இந்த மாசம் மட்டும் இத்தன வந்தே பாரத் ரயில் பயன்பாட்டுக்கு வரபோகுதா?.. சென்னை-நெல்லை ரயிலும் லிஸ்ட்ல இருக்கு!
வந்தே பாரத் ரயில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓர் ரயில் ஆகும். முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் தற்போது 46 வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த எண்ணிக்கையை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் இந்தியன் ரயில்வேஸ் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
வந்தே பாரத் ரயிலுக்கு நாட்டின் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மிகுந்த அதிக வரவேற்பும், குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரவேற்பே இல்லாமலும் காட்சியளிக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் குறிப்பிட்ட சில பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயில்கள் அதிக காலியான இருக்கைகளுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

29 சதவீதம் இருக்கைகள் புக் ஆகுவதே பெரிய விஷயம் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதன் விளைவாகவே வரவேற்புக் குறைந்துக் காணப்படும் ரூட்களில் ரயில் கட்டணத்தைக் குறைக்க இந்தியன் ரயில்வேஸ் முடிவு செய்திருக்கின்றது. இதுபோன்று வரவேற்புக் குறைந்துக் காணப்படும் சூழலில் இந்தியன் ரயில்வேஸ் மேலும் சில புதிய ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதுவும் அவை இந்த மாதமே அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது. நான்கு புதிய ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. சென்னை- டூ- திருநெல்வேலி, டெல்லி- டூ- சண்டிகர், குவாலியர்- டூ- போபால் மற்றும் லக்னோ- டூ- பிரக்யராஜ் ஆகிய ரூட்களிலேயே புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

இவற்றில் சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கு எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது. இது சுமார் 622 கிமீ இடைவெளிக் கொண்ட வழித்தடம் ஆகும். இந்த நீண்ட தூர டிராவலை ஆறு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் வந்தே பாரத் ரயில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, அதிகபட்சம் எட்டு பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலே இந்த ரூட்களில் இயக்கப்பட இருக்கின்றன. தேவை அதிகம் உள்ள ரூட்டாக இருந்தால் மட்டும் 16 கோச்சுகள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வழித் தடங்களில் என்ன மாதிரியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட உள்ளன என்பது தெரியவில்லை.
இப்போதைய நிலவரப்படி சில ரூட்களில் அதிக கட்டணம் காரணமாகவே வந்தே பாரத் ரயில்களை ரயில் பயணிகள் புறக்கணிக்கத் தொடங்கி இருக்கின்றனர். எனவேதான் குறைவான கட்டணத்தின் வாயிலாக பயணிகளை ஈர்க்கும் முயற்சியில் இந்தியன் ரயில்வேஸ் தற்போது களமிறங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக விரைவில் வந்தே பாரத் ரயிலை மக்கள் அதிகம் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, புதிய ரூட்களிலும் கட்டணம் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது 46 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 7க்கும் அதிகமான வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை பலர் புறக்கணிக்கும் சூழலே தென்படுகின்றது. 29 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை மட்டுமே மக்கள் வந்தே பாரத் ரயிலை பயன்படுத்துவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், இந்த ஏழு வழித்தடங்களைத் தவிர மற்ற அனைத்து வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயிலுக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதாவது, மக்கள் கூட்டம் இந்த ரயிலில் பயணிக்க அலைமோதிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, திருவனந்தபுரம்-காஸர்கோடு இடையில் இயங்கிக் கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயில் 172 சதவீதம் முதல் 180 சதவீதம் வரை ரஷ்ஷாக மக்கள் கூட்டம் காணப்படுகின்றது.
இதற்கு அடுத்தபடியாக மும்பை-காந்தி நகர் வழித்தடத்திலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த ரூட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயிலில் 129-134சதவீதம் வரை மக்கள் பயன்பாடு உள்ளது. இதுபோன்று இன்னும் சில வழித்தடங்களில் 100சதவீத புக்கிங் மற்றும் வெயிட்டிங் லிஸ்டைப் பெற்ற ரயிலாக வந்தே பாரத் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான வரவேற்பையே இந்த மாதம் பயன்பாட்டிற்கு வர இருக்கும் வந்தே ரயில்களும் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரவேற்பு அதிகம் இருப்பதாக கருதப்படும் வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் குறைக்கப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது எங்கு எல்லாம் அதிக காலியான இருக்கைகளுடன் லந்தே பாரத் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றதோ அந்த வழித்தடங்களில் மட்டுமே கட்டணம் குறைக்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications