனமான வசதிகள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

ஒருவேளை விபத்து நடைபெற்றதால், கார் உற்பத்தி நிறுவனத்தின் அவசர கால குழுவை, இந்த எமர்ஜென்ஸி அஸிஸ்டன்ஸ் சிஸ்டம் அழைக்கும். பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினரை அழைப்பார்கள். ஒரு சில கார்களில், பயணம் செய்பவர்கள் SOS பட்டனை அழுத்த வேண்டிய அவசியம் கூட இல்லை.

இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் இருக்கும் புத்திசாலித்தனமான வசதிகள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

கார் விபத்தில் சிக்கியுள்ளதை அதுவே கண்டறிந்து, கார் உற்பத்தி நிறுவனத்தின் அவசர கால குழுவிற்கு அதுவே தகவல் தெரிவித்து விடும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் வழங்கப்படும் புத்திசாலித்தனமான வசதிகள் இது மிக முக்கியமானது. தற்போது ஒரு சில கார்களில் மட்டுமே காணப்படும் இந்த வசதி, அனைத்து கார்களிலும் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் இருக்கும் புத்திசாலித்தனமான வசதிகள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

ஆட்டோமேட்டிக் ஹசார்டு லைட்கள்

ஹசார்டு லைட்கள் (Hazard Lights) மிகவும் முக்கியமானவை. குறிப்பாக இரவு நேரங்களில். ஹசார்டு லைட்கள் மூலம் நமக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. நீங்கள் பதற்றம் அல்லது ஏதோ ஒரு காரணத்தால் திடீரென பிரேக் பிடித்தால், உங்கள் காரின் பின்னால் இருப்பவருக்கு, நீங்கள் காரை 'ஸ்லோ' செய்கிறீர்கள் என்பது தெரியும். ஏனெனில் டெயில்லைட்கள் 'ஆன்' ஆகி விடும்.

இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் இருக்கும் புத்திசாலித்தனமான வசதிகள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

ஆனால் நீங்கள் எவ்வளவு விரைவாக காரை நிறுத்த போகிறீர்கள்? என்பது, உங்களுக்கு பின்னால் இருப்பவருக்கு தெரியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில் ஹசார்டு லைட்கள் 'ஆன்' ஆவது நல்லது. ஏனெனில் முன்னால் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு, உங்கள் பின்னால் வருபவர் விரைவாக 'ஸ்லோ' ஆகி விடுவார்கள். இதன் மூலம் விபத்து தவிர்க்கப்படும்.

இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் இருக்கும் புத்திசாலித்தனமான வசதிகள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

இன்று வரும் நிறைய கார்கள், பரப்பரப்பான அல்லது பதற்றமான சூழல்களில் பிரேக் பிடிப்பதை தானாக கண்டறிந்து, ஆட்டோமேட்டிக்காகவே ஹசார்டு லைட்களை 'ஆன்' செய்து விடுகின்றன. எனவே இந்த வசதியையும், நாம் புத்திசாலித்தனமான மற்றும் அவசியமான வசதிகளின் பட்டியலில் தாராளமாக சேர்க்கலாம்.

இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் இருக்கும் புத்திசாலித்தனமான வசதிகள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

கர்வ் கைடன்ஸ் (Curve Guidance)

மலை சாலைகளில் காரை ஓட்டும்போதும், பனி மிகுந்த சூழல்களில் காரை ஓட்டும்போதும் இந்த வசதி பெரிதும் உதவி செய்யும். முன்னால் வளைவு வரப்போகிறது என்றால், இந்த வசதி ஒலி எச்சரிக்கை மூலம் ஓட்டுனருக்கு தெரியப்படுத்தும். சில சமயங்களில் முன்னால் வளைவு உள்ளது என்பது நமக்கு தெரியாது. அப்படியான சூழல்களில் விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் இருக்கும் புத்திசாலித்தனமான வசதிகள்... எல்லாமே சூப்பரா இருக்கே!

எனவே இதுபோன்ற சூழல்களில் இந்த வசதி மிகவும் உதவிகரமாக இருக்கும். நேவிகேஷன் பயன்படுத்தப்படாமலேயே இந்த வசதி செயல்படும் என்பது முக்கியமான சிறப்பம்சம். இதுவும் உண்மையிலேயே புத்திசாலித்தனமான மற்றும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் இருக்க வேண்டிய வசதியாகும். ஆனால் ஒரு சில கார்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 11, 2022, 20:54 [IST]
English summary
3 clever features of indian cars
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+