கோவாவின் இன்னொரு பக்கம்... அங்கு மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

கோவாவில் மறைந்திருக்கும் ஆபத்துக்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவாவின் இன்னொரு பக்கம்... அங்கு மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மிகவும் அதிகமாக வந்து செல்லும் இடங்களில் ஒன்று கோவா. இந்தியாவை சேர்ந்த இளைஞர்கள் பலருக்கு, கோவா சுற்றுப்பயணம் என்பது லட்சியம் போன்றது. வாழ்க்கையில் ஒரு முறையாவது கோவாவிற்கு சென்று விட வேண்டும் என்ற கனவை கொண்டிருப்பவர்கள் இங்கு ஏராளம்.

கோவாவின் இன்னொரு பக்கம்... அங்கு மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

இடையில் மிகவும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு அவர்களின் கனவை சற்றே தள்ளி போட்டிருந்தது. ஆனால் ஊரடங்கில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளதால், மீண்டும் கோவா ஆசை துளிர் விட தொடங்கியுள்ளது. எனவே கோவா சுற்றுப்பயணம் தொடர்பான செய்திகளை பலர் தேடி தேடி படிக்க தொடங்கியுள்ளனர்.

கோவாவின் இன்னொரு பக்கம்... அங்கு மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

பொதுவாக கோவாவில் பார்க்க வேண்டிய இடங்கள், கடற்கரைகள், பார்ட்டி போன்ற விஷயங்களை தெரிந்து கொள்வதில்தான் பலரும் ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் கோவாவிற்கு என ஒரு மோசமான பக்கம் இருக்கிறது. கோவா சுற்றுப்பயணத்தில் நீங்கள் விபத்தில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

கோவாவின் இன்னொரு பக்கம்... அங்கு மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

ஆம், கோவா சாலைகளில் ஏராளமான ஆபத்துக்கள் மறைந்துள்ளன. கோவாவில் உள்ள ஒவ்வொரு 1 லட்சம் மக்களுக்கும், 217.7 விபத்துக்கள் நடக்கின்றன. இது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவு ஆகும். கோவாவில் இப்படி அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

கோவாவின் இன்னொரு பக்கம்... அங்கு மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

அந்த காரணங்களைதான் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். நீங்கள் கோவா சுற்றுப்பயணம் செல்லும் போது, சாலை விபத்துக்களில் சிக்கி கொள்ளாமல், பாதுகாப்பாக இருப்பதற்கு இந்த தகவல்கள் உங்களுக்கு உதவி செய்யும் என நம்புகிறோம். வாருங்கள், இனி செய்திக்குள் செல்லலாம்.

கோவாவின் இன்னொரு பக்கம்... அங்கு மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

சுற்றுலா பயணிகளின் மனநிலை:

கோவா சென்று இறங்கிய உடனே ஒருவரின் மனநிலை ரிலாக்ஸ் ஆகி விடுகிறது. அளவு கடந்த மகிழ்ச்சியான மன நிலைக்கு பலர் சென்று விடுகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் இருந்து விலகி, கோவாவின் குறுகலான சாலைகளில் பயணிப்பது உங்களுக்கு உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும். ஆம், கோவாவின் பெரும்பாலான சாலைகள் குறுகலாக இருக்கும்.

கோவாவின் இன்னொரு பக்கம்... அங்கு மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

அத்துடன் மலை தொடர்களிலும் நீங்கள் பயணிக்க வேண்டியதிருக்கும். அங்கு வளைவுகள் அதிகம் இருக்கும். அப்படிப்பட்ட சாலைகளில், கரைபுரண்டோடும் உற்சாகத்துடன் வாகனங்களை ஓட்டும்போது அதிக கவனம் அவசியம். இல்லாவிட்டால் நீங்கள் சாலை விபத்துக்களில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

கோவாவின் இன்னொரு பக்கம்... அங்கு மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

வாடகை வாகனங்கள்:

கோவாவில் கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் மிக எளிதாக வாடகைக்கு கிடைக்கும். ஆனால் அந்த வாகனங்களில் பெரும்பாலானவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அப்படிப்பட்ட வாகனங்களை கவனமாக ஓட்ட வேண்டும். ஆனால் போதிய அனுபவமும், பயிற்சியும் இல்லாமல் ஒரு சிலர் கோவாவில் வாகனங்களை ஓட்டுகின்றனர்.

கோவாவின் இன்னொரு பக்கம்... அங்கு மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

அதாவது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் நீண்ட வருடமாக தொடர்ந்து கார்களை ஓட்டி விட்டு, கோவாவிற்கு வந்தவுடன் திடீரென இரு சக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர். போதாக்குறைக்கு வாகனங்களும் முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், அதுவும் விபத்திற்கு ஒரு காரணமாகி விடுகிறது. எனவே கவனமாக இருங்கள்.

உள்ளூர் மக்களுடன் போட்டி போடாதீர்கள்:

கோவாவை சேர்ந்த ஒருவர், உங்கள் வாகனத்தை ஓவர்டேக் செய்து சென்றால், உடனே அவரை முந்தி செல்ல வேண்டும் என்ற பந்தய மன நிலைக்கு செல்லாதீர்கள். அவர்கள் அங்கேயே வசிப்பவர்கள். அவர்களுக்கு உங்களை விட சாலைகளை பற்றி நன்றாக தெரியும். எனவேதான் அவர்களால் வேகமாக வாகனம் ஓட்ட முடிகிறது.

ஆனால் இதை உணராமல் உள்ளூர் மக்களுடன் ஒரு சில சுற்றுலா பயணிகள் பந்தயத்தில் ஈடுபடுகின்றனர். இது தவறானது. எப்போதும் மிதமான வேகத்தில் பயணம் செய்யுங்கள். அத்துடன் உங்களை விட வேகமாக செல்ல விரும்பும் வாகனங்களுக்கு ஒதுங்கி வழி விட்டு விடுங்கள். இதில் உள்ள ஆபத்துக்களை உணராவிட்டால், நீங்கள் விபத்துக்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

மோசமான சாலைகளை பற்றி தெரிந்து கொள்ளாதது:

பொதுவாக கோவாவில் சாலைகள் நன்றாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளை போல், கோவாவின் ஒரு சில இடங்களிலும் மோசமான சாலைகள் இருக்கவே செய்கின்றன. சுற்றுலா பயணிகள் அப்படிப்பட்ட சாலைகளை அறிந்து கொள்ளாமல், குடிபோதையிலும், அதிவேகத்திலும் வாகனங்களை இயக்குகின்றனர்.

கோவாவில் ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் சாலையில் முறிந்து விழுந்து கிடப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் குண்டும், குழிகளையும், விழுந்து கிடக்கும் மரக்கிளைகளின் மீதும் கவனம் செலுத்தாமல், குடிபோதையில், அதிவேகமாக பயணிப்பது ஆபத்தானது. இதை எல்லாம் மனதில் வைத்து கொண்டால், நீங்கள் விபத்தில் சிக்காமல் ஊர் திரும்பலாம். இதுகுறித்து கார்டாக் செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
4 Big Dangers On Goa Roads. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X