மத்திய அரசு "4E" திட்டத்தை கையில் எடுக்க போறாங்க! இனி ரோட்டுல ஒரு விபத்து கூட நடக்காதாம்!

கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவில் சாலை விபத்தில் மட்டும் மொத்தம் 1.77 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த புள்ளி விபரங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பாராளுமன்றம் லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்கரி பதிலளித்துள்ளார். அதில் பல முக்கியமான புள்ளி விபரங்கள் வெளியாகியள்ளன.இதன்படி கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் 4.80 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளுது. அதில் 1.73 லட்சம் விபத்துக்களில் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் 1.77 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

4E Solution

தற்போதுஇந்தியா முழுவதும் பதிவாகும் சாலை விபத்து வழக்குகளை போலீசார் கட்டாயம் E-DAR என்ற போர்ட்லில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதன்படி இந்திபதிவில் உள்ளது பதிவில் உள்ளது படி சர்வதேச அளவில் உள்ளதை விட அதிக விபத்துக்கள் இந்தியாவில் நடந்துவருவது தெளிவாக தெரிய வந்துள்ளது. இதில் ஸ்டாக் ஹோம் உறுதியான 2030ம் ஆண்டிற்கும் சாலை சாலை விபத்துக்களில் ஏற்படும் மரணங்கள் மற்றம் காயங்களை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இது அதிகரித்துவருவதை நாம் காணங முடிகிறது. உலகிலேயே சாலை விபத்தில் அதிக மரணங்கள் நடப்பது இந்தியாவில் தான். இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு 11.89 பேர் சாலை விபத்தில் மரணமடைகின்றனர். ஆனால் கிட்டத்தட்ட இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட சீனா போன்ற நாடுகளில் 1 லட்சம் பேருக்கு 4.3 பேர் தான் மரணமடைகிறார்கள்.

4E Solution

இந்த தரவுகளை வைத்து பார்க்கும் போது ஒவ்வொரு மாநிலத்திலும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கைக்கும் அதில் ஏற்படும் மரணத்தின் எண்ணிக்கைக்கும் மாற்றம் உள்ளது. இதன்படி தமஙழகம் தான் அதிக அளவிலான விபத்துக்களை சந்திக்கிறது. ஆனால் அதில் ஏற்படும் மரணங்களின் குறைவு தான். இந்தியாவில் சாலை விபத்துக்களில் அதிக மரணங்களை எதிர்கொள்ளும் மாநிலம் உ.பி தான். இந்த மாநிலத்தில் நடக்கும் சாலை விபத்துக்களில் மரணங்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு 24,000 ஆக இருக்கிறது. இந்த மாநிலத்தில் நடக்கும் 50% சதவீதமான விபத்துகளில் மரணங்கள் நிகழ்கிறது.

இருப்பதிலேயே கேரள மாநிலத்தில் நடக்கும் விபத்தில் தான் மரணங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஒவ்வொர 13 விபத்துகளுக்கு ஒரு மரணம் நிகழ்கிறது. இந்த விபத்துகளை தவிர்க்கவும், மரணங்களின் எணிக்கையை குறைக்கவும் மத்திய அரசு "4E"என்ற கொள்கையை கையில் எடுத்துள்ளது . இதன்படி கல்வி, இன்ஜினியரிங், அமலாக்கம் மற்றும் எமர்ஜென்ஸி கேர் ஆகியவற்றை மேம்படுத்தினால் இந்த பிரச்சனை சரியாகும் என மத்திய அமைச்சர் தெரிவிக்கிறார்.

4E Solution

இதன்படி சாலையில் பயணிக்கும் விதிகளை மக்களுக்கு தெளிவாக கற்பிக்க வேண்டும். தரமான சாலைகளை விபத்துஏற்பாடாத வண்ணம் கட்டமைக்கவும், பராமரிக்கவும் வேண்டும், சாலை விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து நடந்தால் அவர்கள் உயிரை காப்பாற்றும் விஷயம் உடனடியாக நடக்க வேண்டும் இதை செய்தாலே பெரம்பாலும் விபத்து குறையும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலை பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் நிதிகள் 2.21 சதவீதம் முதல் 15 சதவீதமாக இருக்கிறது. இது மொத்த தேசிய நெடுஞ்சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பங்காகும். இந்நிலையில் சாலை விபத்துகளுக்கான காரணம் குறித்தும், அதை அறிவியல் பூர்வாக எதிர்கொள்வது குறித்தும், இதனால் விபத்துகளில் மரணம் ஏற்படுவதை தடுப்பது குறித்தும் தீவிரமாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, December 5, 2025, 13:56 [IST]
English summary
4e solution for road accident india records 1 77 lakh deaths 2024
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X