1200கிமீ தூரம்! சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட தொழிலாளிகள்! போலீசுக்கே இது செம்ம ஷாக்

டெல்லியில் இருந்து பீஹார் செல்வதற்கு மூன்று தொழிலாளிகள் விநோதமான வாகனத்தைப் பயன்படுத்தியுள்ளனர். அந்த போலீஸாருக்கு ஷாக் வழங்கும் இருந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

1200 கிமீ தூரம்! சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட 3 தொழிலாளிகள்.. போலீசுக்கே இது செம்ம ஷாக்..!

உயிர் கொல்லி வைரஸ் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த செவ்வாய்கிழமை அன்று அறிவிக்கப்பட்ட இது வருகின்ற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை நிலுவையில் இருக்கும். மக்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

1200 கிமீ தூரம்! சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட 3 தொழிலாளிகள்.. போலீசுக்கே இது செம்ம ஷாக்..!

இதனடிப்படையில், பொது போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கின்றது. மேலும், தனியார் பொது போக்குவரத்து வாடகை வாகனங்களின் இயக்கத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்பட்டதால் பலர் தங்களின் சொந்த ஊரல்லாத இடங்களில் சிக்கியிருக்கின்றனர். பலர், அரசு வழங்கிய குறுகிய கால அவகாசத்தில் சொந்த ஊரைச் சென்று சேர்ந்துள்ளனர்.

1200 கிமீ தூரம்! சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட 3 தொழிலாளிகள்.. போலீசுக்கே இது செம்ம ஷாக்..!

இருப்பினும், வெளிமாநிலங்களுக்கு பணி நிமித்தமாக சென்ற ஒரு சிலர் தற்போதும் அங்கேயே சிக்கியிருக்கின்றனர். தொடர்ந்து, எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாமல் அவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால், சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏதேனும் வழி கிடைக்குமா என்று எதிர்பார்த்தபடி இருக்கின்றனர். ஆனால், அரசிடம் இம்மாதிரியான பணியாளர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைப்பதற்கான எந்தவொரு திட்டமும் கைவசம் இல்லை.

1200 கிமீ தூரம்! சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட 3 தொழிலாளிகள்.. போலீசுக்கே இது செம்ம ஷாக்..!

ஆகையால், சொந்த முயற்சியால் தங்களின் ஊருக்கு சென்றடைவதற்கான யோசனையிலும், முயற்சியிலும் ஒரு சிலர் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர். அந்தவகையில், வித்தியாசமான முறையில் சொந்த ஊர் செல்ல முயன்ற மூன்று தினசரி கூலி தொழிலாளிகள் போலீஸாரிடம் சிக்கியிருக்கின்றனர்.

இதில், அவர்கள் ஊருக்கு செல்வதற்காக பயன்படுத்திய வாகனம் மற்றும் முயற்சியை பிரம்மிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

1200 கிமீ தூரம்! சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட 3 தொழிலாளிகள்.. போலீசுக்கே இது செம்ம ஷாக்..!

பீஹார் மாநிலம், மதுபானி நகரத்தைச் சேர்ந்தவர் லாவு மாஹ்தோ. இவர் உறவினர்களான லால் மாஹ்தோ மற்றும் லலித் மாஹ்தோ ஆகியோருடன் தலைநகர் டெல்லியில் பணி புரிந்து வருகின்றனர். தற்போது இவர்கள் பணி நிமித்தமாக வசிக்கும் இடத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல சுமார் 1,200 கிமீ தூரத்தைக் கடக்க வேண்டும். ஆனால், நாட்டில் எந்தவொரு மாநிலத்தையும் இணைக்கின்ற வகையில் வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஏன் உள் நகரங்களை இணைக்கின்ற போக்குவரத்து சேவைக்கே முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

1200 கிமீ தூரம்! சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட 3 தொழிலாளிகள்.. போலீசுக்கே இது செம்ம ஷாக்..!

ஆகையால், டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு செல்வது லாவு மாஹ்தோ குடும்பத்தினருக்கு கேள்விக் குறியாக அமைந்தது. எனவே, தாங்களே எப்படியாவது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என நினைத்து அவர்கள் மூவரும் அரசின் 144 தடை உத்தரவை மீறி ரிக்ஷா வாகனத்தில் புறப்பட்டனர்.

இதுமட்டுமின்றி, கூடுதல் விரைவாக சென்று சேர வேண்டும் என்பதற்காக அந்த ரிக்ஷாவில் ஸ்கூட்டரின் எஞ்ஜினை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.

1200 கிமீ தூரம்! சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட 3 தொழிலாளிகள்.. போலீசுக்கே இது செம்ம ஷாக்..!

இதுபோன்று, வாகனங்களை கலப்பினம் செய்வது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். ஆனால், இதனை அறியாமல் அந்த வட மாநிலத்தவர்கள் 144 தடை உத்தரவை மீறி, பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்ட கலப்பின ரிக்சாவை உபயோகப்படுத்தினர்.

அவ்வாறு, அவர்கள் கலப்பினம் செய்யப்பட்ட ரிக்சாவைக் கொண்டு டெல்லியில் இருந்து உபி மாநிலம் வழியாக பீஹார் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்.

1200 கிமீ தூரம்! சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட 3 தொழிலாளிகள்.. போலீசுக்கே இது செம்ம ஷாக்..!

அப்போது உபி மாநிலத்தின் சந்தோலி பகுதியில் போலீஸார் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் விதமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நேரத்தில், அவர்கள் மூவரும் அதி வேகமாக ரிக்சாவில் வந்துக் கொண்டிருப்பதைக் கண்ட போலீஸார், அங்கேயே தடுத்து நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டனர். இதன்மூலமே இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.

1200 கிமீ தூரம்! சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட 3 தொழிலாளிகள்.. போலீசுக்கே இது செம்ம ஷாக்..!

இதுகுறித்த குறுகிய வீடியோ ஒன்றும் டுவிட்டர் பக்கத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் போலீஸார் விசாரிப்பதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

போலீஸாரின் விசாரணையில், அரசு திடீரென எடுத்த முடிவால் அவர்களால் உடனடியாக டெல்லியில் இருந்து புறப்பட முடியவில்லை என தெரிவித்தனர். இதுபோன்ற பல லட்சம் மக்கள் உண்ண உணவும், தங்குவதற்கு இடமுமின்றி தவித்து வருகின்றனர்.

1200 கிமீ தூரம்! சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட 3 தொழிலாளிகள்.. போலீசுக்கே இது செம்ம ஷாக்..!

இந்நிலையிலேயே தாங்களும் அங்கிருந்து புறப்பட்டு வந்ததாக அவர்கள் போலீஸிடம் தெரிவித்தனர். மேலும், தங்களை முன்னேறிச் செல்ல அனுமதிக்குமாறு போலீஸிடத்தில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சோர்வாக இருந்த அவர்கள் மூவருக்கும் உணவளித்து பின்னர் முன்னோக்கி செல்ல அனுமதித்தனர். இதற்கு முன்பாக, மருத்துவர்கள் அம்மூவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றதா என்ற முறையான பரிசோதனையும் செய்த பின்னரே செல்ல அனுமதித்தனர்.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

வண்டியில் ஸ்கூட்டர் இன்ஜினை பொருத்தி, இவர்கள் 1,200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு வந்துள்ள நிலையில், மற்றொரு இளைஞரோ டாடா நானோ காரை ஹெலிகாப்டராக மாற்றியுள்ளார். இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவின் கனவு கார் நானோ. இந்திய மக்களுக்கு 1 லட்ச ரூபாய் என்ற மிக மிக மலிவான விலையில் கார் கொடுத்தே ஆக வேண்டும் என்ற அவரது பெரும் முயற்சியின் விளைவாக மார்க்கெட்டிற்கு வந்த கார்தான் நானோ. நானோ கார் முயற்சியை கையில் எடுத்தபோது ஒட்டுமொத்த உலகமே ரத்தன் டாடாவை ஆச்சரியத்துடன் பார்த்தது.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

