சென்னை - பெங்களூரு இனி வெறும் 30 நிமிடம் தான்!ஐஐடி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பை பத்தி தான் ஊரே பேசுது!

சென்னையில் கிளம்பி வெறும் 30 நிமிடத்தில் 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெங்களூருவை சென்று சேர முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இதை சென்னை ஐஐடியைச் சேர்ந்த மாணவர் குழு ஒன்று விரைவில் சாத்தியமாக உள்ளது. இதற்கான சோதனை மற்றும் வழி காட்டுதலை அந்தக் குழு பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அதிவேக போக்குவரத்து என்பது இந்தியா போன்ற அதிக ஜன நெருக்கடி கொண்ட நாடுகளில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒரு மனிதன் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் போது தான் அவன் பொருளாதார அளவில் நாகரீக அளவிலும் வளர்ச்சியை பெற்று வருகிறான். இப்படியாக போக்குவரத்திற்கு தற்போது விமானம்தான் விரைவான போக்குவரத்து வசதியாக இருந்தாலும் விரைவில் விமானத்தை மிஞ்சும் அளவிற்கு போக்குவரத்து வசதி ஒன்று அறிமுகமாக போகிறது.

iit madras hyperloop project

இன்று மெட்ரோ ரயில் எந்த அளவிற்கு உள்நகரப் போக்குவரத்திற்கு மிக முக்கியமான வாகனமாக இருக்கிறதோ அதேபோல நீண்ட தூரம் கொண்ட நகரங்களை இணைக்கும் வகையில் ஹைபர் லூப் கொண்ட ரயில்களை அறிமுகப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை ஐஐடி சேர்ந்த ஒரு மாணவர் குழு அவிஷ்கர் ஹைப்பர் லூப் என்ற திட்டத்தை கட்டமைத்து வருகிறது.

அதன்படி இந்தக்குழு ஹைபர் லூப்களில் பார்ஷியல் வேக்கம் டியூப்கள் மூலம் ஹைப்பர் லூப் பாடுகளில் மணிக்கு 1200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடிய ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர். இந்த குழு கடந்த ஜூலை மாதம் இதற்கான திட்ட வரையறைகளை தயார் செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

iit madras hyperloop project

இந்நிலையில் இந்த குழு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நடத்திய ஹைபர்லூப் பாட் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சென்னை ஐஐடி மாணவர் குழு தயாரித்த இந்த ஹைபர்லூப் பாட் என்பது மணிக்கு 1000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து சாதனை படைத்துள்ளது. இந்த குழு தற்போது டிசைன் வடிவில் மட்டும் வைத்திருந்த தங்களது ஹைப்பர்லூப் பாடை தற்போது சோதனை செய்துள்ளது, மற்றும் அந்த மாடலுக்கு அங்கீகாரமும் பெற்றுள்ளது.

இந்தக் குழு தங்கள் தயாரிப்பதற்காக ஆறு விதமான காப்புரிமைகளை பெற்றுள்ளது. முக்கியமாக பாடின் வடிவமைப்பு புரொபஷனல் டியூப் வடிவமைப்பு கட்டமைப்பு மற்றும் பேட்டரி கூலிங் ஆகிய தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றுள்ளது. தற்போது வேக்கம் டியூப் உள்ளே உள்ள பாடில் ஏசியை வைத்து இந்த ஹைபர் லூப்பை டிசைன் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் எத்தனை பேர் பயணிக்க முடியும் என்ற தகவல் எல்லாம் இனி தான் முடிவு செய்யப்படும்.

iit madras hyperloop project

இந்தக் குழுவிற்கு உதவி செய்வதற்காக சென்னை ஐஐடி உடன் சேர்ந்து மத்திய ரயில்வே அமைச்சகம் ரூபாய் 8.34 கோடியை உதவியாக வழங்கி உள்ளது. இதன் மூலம் அவர்கள் ஹைபர் லூப் தொழில்நுட்ப குறித்த ஆய்வுகளை மேம்படுத்தவும் அது குறித்த சகல சிஸ்டங்களை உருவாக்கவும் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த ஹைபர் தொழில்நுட்பம் ஓரளவுக்கு வெற்றியானால் சென்னை முதல் பெங்களூர் வரை ஹைபர் லூப் பாதை தனியாக அமைக்கப்பட்டால் அதற்குள் மணிக்கு சுமார் 1000 முதல் 1200கி.மீ வேகத்தில் இந்த பாடு பயணிக்கும். இதில் உள்ளே மக்கள் அமர வைக்கப்பட்டால் அவர்கள் சென்னையில் இருந்து சுமார் 25நிமிடத்தில் பெங்களூருவை சென்றடையலாம் என்ற நிலை ஏற்படும். இதனால் இந்த இரு நகரங்களுக்கும் இடையே உள்ள பயண நேரம் வெகுவாக குறையும்.

இதை நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்பது என்ற தகவல் எல்லாம் இனி தான் தெரிய வரும். இப்படியான அதிக வேகத்தில் மனிதர்கள் பயணிக்கும் போது மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன இப்படியான அதிக வேகத்தில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறதா என்ற ஆய்வுகள் எல்லாம் இனி தான் நடத்தப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிவேகப் போக்குவரத்து என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது தற்போது விமானம் அதிவேகமாக பயணித்தாலும் அதற்கான கட்டமைப்பு மற்றும் செலவுகள் அதிகமாக இருக்கிறது தொழில்நுட்பம் வந்தால் அதிகமான எண்ணிக்கையிலான மக்கள் அதிக வேகத்தில் ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு செல்ல பயனுள்ளதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 11, 2023, 14:02 [IST]
English summary
350 kilometers from chennai to bengaluru in just 30 minutes with vacuum powered pod
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X