ஏமாத்த முடியாது... மெக்கானிக்கிடம் இந்த 4 கேள்வியை மட்டும் கேட்டு பாருங்க... உங்க வண்டி சூப்பரா ரெடி ஆயிரும்!

மெக்கானிக்குகளிடம் கேட்க வேண்டிய 4 முக்கியமான கேள்விகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏமாத்த முடியாது... மெக்கானிக்கிடம் இந்த 4 கேள்வியை மட்டும் கேட்டு பாருங்க... உங்க வண்டி சூப்பரா ரெடி ஆயிரும்!

கார், பைக் போன்ற வாகனங்கள் நமது வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அப்படிப்பட்ட வாகனங்களை சரியான மெக்கானிக்குகளிடம் ஒப்படைத்து பழுது பார்ப்பது அவசியம். ஆனால் திறமையான மற்றும் நம்பிக்கையான மெக்கானிக்குகளை கண்டறிவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பாதுகாப்பான மெக்கானிக்குகளின் கைகளில் இருந்தால்தான் வாகனம் திறம்பட இயங்கும்.

ஏமாத்த முடியாது... மெக்கானிக்கிடம் இந்த 4 கேள்வியை மட்டும் கேட்டு பாருங்க... உங்க வண்டி சூப்பரா ரெடி ஆயிரும்!

திறமையான மற்றும் நம்பிக்கையான மெக்கானிக்குகளை எப்படி கண்டறிவது? என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதற்கு நீங்கள் மெக்கானிக்குகளிடம் ஒரு சில கேள்விகளை கேட்க வேண்டும். அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தகவல்கள் உங்களுக்கும், உங்கள் வாகனத்திற்கும் நிச்சயமாக பலன் அளிக்கும் என நம்புகிறோம்.

ஏமாத்த முடியாது... மெக்கானிக்கிடம் இந்த 4 கேள்வியை மட்டும் கேட்டு பாருங்க... உங்க வண்டி சூப்பரா ரெடி ஆயிரும்!

1. எனது வாகனத்தின் பழைய பாகங்களை பார்க்க முடியுமா?

உங்கள் வாகனத்தில் ஒரு சில பாகங்கள் மாற்றப்படுகிறது என வைத்து கொள்வோம். அப்படியானால் புதிய பாகத்தின் பெட்டியில் வைத்து பழைய பாகங்களை தருமாறு கேளுங்கள். இதன் மூலம் வாகன பாகங்கள் பற்றிய உங்கள் அறிவை வளர்த்து கொள்ள முடியும். அத்துடன் உங்கள் வாகனத்தில் பழைய பாகங்களுக்கு பதிலாக புதிய பாகங்கள் பொருத்தப்பட்டு விட்டன என்பதையும் உறுதி செய்து கொள்ள முடியும்.

ஏமாத்த முடியாது... மெக்கானிக்கிடம் இந்த 4 கேள்வியை மட்டும் கேட்டு பாருங்க... உங்க வண்டி சூப்பரா ரெடி ஆயிரும்!

எடை அதிகமாக இருக்கிறது, இது நமக்கு தேவையில்லை என்பது போன்ற காரணங்களால் பழைய பாகங்களை நீங்கள் எடுத்து செல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவற்றை பார்ப்பதற்கும், புதிய பாகங்கள் பொருத்தப்பட்டு விட்டதா? என்பதை உறுதி செய்வதற்கும் பழைய பாகங்களை கேளுங்கள். இதற்கு மெக்கானிக் மறுப்பு தெரிவித்தால், நீங்கள் யோசிக்க வேண்டியது அவசியம்.

ஏமாத்த முடியாது... மெக்கானிக்கிடம் இந்த 4 கேள்வியை மட்டும் கேட்டு பாருங்க... உங்க வண்டி சூப்பரா ரெடி ஆயிரும்!

2. எனது வாகனத்தின் பிரச்னையை எந்தெந்த வழிகளில் சரி செய்யலாம்? அவை ஒவ்வொன்றையும் விவரிக்க முடியுமா?

பொதுவாக வாகனத்தில் ஏற்படும் ஒரு பிரச்னையை சரி செய்வதற்கு நிறைய வழிகள் இருக்கும். பெரும்பாலான மெக்கானிக்குகள் அதிகமாக செலவு ஆகும் வழியின் மூலம்தான் பிரச்னையை சரி செய்கின்றனர். ஆனால் இந்த பிரச்னைகளை குறைவான செலவிலேயே கூட சரி செய்ய முடியும். அந்த வழிகளை பெரும்பாலான மெக்கானிக்குகள் நம்மிடம் விளக்கமாக கூறுவதில்லை.

ஏமாத்த முடியாது... மெக்கானிக்கிடம் இந்த 4 கேள்வியை மட்டும் கேட்டு பாருங்க... உங்க வண்டி சூப்பரா ரெடி ஆயிரும்!

எனவே சாத்தியமுள்ள அனைத்து வழிகளையும் ஆராயுங்கள். ஒவ்வொரு வழியையும் உங்கள் மெக்கானிக் தெளிவாக விளக்குகிறாரா? என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். அனைத்து வாகன ஓட்டுனர்களும் ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கிடையாது. எனவே நிறைய கேள்விகளை கேட்டு கொண்டே இருக்கிறோமே என கூச்சப்பட வேண்டாம்.

ஏமாத்த முடியாது... மெக்கானிக்கிடம் இந்த 4 கேள்வியை மட்டும் கேட்டு பாருங்க... உங்க வண்டி சூப்பரா ரெடி ஆயிரும்!

நம்மில் பலரும் கேள்வி கேட்க கூச்சப்படுகிறோம். இந்த சிறிய விஷயம் கூட தெரியாமல் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறாரே என நம்மை பற்றி மற்றவர்கள் ஏளனமாக நினைப்பார்கள் என்பதுதான் இதற்கு காரணம். எனவேதான் நாங்கள் மேலேயே உங்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விட்டோம். அனைத்து வாகன ஓட்டுனர்களும் ஆட்டோமொபைல் துறையின் வல்லுனர்கள் இல்லை.

ஏமாத்த முடியாது... மெக்கானிக்கிடம் இந்த 4 கேள்வியை மட்டும் கேட்டு பாருங்க... உங்க வண்டி சூப்பரா ரெடி ஆயிரும்!

எனவே கேள்வி கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து உங்களுக்கு புரிய வைப்பதும் மெக்கானிக்குகளின் வேலைதான் என்பதை மனதில் கொள்ளுங்கள். எனவே கூச்சப்படாமல் கேள்வி எழுப்புங்கள். குறைவாக செலவு ஆகும் வழியில் உங்கள் வாகனத்தின் பிரச்னையை சரி செய்யுங்கள்.

ஏமாத்த முடியாது... மெக்கானிக்கிடம் இந்த 4 கேள்வியை மட்டும் கேட்டு பாருங்க... உங்க வண்டி சூப்பரா ரெடி ஆயிரும்!

3. பராமரிப்பு வழிமுறைகளை சொல்ல முடியுமா?

திறமையான மெக்கானிக்குகள் உங்கள் வாகனத்தை நல்ல கண்டிஷனில் திரும்ப ஒப்படைப்பதுடன், தொடர்ந்து சிறப்பாக பராமரிப்பதற்கும் உதவி செய்வார்கள். வாகனத்தை எப்படி பராமரிப்பது? எவ்வளவு கால இடைவெளிகளில் சர்வீஸ் செய்வது? அடுத்த சர்வீஸ் எப்போது? போன்ற தகவல்களை எல்லாம் அவர்களிடம் கேளுங்கள்.

ஏமாத்த முடியாது... மெக்கானிக்கிடம் இந்த 4 கேள்வியை மட்டும் கேட்டு பாருங்க... உங்க வண்டி சூப்பரா ரெடி ஆயிரும்!

பின்னர் அதனை உங்கள் வாகனத்தின் உற்பத்தி நிறுவனம் பரிந்துரைத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். இதன் மூலம் உங்களுக்கு தேவையில்லாத சர்வீஸ் எதையாவது மெக்கானிக் உங்களுக்கு பரிந்துரைக்கிறாரா? என்பது தெரிந்து விடும். அப்படி தேவையில்லாத சர்வீஸ்களை பரிந்துரைக்கும் மெக்கானிக்குகளுக்கு 'குட்பை' சொல்லி விடுங்கள்.

ஏமாத்த முடியாது... மெக்கானிக்கிடம் இந்த 4 கேள்வியை மட்டும் கேட்டு பாருங்க... உங்க வண்டி சூப்பரா ரெடி ஆயிரும்!

4. என்னென்ன சர்டிஃபிகேட்களை வைத்துள்ளீர்கள்?

ஆட்டோமொபைல் துறையில் இன்று தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே செல்கிறது. இப்படிப்பட்ட அதிநவீன வாகனங்களை கையாள்வதற்காக மெக்கானிக்கள் பலர் பிரத்யேகமாக பயிற்சி பெறுகின்றனர். அப்படிப்பட்ட பயிற்சி பெற்றிருந்தால், அது என்ன கோர்ஸ்? என்பது குறித்தும், சான்றிதழ்களை பற்றியும் கேளுங்கள். இதன் மூலம் அவர்களின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை நீங்கள் அறியலாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
4 important questions to ask your vehicle mechanic
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X