புதிய முயற்சிகளுக்கு கேலி, கிண்டல்கள் வருவது என்பது இயல்பான ஒன்றுதான். நானோ கார் முயற்சிக்கும் கூட அப்படித்தான் வந்தது. ஒரு லட்ச ரூபாய்க்கு கார் என்பதெல்லாம் சாத்தியமே அல்ல என்று பலர் கூறினர். ஆனால் பல்வேறு போராட்டங்கள், தடைகளை கடந்து, வாக்குறுதி கொடுத்தபடியே 1 லட்ச ரூபாய் என்ற ஆச்சரியமான விலையில் டாடா நானோ அறிமுகமானது.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

இந்திய மக்கள் பெரும் ஆவலுடன் காத்திருந்தது இந்த காருக்காகதான். உலகின் மிக மலிவான விலை கார் என்றும் கூட நானோவை சொல்லலாம். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகதான் சென்றது. ஆனால் அதன்பின் நானோ விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக சரிவடைய தொடங்கியது. பாதுகாப்பு தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு எழுந்த சந்தேகம் இதற்கு மிக முக்கியமான காரணம்.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

நாட்கள் செல்ல செல்ல நானோ காரின் உற்பத்தியால் டாடா நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட தொடங்கியது. இருந்தாலும் நானோ கார் உற்பத்தி, விற்பனையை நிறுத்துவதா? வேண்டாமா? என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்குள்ளேயே ஏகப்பட்ட குழப்பங்கள். காரணம் இது ரத்தன் டாடாவின் கனவு கார்.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

ஆரவாரமாக வந்தாலும் நானோ படுதோல்வியடைந்து விட்டது என்பதே உண்மை. ஆனால் ரத்தன் டாடாவின் முயற்சியை நிச்சயமாக பாராட்டித்தான் ஆக வேண்டும். அதேபோல் மிதிலேஷ் பிரசாத்தின் முயற்சியையும் நீங்கள் பாராட்டியே ஆக வேண்டும். எதற்காக என கேட்கிறீர்களா? டாடா நானோ காரை ஹெலிகாப்டராக மாற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் மிதிலேஷ் பிரசாத். அதற்காகதான்.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

பீகார் மாநிலத்தில் உள்ள சப்ரா என்ற கிராமத்தை சேர்ந்தவர்தான் இந்த மிதிலேஷ் பிரசாத். இவரிடம் டாடா நானோ கார் ஒன்று உள்ளது. அதனை ஹெலிகாப்டராக மாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மிதிலேஷ் பிரசாத். ரோட்டார் பிளேடு, வால், டெயில் பூம் மற்றும் ரோட்டார் மாஸ்ட் ஆகியவற்றுடன் தனது காருக்கு ஹெலிகாப்டர் போன்ற லுக்கை மிதிலேஷ் பிரசாத் வழங்கியுள்ளார்.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

வெளிப்புறம் மட்டுமல்ல. மிதிலேஷ் பிரசாத் தனது டாடா நானோ காரின் இன்டீரியரையும் ஹெலிகாப்டரை போல் 'கஸ்டமைஸ்' செய்துள்ளார். அத்துடன் புத்தம் புதிய தோற்றம் அளிக்கும் வகையில் பெயிண்ட்டும் செய்யப்பட்டுள்ளது. மிதிலேஷ் பிரசாத்தின் ஹெலிகாப்டர்-கார் வீதியில் வந்தால், அனைவருக்கும் ஆச்சரியம் தொற்றிக்கொள்கிறது.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

குழந்தைகளோ பின்னால் ஓடி வர தொடங்கி விடுகின்றனர். 2, 3 தசாப்தங்களுக்கு முன் அம்பாஸிடர் காரை பார்த்தால், நாம் எப்படி பின்னாலேயே ஓடுவோம். அதுபோலதான் மிதிலேஷ் பிரசாத்தின் ஹெலிகாப்டர் காரை பார்த்தாலும் குழந்தைகள் பின்னாலேயே ஓடி வருகின்றனர். மிதிலேஷ் பிரசாத்தின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு காரணம் என்ன தெரியுமா?

