இந்த வசதிகள் உங்கள் காரில் இல்லாவிட்டால் உடனே புது மாடலுக்கு மாறணும்... இப்பவே கையோட செக் பண்ணீருங்க!
நீங்கள் பயன்படுத்தும் காரில் கண்டிப்பாக இருக்க வேண்டிய 4 முக்கியமான வசதிகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களின் ஆரம்ப விலை வேரியண்ட்களில் கூட ஏராளமான வசதிகளும், தொழில்நுட்ப அம்சங்களும் வழங்கப்படுகின்றன. இந்த சூழலில், ஒரு சில பழைய கார்களில் இல்லாத, அதே நேரத்தில் மிகவும் அவசியமான 4 வசதிகளை இந்த செய்தியில் நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.

நாங்கள் இங்கே கூறியுள்ள வசதிகள் உங்கள் காரில் இல்லாவிட்டால், நீங்கள் புதிய காருக்கு மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என அர்த்தம் கொள்ளலாம். அத்துடன் உங்கள் கார் மிகவும் பழையதாகி விட்டது என்பதையும் இதன் வாயிலாக புரிந்து கொள்ளலாம். சரி, வாருங்கள். இனி நேரடியாக செய்திக்குள் செல்வோம்.

ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகள் (Android Auto, Apple CarPlay Connectivity Features)
தற்போதைய நாட்களில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட்கள்தான் 'டாக் ஆஃப் தி டவுன்' ஆக உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் இந்த வசதியை விளம்பரப்படுத்தி, வாடிக்கையாளர்களை கவர்வதற்கு முயற்சி செய்கின்றன. முன்பெல்லாம் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டங்களை எல்லாம் விலை உயர்ந்த பிரீமியம் சொகுசு கார்களில்தான் காண முடிந்தது.

ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் தற்போது ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் கார்களில் கூட இந்த வசதியை பார்க்க முடிகிறது. அத்துடன் இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டங்கள் இன்றைய நாட்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற கனெக்டிவிட்டி வசதிகளையும் கொண்டதாக இருக்கின்றன.

இந்த கனெக்டிவிட்டி வசதிகள், பயனர்கள் தங்கள் செல்போன்களை இணைக்க அனுமதிக்கின்றன. அத்துடன் கூகுள் மேப்ஸ், கூகுள் அஸிஸ்டன்ட், Siri மற்றும் Spotify போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இன்றைய நாட்களில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன் கூடிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட்கள் மிக முக்கியமான வசதிகளில் ஒன்றாக மாறியுள்ளன.

டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (Tyre Pressure Monitoring System)
இன்றைய நாட்களில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மிக முக்கியமான பாதுகாப்பு வசதிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. உங்கள் காரின் ஏதேனும் ஒரு டயரில் காற்று குறைவாக இருந்தால் கூட, டேஷ்போர்டில் இருக்கும் எச்சரிக்கை விளக்கு வாயிலாக இது உங்களுக்கு தகவல் தெரிவிக்கும். உங்கள் பயணங்களை பாதுகாப்பானதாக மாற்றும் என்பதால், நீங்கள் வைத்திருக்கும் காரில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் இருப்பது அவசியம்.

ஏர்பேக்குகள் (Airbags)
பழைய கார்கள் பலவற்றில் ஏர்பேக் இருக்காது. நீங்கள் தற்போது பயன்படுத்தும் காரில் ஏர்பேக் வசதி இல்லாவிட்டால், உடனடியாக ஏர்பேக் வசதி உள்ள காருக்கு மாறி விடுவது சிறந்தது. ஏனெனில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்தை போலவே இதுவும் மிகவும் அவசியமான பாதுகாப்பு வசதிகளில் ஒன்றாகும்.

கார் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்க நேரிட்டால் ஏர்பேக்குகள் விரிவடைந்து, காயம் ஏற்படுவதில் இருந்து உங்களை பாதுகாக்கும். டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஏர்பேக் போன்ற பாதுகாப்பு வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது உங்களுக்கு நிச்சயமாக நன்மைகளை கொடுக்கும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.

ஏபிஎஸ் & இபிடி (ABS & EBD)
ஏபிஎஸ் மற்றும் இபிடி வசதி உள்ள கார்களை நீங்கள் பயன்படுத்துவது சிறப்பான ஒன்றாக இருக்கும். இந்த வசதிகள் சாலைகளில் ஏராளமான உயிர்களை காப்பாற்றியுள்ளன. பதற்றமான சூழ்நிலைகளில் பிரேக் பிடிக்கும்போது, குறிப்பாக ஈரமான சாலைகளில் பிரேக் பிடிக்கும்போது, இந்த வசதிகள் டிரைவருக்கு சிறப்பான கண்ட்ரோலை வழங்குகின்றன.

எனவே இவையும் மிகவும் முக்கியமான பாதுகாப்பு வசதிகள்தான். இந்த 4 வசதிகளும் ஒரு காரில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். இந்த வசதிகள் ஒருவேளை உங்கள் காரில் இல்லாவிட்டால், இந்த வசதிகள் இருக்கும் காருக்கு மாறுவது குறித்து நீங்கள் தீவிரமாக பரிசீலனை செய்வது நன்மை பயக்கும் என நாங்கள் நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications








