360 டிகிரியும் சுற்றும் ஸ்பெஷல் வீலை தயாரித்த தனியார் நிறுவனம்! இனி பார்க்கிங் பண்ண பிரச்சனையே இல்ல!

360 டிகிரியும் சுழலும் வகையில் புதிய வகை டயரை கொரிய நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. இந்த டயர் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தால் ஆட்டோமொபைல் செக்டாரையே ஒரு புரட்டு புரட்டி போட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஆதிகாலத்து மனிதன் நாகரிகம் அடைய முக்கியமான காரணமாக இருந்தது வீல். மனிதன் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு விரைவாக நகர வீல் என்ற ஒன்றை கண்டுபிடித்த பின்பு தான் சாத்தியமானது. அதற்கு முன்பு வரை நடந்து மட்டுமே பயணித்துக் கொண்டிருந்தான். வீல் வந்த பிறகுதான் வாகனங்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு வகையில் மனிதன் வேகமாக வளர துவங்கினான்.

360 ​​degree rolling wheel bot tyres

அன்று வெறும் கற்களை மட்டும் கொண்டே வீல்களை தயாரித்திருந்தான். ஆனால் அதன் பின்பு மரத்தை வைத்து வீல் தயாரிப்பது உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மாறி தற்போது ரப்பர் டயர்கள் தான் பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளன. இப்படியாக தொழில்நுட்பம் என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

காலம் செல்ல செல்ல அது தன்னை பரிணாமத்துக் கொண்டு வளர்ந்து கொண்டே இருக்கும். உலக மக்கள் பலர் இது குறித்து ஆய்வுகளை நடத்திக் கொண்டே இருக்கின்றனர். மனித வாழ்க்கையை மேலும் சுலபமாக என்னவெல்லாம் செய்ய முடியும் என யோசித்து அதற்கு தகுந்தார் போல் தயாரிப்புகளை உருவாக்கிக் கொண்டு வருகின்றனர்.

360 ​​degree rolling wheel bot tyres

பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு மனித வளர்ச்சி என்பது மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. ஆனால் இன்று வரை ஆதிகாலத்தில் மனிதன் கண்டுபிடித்த வீலை தான் தற்போது பயன்படுத்துகிறோம். ஆனால் இனி எதிர்காலம் அப்படி இருக்காது என்பதற்கு தற்போது புதிய ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது. கொரிய நிறுவனம் ஒன்று 360 டிகிரியிலும் செல்லும் டயர் ஒன்றை உருவாக்கியுள்ளது.

கொரியா நாட்டைச் சேர்ந்த டயர் தயாரிப்பு நிறுவனமான ஹான்குக் என்ற நிறுவனம் தற்போது 360 டிகிரியிலும் சுழலும் புதிய வகை டயர் ஒன்றை தயாரித்து சோதனை செய்து வருகிறது. இந்த டயரை வாகனங்களில் பொருத்தினால் வாகனங்களில் நேராகவும் பக்கவாட்டிலும் பயணிக்கும் படி இந்த டயரை பயன்படுத்த முடியும். தற்போது இந்த டயரை அந்நிறுவனம் சோதனை தான் செய்து வருகிறது. விரைவில் இது மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

360 ​​degree rolling wheel bot tyres

இந்த டயருக்கு அந்நிறுவனம் வீல்பாட் என பெயர் வைத்துள்ளது. இந்த டயர் மட்டும் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தால் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படும் என சொல்லலாம். இந்த டயர் பொருத்தப்பட்ட வாகனங்களை பெரலல் பார்க்கிங் செய்வது மிகவும் சுலபமாக இருக்கும். காரை பார்க் செய்ய ரிவர்ஸ் எடுத்து பார்க் செய்ய வேண்டிய சூழ்நிலையை இல்லாமல் காரை பக்கவாட்டில் நகர்த்தி எளிதாக பார்க் செய்யலாம்.

இந்த டயர் பொருத்தப்பட்ட காரில் அதற்கு தகுந்தாற்போல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அப்டேட்களை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆனால் இதையெல்லாம் செய்தாலும் மனிதர்களுக்கு இந்த டயர் என்பது நிச்சயம் ஒரு வரப் பிரசாதமாக தான் அமையும். இது மிகப் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி வாகன போக்குவரத்தை எளிமையாக்கி விடும்.

360 ​​degree rolling wheel bot tyres

இந்த வீல்பாட் டயரை ஹான்குக் நிறுவனம் தற்போது சோதனை செய்து தான் வருகிறது. ஆரம்பகட்ட சோதனையில் தான் இந்த டயர் இருக்கிறது. இதுவரை இந்த டயரை வாகனங்களில் பொருத்தி சோதனை செய்யப்படவில்லை. ஆனால் விரைவில் வாகனங்களில் பொருத்தி சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த டயர்களை செமி ஆட்டோமெட்டிக் அல்லது ஆட்டோமெட்டிக் கார்களில் பொருத்துவதன் மூலம் விபத்து ஏற்படுவதை பெரும் அளவில் தவிர்க்க முடியும் என அந்நிறுவனம் கருதுகிறது. அதனால் ஆட்டோமெட்டிக் மற்றும் செமி ஆட்டோமெட்டிக் கார்களுக்கு பிரத்தியேகமாக இந்த டயர்களை உருவாக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

360 ​​degree rolling wheel bot tyres

தற்போது வரை இந்த டயர்கள் எப்பொழுது மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும் என்ற தகவல் தெரியவில்லை. முழுமையான சோதனை மற்றும் அங்கீகாரம் கிடைத்த பின்பு தான் இந்த டயர்கள் மார்க்கெட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே மார்க்கெட்டிற்கு வந்தாலும் ஏற்கனவே இருக்கும் கார்களில் இந்த டயர்களை பொருத்த முடியுமா? என்ற விபரமும் இதுவரை தெரியவில்லை. அப்படி பொறுத்த முடிந்தால் இந்த டயர் மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை பெறும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த உலகில் மாற்றம் ஒன்றே மாறாததாக இருக்கிறது. என்னதான் வீல் மனிதனின் முதல் கண்டுபிடிப்பாக இருந்தாலும் அது கல் மூலம் செய்யப்பட்ட வீலாக இருந்தது. பின்னர் அது படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று இன்று ஏகப்பட்ட ரக வீல்கள் பயன்பாட்டில் இருக்கிறது.

பெரும்பாலும் ரப்பர் வீல்கள்தான் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் அவை எல்லாம் ஒரே டைரக்ஷனில் பயணிக்கும் படி தான் இருக்கிறது. தற்போது அதன் பரிணாமத்தை மாற்றி இந்த டயர் பயன்பாட்டுக்கு வந்தால் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய புரட்சிதான். இதனால் எதிர்காலத்தில் மிகப்பெரிய தொழிற்நுட்ப புரட்சி ஏற்படும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 2, 2023, 12:32 [IST]
English summary
360 degree rolling hankook wheelbot tyres is new to auto industry
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X