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

பைலட் ஆக வேண்டும் என்பதுதான் மிதிலேஷ் பிரசாத்தின் கனவு. ஆனால் மிதிலேஷ் பிரசாத்தால் தனது பைலட் கனவை நிறைவேற்ற முடியவில்லை. இதில் தோல்வியடைந்ததால்தான் ஹெலிகாப்டர் போன்ற காரை உருவாக்கியதாக மிதிலேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். அவரது ஹெலிகாப்டர்-கார் உலா வரும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

எனினும் ஹெலிகாப்டரில் பறப்பது போன்று மிதிலேஷ் பிரசாத் கற்பனை மட்டுமே செய்து கொள்ள முடியும். ஆம், இந்த கார் சாலைகளில் மட்டுமே ஓடும். பார்ப்பதற்கு ஹெலிகாப்டர் போலவே இருந்தாலும், இதற்கு பறக்கும் திறன் கிடையாது. ஆனால் தனது கனவை நிறைவேற்றி கொள்வதற்காக, இதுபோன்ற முயற்சிகளை செய்யும் முதல் நபர் என மிதிலேஷ் பிரசாத்தை கூற முடியாது.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

வட கிழக்கு சீனாவை சேர்ந்த ஸூ யுவே என்ற விவசாயியும் கூட தனது கனவை நிறைவேற்றும் நோக்கில் இதுபோன்ற வித்தியாசமான முயற்சி ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தில் பறக்க வேண்டும் என்பது ஸூ யுவேவின் கனவு. அதுவும் சொந்த விமானத்தில்!!

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

ஆனால் தனது கனவை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே ஏர்பஸ் ஏ320 (Airbus A320) போல் ஒரு விமானத்தையே அவர் உருவாக்கினார். பார்ப்பதற்கு அச்சு அசலாக ஏர்பஸ் ஏ320 போலவே அந்த விமானம் இருந்தது. இந்த திட்டத்திற்காக தனது சேமிப்பில் இருந்த 2.6 மில்லியன் யுவானுக்கும் (USD 374,000) மேற்பட்ட தொகையை அவர் செலவிட்டார்.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

இந்திய மதிப்பில் சொல்வதென்றால், கிட்டத்தட்ட 2.65 கோடி ரூபாய்க்கும் மேல். ஆனால் மிதிலேஷ் பிரசாத் தனது ஹெலிகாப்டர் காரை உருவாக்க எவ்வளவு செலவு செய்தார்? என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக விவசாயி ஸூ யுவே உருவாக்கிய விமானம் பறப்பதற்கு பயன்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டராக மாறிய டாடா நானோ கார்... உருவாக்கிய இளைஞர் சொன்ன காரணம் அதை விட ஆச்சரியம்!

அதற்கு பதிலாக அதனை ஹோட்டல் போல் மாற்றி, விருந்தினர்களை விழுந்து விழுந்து கவனிக்க இருப்பதாக ஸூ யுவே தெரிவித்திருந்தார். இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளும், அதற்கு அதனை செய்தவர்கள் சொல்லும் காரணங்களும் அனைவரின் கவனத்தையும் சட்டென ஈர்த்து விடுகின்றன. தற்போது மிதிலேஷ் பிரசாத்தின் ஹெலிகாப்டர்-கார் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
3 Workers Used Scooter Engine Fitted Rikshaw For Reach Home. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X