தேசிய கொடியை ஏந்தி கொண்டு இளைஞர்கள் செய்த காரியம்... வயதை கேட்டால் இன்னும் ஷாக் ஆகுது... வைரல் வீடியோ

பொது சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட 4 கார்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தேசிய கொடியை ஏந்தி கொண்டு இளைஞர்கள் செய்த காரியம்... வயதை கேட்டால் இன்னும் ஷாக் ஆகுது... வைரல் வீடியோ

பொது சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களில் ஈடுபடுவது என்பது, அந்த வாகனத்தின் ஓட்டுனருக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்த கூடியது அல்ல. அவருடன் சேர்த்து, அந்த நேரத்தில் சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பலர் சாலைகளில் ஸ்டண்ட்களை செய்து கொண்டுதான் உள்ளனர்.

தேசிய கொடியை ஏந்தி கொண்டு இளைஞர்கள் செய்த காரியம்... வயதை கேட்டால் இன்னும் ஷாக் ஆகுது... வைரல் வீடியோ

இந்த வரிசையில் பொது சாலையில் ஸ்டண்ட்டில் ஈடுபட்ட 4 கார்களின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நாக்பூர்இன்ஃபோ என்ற யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் கட்டமைக்கப்பட்ட வன்ஜரி நகர் ஃப்ளைஓவர் பகுதியில் அபாயகரமான ஸ்டண்ட்டில் ஈடுபட்ட 4 கார்களை நாக்பூர் போக்குவரத்து காவல் துறையினர் தற்போது அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

தேசிய கொடியை ஏந்தி கொண்டு இளைஞர்கள் செய்த காரியம்... வயதை கேட்டால் இன்னும் ஷாக் ஆகுது... வைரல் வீடியோ

இந்த சம்பவம் குடியரசு தினத்தன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது. வீடியோ வைரல் ஆனதையடுத்து, காவல் துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட இளைஞர்கள் தங்களுக்கு மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பொறுப்பற்ற முறையில் கார்களை ஓட்டியுள்ளனர்.

தேசிய கொடியை ஏந்தி கொண்டு இளைஞர்கள் செய்த காரியம்... வயதை கேட்டால் இன்னும் ஷாக் ஆகுது... வைரல் வீடியோ

சம்பவம் நிகழ்ந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள், ஸ்டண்ட்டில் ஈடுபட்ட இளைஞர்களை பிடிக்க உதவியாக இருந்துள்ளன. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, ஹூண்டாய் கிரெட்டா மற்றும் செவர்லே க்ரூஸ் ஆகிய நான்கு கார்கள் இந்த ஸ்டண்ட்டில் ஈடுபட்டுள்ளதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

தேசிய கொடியை ஏந்தி கொண்டு இளைஞர்கள் செய்த காரியம்... வயதை கேட்டால் இன்னும் ஷாக் ஆகுது... வைரல் வீடியோ

இந்த 4 கார்களையும் காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து விட்டனர். ஸ்டண்ட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் இந்திய தேசிய கொடியை ஏந்தியிருப்பதையும் வீடியோவில் காண முடிகிறது. அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியது உள்பட பல்வேறு விதிமுறை மீறல்களுக்காக இந்த கார்களின் உரிமையாளர்களுக்கு, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர ஃபேன்ஸி நம்பர் பிளேட்டை பயன்படுத்தியது, தேவையான ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டியது, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்தது உள்பட பல்வேறு காரணங்களுக்காகவும், இந்த கார்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய கொடியை ஏந்தி கொண்டு இளைஞர்கள் செய்த காரியம்... வயதை கேட்டால் இன்னும் ஷாக் ஆகுது... வைரல் வீடியோ

இந்த கார்களின் உரிமையாளர்களையும் காவல் துறையினர் கண்டறிந்து விட்டனர். இந்த கார்களின் உரிமையாளர்களுக்கு 19, 20, 25 என மிகவும் குறைந்த வயதே ஆகிறது. எனவே அவர்களின் பெற்றோர்களை கவுன்சிலிங்கிற்காக காவல் துறையினர் அழைத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கொடியை ஏந்தி கொண்டு இளைஞர்கள் செய்த காரியம்... வயதை கேட்டால் இன்னும் ஷாக் ஆகுது... வைரல் வீடியோ

பொது சாலைகளில் ஸ்டண்ட்டில் ஈடுபடும் இரு சக்கர வாகன ஓட்டிகளை பிடிப்பதற்காகவும், காவல் துறையினர் விரைவில் சிறப்பு நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது சாலைகளில் வாகனங்கள் மூலம் ஸ்டண்ட்டில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதிப்புகளை இளைஞர்கள் உணர வேண்டிய நேரமிது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
4 Cars Seized By Cops After Doing Stunts On Public Roads - Viral Video. Read in Tamil
Story first published: Thursday, February 4, 2021, 21:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X