ஜி20 மாநாட்டிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்களின் கார்களை ஓட்டப்போவது இவங்கதானா? இது நமக்கு கிடைத்த பெருமையாச்சே
இந்தியாவில் ஜி20 மாநாடு நாளை (செப் 9) மற்றும் நாளை மறுநாள் (செப் 10) நடக்கிறது. இந்த மாநாட்டிற்காக உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தலைவர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள். இவர்கள் இந்த மாநாட்டிற்கு வருவதற்காக பயன்படுத்தும் கார்கள் குறித்த சில சுவாரசியமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அதைப்பற்றி தான் நாம் இங்கு விரிவாக காணப்போகிறோம்.
உலகம் முழுவதும் முக்கியமான 20 நாடுகள் கொண்ட ஜி20 கூட்டமைப்பின் இந்த ஆண்டுக்கான மாநாடு இந்தியாவில் நடக்கிறது. டெல்லியில் நாளை (செப் 9) மற்றும் நாளை மறுநாள் (செப் 10) நடக்க உள்ள இந்த மாநாட்டிற்காக உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தலைவர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள். முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதியும் இந்தியாவிற்கு இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகிறார்.

இந்த மாநாட்டிற்கு வரும் உலக தலைவர்கள் பயணிக்க இந்தியா பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அவர்கள் தங்கும் இடம் பயணிக்கும் வாகனம் அவர்களுக்கான பாதுகாப்பு என அனைத்தையும் இந்திய அரசாங்கமே வழங்குகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்கள் பயணிக்கும் கார்களை இயக்க இந்திய ராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் வலது பக்கம் ஸ்டியரிங் வீல் கொண்ட வாகனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவிற்கு வரும்போது அவர்கள் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் அதே காரை தான் இந்தியாவிலும் பயன்படுத்துவார்கள் அந்த கார்கள் இடது பக்க ஸ்டியரிங் கொண்ட காராக இருக்கலாம்.

இந்தியாவிற்குள் அவர்கள் அந்த காரில் பயணிக்கும் போது அந்த காரின் ஓட்டுனர் இந்தியாவில் நியமிக்கப்பட்ட நபராக தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த தலைவருக்கு ஏதாவது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஆபத்து இருந்தால் இந்திய ஓட்டுனர்களால் தான் பாதுகாப்பான பகுதிகள் எங்கு இருக்கிறது என்பதை யூகித்து உலகத் தலைவர்களை காப்பாற்ற முடியும் என்பதால் இந்திய ராணுவத்தை சேர்ந்த சிஆர்பிஎஃப் அமைப்பிலிருந்து தான் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிஆர்பிஎப்-ஐ சேர்ந்த 450 ஓட்டுனர்களுக்கு இடது பக்க ஸ்டேரிங் வீல் கொண்ட கார்களை ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உலக தலைவர்கள் அழைத்துச் செல்லும் கார்களை ஓட்ட நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசாங்கம் இப்படியாக வரும் வெளிநாட்டு தலைவர்களை அழைத்து வர புல்லட் புரூஃப் கொண்ட மற்றும் புல்லட் இல்லாத ஆடி மெர்சிடிஸ் பிஎம்டபிள்யூ ஹூண்டாய் போன்ற நிறுவனங்களின் கார்களை சொந்தமாக வாங்கியும் வாடகைக்கு எடுத்தும் உள்ளது.

இந்த கார்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் 41 முக்கிய விருந்தினர்கள் பயணிக்க உள்ளனர். இவர்கள் எல்லாம் டெல்லியை சுற்றி உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குகின்றனர். அங்கிருந்து நிகழ்ச்சி நடைபெறும் பாரத் மண்டபம் பகுதிக்கு இவர்கள் வரவேண்டும். அதற்காக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த காரின் மூலம் இவர்கள் விழா நடக்கும் இடத்திற்கு வர உள்ளனர் இந்த கார்களை தான் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஓட்டுகின்றனர்.
இந்த ஜி-20 மாநாட்டிற்காக ஆர்பிஎஃப்-ஐ சேர்த்த சுமார் 3.25 லட்சம் பாதுகாவலர்கள் பல்வேறு விதமான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். முக்கியமாக 6000 பாதுகாவலர்கள் ஒவ்வொரு தனிமனித இருக்குமான பாதுகாப்பை வழங்குகின்றனர். இதில் 149 பேருக்கு அதிக ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதற்கு இருப்பதால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அதிக அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 6000 வீரர்களில் 900 வீரர்கள் நேரடியாக விருந்தினருடன் தொடர்பில் இருக்கும் படி உத்தரவிட்டுள்ளனர். அதில் 450 பேர் அவர்களது கார் ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிஆர்பிஎஃப் வீரர்களுடன் கூடுதலாக ஸ்பெஷல் புரொடக்ஷன் குரூப் எனப்படும் எஸ்பிஜி மற்றும் நேஷனல் செக்யூரிட்டி கார்டு எனப்படும் என்எஸ்ஜி ஆகியோரும் சேர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதே நேரம் வெளிநாடுகளில் இருந்து வரும் விருந்தினர்கள் அவர்களது கணவன் அல்லது மனைவியுடன் வருவதற்கான அனுமதி இருக்கிறது. அவர்களுக்கான பாதுகாப்புகளை பயிற்சி அளிக்கப்பட்ட ஆண் பெண் கமாண்டோக்கள் மற்றும் பாராளுமன்ற போர்ஸ் எனப்படும் எஸ்எஸ்பி ஆகியோர் சேர்ந்து வழங்க உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து மட்டும் 60 இடதுபக்க ஸ்டியரிங் வீல் கொண்ட கார்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவர்கள் வாகனத்தை ஓட்டுவதற்காக சிறப்பான பயிற்சி வழங்கப்பட்ட ஓட்டுநர்கள் காரை போட்டு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்தியாவில் வலது பக்க டிரைவிங் சிஸ்டம் இருப்பதால் இடது பக்கம் ஸ்டேரிங் கொண்ட காரை வலது பக்கம் டிரைவிங் சிஸ்டம் கொண்ட ஒரு சாலையில் எப்படி ஓட்டுவது என அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜி-20 மாநாடு நடப்பது நமக்கு ஒரு பெருமையான தருணமாகவும் இதில் தலைவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமான விஷயம். இதற்காக இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது முக்கியமாக அதன் டிரைவர்களுக்கு சிறப்பு பயிற்சியை வழங்கி உலக தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே.


Click it and Unblock the Notifications
