49 லட்சம் பேராம்! எலிசபெத் ராணியின் கடைசி விமான பயணத்தை தேடி தேடி டிராக் செய்த மக்கள்! அப்படி என்னதான் இருக்கு
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கடைசி விமான பயணத்தை ஒரே நேரத்தில் எத்தனை பேர் டிராக் செய்து பார்த்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை காணலாம் வாருங்கள்.

இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் தனது 96வது வயதில் காலமானார். இவர் இறந்ததை முன்னிட்டு அந்நாட்டில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் இறந்த ராணியில் உடல் தற்போது லண்டனிற்கு கொண்டு வரப்பட்டது. பல்மோரால் அரண்மனையில் இறந்த ராணியில் உடல் அங்கிருந்து எடின் புராவிற்கு எடுத்து வரப்பட்டது.

பின்னர் எடின்புராவிலிருந்த ராணியின் உடன் விமானம் மூலம் லண்டனிற்கு எடுத்து வரப்பட்டது. இப்படியாக உலகம் முழுவதும் பறக்குமு் விமானத்தின் லைவ் லோகேஷனை வழங்கும் சேவையை Flightradar24 என்ற இணையதளம் வழங்குகிறது. இந்த தளத்தில் தற்போது குறிப்பிட்ட விமானம் எந்த பகுதி வழியாக எந்த ரூட்டில் பறந்து கொண்டிருக்கிறது என லைவ்வாக டிராக் செய்ய முடியும்.

மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணியின் உடன் இங்கிலாந்திற்கு போயீங் சி17ஏ என்ற க்ளோப் மாஸ்டர் என்ற விமானத்தில் எடுத்து செல்லப்பட்டது. இந்த விமானம் இவரது உடலை எடுத்து செல்ல பிரத்தியேமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்ஸ் நிறுவனம் கட்டமைத்த மெர்சிடீஸ் பென்ஸ் இ கிளாஸ் காரில் எடுத்து வரப்பட்ட அவரது உடல் விமானத்தில் ஏற்றப்பட்டு லண்டனிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விமானத்தின் லைவ் டிராக்கிங் Flightradar24 வெப்சைட்டில் கிடைத்தது.

இந்நிறுவனம் தற்போது மறைந்த இங்கிலாந்து ராணியின் உடன் சென்ற விமானத்தை எத்தனை பேர் டிராக் செய்து பார்த்தனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இந்த விமான பயணம் வெறும் 1.30 மணி நேரம் தான். இந்த பயணம் துவங்கும் போது கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் இந்த விமானத்தை டிராக் செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இது மட்டுமல்ல இந்த விமானத்தின் ஆரம்பம் முதல் இறுதி மொத்தம் 47.9 லட்சம் பேர் தொடர்ந்து இந்த விமானத்தை டிராக் செய்து கொண்டே இருந்துள்ளது. அந்த வெப்சைட்டில் இதுவரை இப்படியாக ஒரே விமானத்தை அதிகம் பேர் டிராக் செய்வது இது தான் முதன் முறை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்ல இந்த விமானத்தை யூடியூப் சேனலில் 2.5 லட்சம் பேர் இந்த விமான பயணத்தை லைஃவ்வாக பார்த்துள்ளனர். இந்த விமான பயணம் தான் இரண்டாம் எலிசபெத் ராணியின் கடைசி விமான பயணமாகும். இந்த விமான பயணத்தை பிரிட்டன் மக்கள் கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரால் அரண்மனையில் உயிரிழந்த இரண்டாம் எலிசபெத் ராணி உடன் தற்போது லண்டனில் உள்ள பக்கீங்ஹம் அரண்மனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அங்கு மக்களின் கண்ணீர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. வரும் செப் 19ம் தேதி இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டு இவரது உடல் அடக்கம் செய்யப்படும் என கூறுப்பட்டுள்ளது.

Flightradar24 வெப்சைட்டை பொருத்தவரை ஒரே விமானத்தை அதிக மக்கள் டிராக் செய்தது இதுவே முதன் முறை. இதற்கு முன்னர் அமெரிக்க ஒயின் ஹவுஸ் ஸ்பீக்கம் நேன்சி பெல்லோசி தைவானிற்கு ஒரு சர்ச்சைக்குரிய பயணத்தை மேற்கொண்டார். இந்த விமானத்தை 22 லட்சம் மக்கள் டிராக்க செய்தனர். அதன்பின்னர் எலிசபெத் ராணி பயணம் செய்தவிமானம் தான் டிராக் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications