45 பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை மொத்தமாக வாங்கிய பிரபல ஹோட்டல்... விலையை கேட்டதும் கண்ண கட்டுது...

இந்தியாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்று, 45 பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை மொத்தமாக வாங்கியுள்ளது.

45 பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை மொத்தமாக வாங்கிய பிரபல ஹோட்டல்... விலையை கேட்டதும் கண்ண கட்டுது...

லீலா பேலஸ், ஹோட்டல் மற்றும் ரிசார்ட்கள் (Leela Palaces, Hotels and Resorts) மிகவும் பிரபலமான சொகுசு ஹோட்டல் சங்கிலியாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்நிறுவனத்தின் ஹோட்டல்கள் உள்ளன. லீலா பேலஸ், ஹோட்டல் மற்றும் ரிசார்ட்களுக்கு, பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் (BMW India) தற்போது 45 வாகனங்களை டெலிவரி செய்துள்ளது.

45 பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை மொத்தமாக வாங்கிய பிரபல ஹோட்டல்... விலையை கேட்டதும் கண்ண கட்டுது...

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ஆகிய கார்கள் லீலா குழுமத்திற்கு டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கார்களின் மூலம் தங்கள் விருந்தினர்களுக்கு மிக சிறப்பான சேவையை வழங்குவதற்கு லீலா குழுமம் திட்டமிட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு மாடலிலும் எத்தனை கார்களை லீலா குழுமம் வாங்கியுள்ளது? என்பது சரியாக தெரியவில்லை.

45 பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை மொத்தமாக வாங்கிய பிரபல ஹோட்டல்... விலையை கேட்டதும் கண்ண கட்டுது...

தற்போது கார்களை டெலிவரி செய்துள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம், லீலா குழுமத்திற்காக சிறப்பு செயல் விளக்கத்தை வழங்கவுள்ளது. பிஎம்டபிள்யூ கார்களின் வல்லமை, செயல்திறன் மற்றும் புதுமையான வசதிகள் ஆகியவை குறித்து லீலா குழுமத்தின் பணியாளர்களுக்கு இதில் தெளிவாக விளக்கப்படும். இதன்மூலம் புதிய கார்களை பற்றி ஓட்டுனர்கள் நன்றாக தெரிந்து கொள்ளலாம்.

45 பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை மொத்தமாக வாங்கிய பிரபல ஹோட்டல்... விலையை கேட்டதும் கண்ண கட்டுது...

புது கார்கள் பரிட்சயமாகி விட்டால், விருந்தினர்களுக்கு அவர்களால் சிறப்பான சேவையை வழங்க முடியும். அத்துடன் பிஎம்டபிள்யூ வாகனங்கள் வழங்கும் சொகுசு வசதிகளை விருந்தினர்கள் நன்றாக அனுபவிக்கவும் முடியும். லீலா குழுமம் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ கார்கள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

45 பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை மொத்தமாக வாங்கிய பிரபல ஹோட்டல்... விலையை கேட்டதும் கண்ண கட்டுது...

லீலா குழுமத்திற்கு டெலிவரி செய்யப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ கார்களின் சரியான வேரியண்ட்கள் என்ன? என்பதும் தெரியவில்லை. எனினும் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரின் பேஸ் வேரியண்ட் இந்தியாவில் 55 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் பேஸ் வேரியண்ட் 75 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது.

45 பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை மொத்தமாக வாங்கிய பிரபல ஹோட்டல்... விலையை கேட்டதும் கண்ண கட்டுது...

இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். லீலா குழுமம் தற்போது வாங்கியுள்ள இந்த 3 மாடல்களில், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்தான் மிகவும் விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் பேஸ் வேரியண்ட் 1.35 கோடி ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே.

45 பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை மொத்தமாக வாங்கிய பிரபல ஹோட்டல்... விலையை கேட்டதும் கண்ண கட்டுது...

ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். இந்தியாவில் உள்ள பல முன்னணி ஹோட்டல்கள் தங்களது விருந்தினர்களை விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் இருந்து பிக்அப் செய்யவும், அவர்களை மீண்டும் டிராப் செய்யவும் மிகவும் விலை உயர்ந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றன.

45 பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை மொத்தமாக வாங்கிய பிரபல ஹோட்டல்... விலையை கேட்டதும் கண்ண கட்டுது...

இந்த வகையில் லீலா குழுமம் தற்போது வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ கார்களும், விருந்தினர்களை கனிவுடன் உபசரிக்க பயன்படுத்தப்படும். இந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார்களில் பயணம் செய்வதன் மூலமாக, லீலா குழுமத்தின் ஹோட்டல்களுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு மிக சிறப்பான அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
45 BMW Cars Delivered To Leela Group - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X