மணிக்கு 105 கி.மீ வேகத்தில் செல்லும் புதிய தலைமுறை மின்சார ரயில்கள் சென்னையில் அறிமுகம்..!!

Written By:

சென்னை - திருமால்பூர் இடையே புதிய தலைமுறைக்கான மின்சார ரயில்கள் சேவை விரைவில் ஆரம்பமாகிறது. இதற்கான சோதனை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னைக்கு வரும் மும்முனை மின்சாரத்தில் இயங்கும் ரயில் சேவை

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், சென்னை கடற்கரை முதல் திருமால்பூர் இடையில் 3ம் கட்ட புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என அறிவித்துள்ளது.

சென்னைக்கு வரும் மும்முனை மின்சாரத்தில் இயங்கும் ரயில் சேவை

இதற்கான ரயில் பெட்டிகள் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, தற்போது சோதனை அடிப்படையில் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு வரும் மும்முனை மின்சாரத்தில் இயங்கும் ரயில் சேவை

இந்த சோதனை ஓட்டம் முழுமையாக முடிவடைந்த பின்பு, மக்கள் பயன்பாட்டிற்காக இந்த புதிய தலைமுறை மின்சார ரயில் சேவை அறிமுகமாகவுள்ளது.

சென்னைக்கு வரும் மும்முனை மின்சாரத்தில் இயங்கும் ரயில் சேவை

பல நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கட்டமைப்பாக இந்த புதிய ரயில்கள் இருக்கும். தவிர இதில் எண்ணற்ற தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
சென்னைக்கு வரும் மும்முனை மின்சாரத்தில் இயங்கும் ரயில் சேவை

அறிவிப்பின் வாயிலாகவே சென்னை வாசிகளை பெரிதும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ள இந்த புதிய ரயில்களின் கட்டமைப்பை பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

வேகக்கட்டுப்பாடு

வேகக்கட்டுப்பாடு

சென்னைக்காக அறிமுகமாகவுள்ள இந்த புதிய தலைமுறை மின்சார ரயில் அதிகப்பட்சமாக மணிக்கு 105 கி.மீ வேகத்தில் செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணிகளை ஏற்றிச்செல்ல சென்னை கடற்கரை தொடங்கி திருமால்பூர் வரை பல நிலையங்களில் நின்று தான் இந்த ரயில் செல்லும்.

சென்னைக்கு வரும் மும்முனை மின்சாரத்தில் இயங்கும் ரயில் சேவை

இதனால் ரயில் வேகமாக செல்வது பிரச்சனையாகுமா என்று கவலை வேண்டாம். அதற்காகவே விவிவிஎஃப் என்ற தொழில்நுட்பம் இந்த ரயிலில் உள்ளது.

கட்டுப்பாடு சிஸ்டங்கள்

கட்டுப்பாடு சிஸ்டங்கள்

விவிவிஎஃப் தொழில்நுட்பம் வேகத்தை கட்டுப்படுத்தி ரயிலிற்கு வழங்கும். இதன் காரணமாக இந்த புதிய தலைமுறை மின்சார ரயில் சுமூகமாக பயணத்தை வழங்கும்.

மும்முனை மின்சாரத்தில் ஓடக்கூடிய இந்த ரயில், இதர ரயில்களின் கட்டுப்பாட்டு சிஸ்டங்களையும் விவிவிஎஃப் கருவி மூலம் பதிவு செய்து வைத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிபிஎஸ் வசதி

ஜிபிஎஸ் வசதி

ரயிலின் தொடர் இயக்கத்தை கண்காணிக்க ஜிபிஎஸ் தொழில்நுட்பம் இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ளது. இது கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் இயங்கும்.

மேலும் எந்த நிலையத்தை ரயில் வந்துடைந்துள்ளது என்பதை பயணிகளுக்கு தெரிவிக்க ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் தகவல் தரும் ஒலிப்பெருக்கிகள் இடம்பெற்றிருக்கும்.

