ஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...

முன்னணி நடிகர், நடிகைகள் வாங்கி குவித்துள்ள கார்களின் விலை நமக்கு தலை சுற்றலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...

திரைப்பட நடிகர், நடிகைகள் மிகவும் எளிதாக பெயரையும், புகழையும் சம்பாதித்து விடுகின்றனர். திரையில் மட்டுமல்லாது, நிஜத்திலும் அவர்களை ஹீரோவாக பார்க்க கூடிய ரசிகர்கள் இங்கு ஏராளமாக உள்ளனர். அப்படிப்பட்ட ரசிகர்களுக்காகதான் இந்த செய்தி. இருப்பதிலேயே திரைப்பட நடிகர், நடிகைகள்தான் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

ஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...

விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி குவிப்பது அவர்களின் வாடிக்கையாக உள்ளது. அப்படி திரைப்பட நடிகர், நடிகைகள் வாங்கும் விலை உயர்ந்த கார்களை பற்றிய செய்திகளை அவர்களது ரசிகர்கள் தேடி தேடி படித்து வருகின்றனர். எனவே பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் பயன்படுத்தி வரும் மிகவும் விலை உயர்ந்த கார்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...

ஹிரித்திக் ரோஷன் (Hrithik Roshan)

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II (Rolls Royce Ghost Series II)

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II காரின் கஸ்டமைஸ்ட் வெர்ஷனை ஹிரித்திக் ரோஷன் தனது 42ம் பிறந்த நாளை முன்னிட்டு வாங்கினார். இந்த காரில், 6.2 லிட்டர் ட்வின்-டர்போ வி12 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 563 எச்பி பவரையும், 780 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்கள்.

ஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் எட்டி விடும் திறனை ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II பெற்றுள்ளது. இந்த காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய். ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஒருவரின் அந்தஸ்தை வெளிக்காட்டும் அடையாளம் என்பதால், திரையுலக பிரபலங்கள் பலரும் அதனை வைத்துள்ளனர்.

ஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...

அஜய் தேவ்கன் (Ajay Devgan)

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan)

பாலிவுட் திரையுலகில் சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியவர்களில் அஜய் தேவ்கன் முக்கியமானவர். அவர் கல்லினன் காரை வாங்கியுள்ளார். இந்த காரின் அடிப்படை விலையே 6.95 கோடி ரூபாய் வருகிறது. ஆனால் அஜய் தேவ்கனின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என்பதால், அதன் விலை இன்னும் கூடுதலாக இருக்கலாம்.

ஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் எஸ்யூவி ரக கார் கல்லினன்தான். மேலும் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகவும் கல்லினன் உள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய திறனை ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பெற்றுள்ளது.

ஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...

ரன்வீர் சிங் (Ranveer Singh)

அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் (Aston Martin Rapide S)

32வது பிறந்த நாளை முன்னிட்டு ரன்வீர் சிங் தனக்கு தானே அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் காரை பரிசளித்து கொண்டார். இந்த காரில் வழங்கப்பட்டுள்ள நேச்சுரலி அஸ்பிரேட்டட் 6.0 லிட்டர் வி12 இன்ஜின் அதிகபட்சமாக 552 பிஎச்பி பவரையும், 630 என்எம் டார்க் திறனை வாரி வழங்க கூடியது. இதன் மூலம் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.2 வினாடிகளில் இந்த கார் எட்டி விடும்.

ஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...

அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் காரின் விலை 3.80 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ரன்வீர் சிங்கிடம் இன்னும் விலை உயர்ந்த பல்வேறு கார்களும் உள்ளன. இதில், லம்போர்கினி உருஸ் முக்கியமானது. இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் லம்போர்கினி கார்களில் உருஸ் மாடலும் ஒன்று. பாலிவுட் மட்டுமின்றி கன்னட திரையுலக பிரபலங்கள் பலரிடமும் இந்த கார் உள்ளது.

ஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...

ஜான் ஆபிரகாம் (John Abraham)

லம்போர்கினி கல்லார்டோ (Lamborghini Gallardo)

பாலிவுட் திரையுலகின் ஆட்டோமொபைல் ஆர்வலர்களில் ஜான் ஆபிரகாம் முக்கியமானவர். சூப்பர் கார்கள் மட்டுமின்றி, சூப்பர் பைக்குகளையும் அவர் வைத்துள்ளார். அவரிடம் உள்ள கார்களில் லம்போ கல்லார்டோ குறிப்பிடத்தகுந்தது. லம்போர்கினி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் சூப்பர் கார்களில் ஒன்றாக கல்லார்டோ இருந்தது.

ஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...

இதன் எக்ஸ் ஷோரூம் விலையே சுமார் 3 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வரும். ஆனால் அவ்வளவு பணத்தை நீங்கள் தற்போது வைத்திருந்தாலும், புதிய லம்போர்கினி கல்லார்டோ காரை வாங்க முடியாது. ஏனெனில் அந்த கார் தற்போது உற்பத்தியில் இல்லை. ஆனால் லம்போர்கினி கல்லார்டோ காரின் ரசிகர்கள் பலர் இன்னமும் அதனை வைத்துள்ளனர்.

ஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...

மல்லிகா ஷெராவத் (Mallika Sherawat)

லம்போர்கினி அவென்டெடார் எஸ்வி (Lamborghini Aventador SV)

சில்வர் ஸ்க்ரீனில் நீங்கள் மல்லிகா ஷெராவத்தை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? என்பதை மறந்து போயிருக்கலாம். ஆனால் இன்ஸ்டாகிராமில் நீங்கள் மல்லிகா ஷெராவத்தை பின்தொடர்ந்தால், அவர் எவ்வளவு ஆடம்பரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்பது தெரியும். மல்லிகா ஷெராவத் தற்போது பாரீஸில் வசித்து வருகிறார்.

ஆடம்பரம்... சொகுசு கார்களை வாங்கி குவிக்கும் நடிகர்கள்... விலையை கேட்டு வாயை பிளக்கும் ரசிகர்கள்...

அங்கு அவரிடம் விலை உயர்ந்த கார்கள் பல உள்ளன. இதில், லம்போர்கினி அவென்டெடார் எஸ்வி மாடலும் ஒன்று. இது 2 சீட்டர் கார் ஆகும். வெளிநாடுகளில் இந்த காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் மூன்று கோடி ரூபாய் மட்டுமே (எக்ஸ் ஷோரூம்). ஆனால் இந்தியாவில் அதிகப்படியான வரி காரணமாக இதன் விலை 8 கோடி ரூபாயாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 28, 2020, 20:03 [IST]
English summary
5 Bollywood Celebrities And Their Expensive Cars. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+