சென்னைக்கு வரும் மும்முனை மின்சாரத்தில் இயங்கும் ரயில் சேவை

பயணங்கள் பற்றிய தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படும். ஏற்கனவே இந்த நடைமுறை சென்னை சென்ட்ரல் முதல் வேளச்சேரி மார்க்கத்தில் இயங்கும் பறக்கும் ரயில் சேவையில் உள்ளது.

சிசிடிவி கேமராக்கள்

சிசிடிவி கேமராக்கள்

மகளிருக்கான பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பாதுகாப்பு வசதிக்காக பொருத்தப்பட்டிருக்கிறது. சிசிடிவி காட்சிகளை நேரடியாக ரயில் கட்டுப்பாட்டி அதிகாரிகள் கண்காணிப்பர்.

குளிரூட்டப்பட்ட பெட்டிகள்

குளிரூட்டப்பட்ட பெட்டிகள்

சென்னையில் சீதோஷன நிலையை கருத்தில் கொண்டு புதிய தலைமுறைக்கான மின்சார ரயிலின் அனைத்து பெட்டிகளும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.

மின்சார ஆற்றலை சேமிக்கவும், நல்ல வெளிச்சத்தை பெறவும் ரயிலின் பெட்டிகள் முழுவதிலும் எல்இடி திறன் பெற்ற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னைக்கு வரும் மும்முனை மின்சாரத்தில் இயங்கும் ரயில் சேவை

ரயிலிற்காக வழங்கப்பட்டு மின்சார ஆற்றல் இவ்வாறு சேமிக்கப்படுகிறது என்றால் பிரேக் பிடிக்கும் போது 30 சதவீத சக்தி மீண்டும் புதுப்பிடுக்கப்படும் வகையில் பிரேக் அமைப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

காற்று போகும் வசதி

காற்று போகும் வசதி

ரயில் பெட்டிகளில் ஏசி வசதி செய்யப்பட்டு இருந்தாலும், காற்றோட்டத்தை மேலும் வழங்க பெட்டிகளின் மேல்புறத்தில் காற்றாடிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து காற்றோட்டத்தை அதிகரிக்க ரயிலின் மேற்கூரையில் ஏர்-வென்டிலேஷன் சிஸ்டம் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இருக்கைகள்

இருக்கைகள்

மொத்தம் 1,168 இருக்கைகள் இந்த ரயிலில் உள்ளன. தவிர, 4852 பேர் நின்றுகொண்டும் பயணிக்கலாம். மேலும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை இந்த ரயில் சுமந்து செல்லும்

12 பெட்டிகளை கொண்ட இந்த புதிய தலைமுறை மின்சார ரயிலில் துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீஸ் கொண்டு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவசர கால பணியாளர்கள்

அவசர கால பணியாளர்கள்

விமான சேவைகளில் அவசர கால தேவைக்காக கூடுதல் பைலட்டுகளை பணிக்கு அமர்த்துவது வழக்கம். அதேபோல் இந்த புதிய தலைமுறை ரயில் இயக்கத்திற்கும் அவசர கால பயணியாளர்கள் தேவைப்படுவார்கள். அதற்கான அறிவிப்பை விரைவில் தெற்கே ரயில்வே வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு வரும் மும்முனை மின்சாரத்தில் இயங்கும் ரயில் சேவை

கட்டமைப்பு மற்றும் இயக்கத்தில் பல நவீன தொழில்நுட்பங்களை பெற்றுள்ள இந்த ரயில் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பதை இன்னும் தெற்கு ரயில்வே அறிவிக்கவில்லை. மேலும் இந்த ரயிலில் பயணம் செய்ய கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்பது தொடர்பான அறிவிப்புகளும் வெளிவரவில்லை.


தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

நவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் சேவைக்கு வந்துள்ளது. மும்பை- கோவா இடையில் முதல் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயிலாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் குறிப்பிடப்படுகிறது. பிற ரயில்களிலிருந்து வித்தியாசப்படுத்தும் வகையில் மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் வண்ணத்தில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய வினைல் ஸ்டிக்கர் வெளிப்புறத்தை அலங்கரிக்கிறது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

முதல்முறையாக தானியங்கி கதவுகளுடன் வரும் பயணிகள் ரயிலாகவும் இதனை குறிப்பிடலாம். உட்புறத்தில் இருக்கைகள் மிக தாராள இடவசதியுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், நெருக்கடி இல்லாமல் அமர்ந்து பயணிக்கலாம்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

இந்த ரயிலில் 3+2 இருக்கை அமைப்புடன் 72 பேர் பயணிப்பதற்கான ரயில் பெட்டிகளும், 2+2 ஆகிய இருக்கை அமைப்புடன் 56 பேர் பயணிப்பதற்கான ரயில் பெட்டிகளும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. 2+2 இருக்கை அமைப்புடைய பெட்டிகள் மிக தாராளமான இடவசதியை அளிக்கும். ஆம்னி பஸ்களில் இருப்பது போல மிக சொகுசான புஷ் பேக் சீட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனியாக 9 இன்ச் திரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண முடியும் என்பதுடன், ரயில் பற்றிய தகவல்களையும் பெற முடியும். திண்பண்டங்களை வைத்துக்கொள்வதற்கான சிறிய டேபிள், வைஃபை இன்டர்நெட் வசதி உள்ளிட்டவையும் இருக்கின்றன.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் உணவு பதார்த்தங்களை சூடு படுத்திக் கொள்வதற்கான ஓவன், காபி மற்றும் டீ வழங்கும் எந்திரம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை பொருத்தப்பட்டு இருக்கின்றன. கழிவறைகள் மிக நவீன முறையில் இருப்பதுடன், கை கழுவுவதற்கான சோப்பு திரவம் வினியோகிக்கும் சாதனம், தானியங்கி தண்ணீர் குழாய்கள் போன்றவை பொருத்தப்பட்டு இருக்கிந்றன.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. தீ பிடிப்பது குறித்து எச்சரிக்கும் சாதனம், கெட்ட வாடைகளை ரயில் பெட்டியிலிருந்து அகற்றும் சாதனம் உள்ளிட்டவை ஹைலைட்டாக கூறலாம்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

தேஜஸ் எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில் பெட்டிகள் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. நவீன வசதிகள் கொண்ட இந்த ரயில் பெட்டிகள்தான் இந்தியாவின் அதிவேகத்தில் செல்லும் திறன் பெற்ற ரயில் பெட்டிகளாகவும் கூற முடியும்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

ஆம், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் அதிகபட்சமாக 200 கிமீ வேகம் வரை இயக்குவதற்கான விசேஷ கட்டமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை தற்போது தண்டவாளங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளின்படி, மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்கப்படும்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

தேஜஸ் ரயில் பெட்டிகளில் ஸ்டெயிலெஸ் ஸ்டீல் பிரேக் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வகை பிரேக்குகள் மிகவும் சிறப்பான செயல்திறனுடன் இருக்கும். எனவே, அதிவேகத்தில் இயக்கும்போதும் மிக குறைவான தூரத்திலேயே ரயிலை நிறுத்தும் வாய்ப்பு ஓட்டுனர்களுக்கு கிடைக்கும்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

மும்பை- கோவாவை தொடர்ந்து மும்பை- சூரத் மற்றும் டெல்லி- லக்ணோ இடையிலான வழித்தடங்களில் இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

சதாப்தி ரயில்களை காட்டிலும் கட்டணம் சற்று கூடுதலாக நிர்ணயிக்கப்பட உள்ளது. ஆனால், அதற்குரிய பல சிறப்பம்சங்களை பெற்றிருப்பதால், ரயில் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: 3 Phase EMU Train For Chennai Trail Run Begins. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark