ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

சச்சின் உள்ளிட்ட இந்திய பிரபலங்களின் முதல் கார் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

முதன் முதலில் வாங்கிய கார் அல்லது பைக் போன்ற வாகனங்கள் எப்போதுமே ஸ்பெஷலானதுதான். அதன் பின்பு எவ்வளவு விலை உயர்ந்த வாகனங்களை வாங்கினாலும், முதன் முதலில் வாங்கிய வாகனங்களுக்கு ஒருவரின் மனதில் இருக்கும் மதிப்பு தனி. பாலிவுட் நடிகரான ஜான் ஆபிரகாம் பேட்டி ஒன்றில் ஒரு முறை அவரது முதல் கார் பற்றி குறிப்பிட்டார்.

ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

இந்தியர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும் டாடா சியராதான் ஜான் ஆபிரகாமின் முதல் கார். அதே சமயம் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கானின் முதல் கார் மாருதி ஆம்னி என செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலங்களின் முதல் கார் எது? என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் அனைவருக்கும் இருக்கும்.

ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

அப்படிப்பட்டவர்களுக்காகதான் இந்த செய்தியை வழங்கியுள்ளோம். இதில், இந்தியாவில் மிக பிரபலமாக திகழும் நட்சத்திரங்களின் முதல் கார் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தகவல்கள் உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தினால், ஆச்சரியப்படுவதற்கில்லை. வாருங்கள் இனி செய்திக்குள் செல்வோம்.

ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

கஜோல் - மாருதி சுஸுகி 1000

ஒரு காலத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த கஜோல், புத்தம் புதிய மாருதி சுஸுகி 1000 மாடலை தனது முதல் காராக வாங்கினார். இது செடான் ரக கார் ஆகும். மாருதி சுஸுகி 1000 காருடன் தான் இருப்பது போன்ற புகைப்படத்தை, கொஞ்ச காலத்திற்கு முன்பு கஜோல் அப்லோட் செய்திருந்தார்.

ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

அத்துடன் இந்த கார்தான் தனது முதல் காதல் எனவும் அவர் கூறியிருந்தார். மாருதி சுஸுகி 1000 ஒரு காலத்தில் இந்தியா முழுவதுவும், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கால கட்டங்களில், அந்தஸ்தை காட்டும் அடையாளமாக இந்த கார் கருதப்பட்டது. எனவே போட்டி போட்டு கொண்டு பலர் இந்த காரை வாங்கினர்.

ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

தீபிகா படுகோன் - ஆடி க்யூ7

முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனின் முதல் கார் ஆடி க்யூ7. தீபிகா படுகோனிடம் பல்வேறு சொகுசு கார்கள் தற்போது சொந்தமாக இருக்கின்றன. இதில், மெர்சிடிஸ்-மேபேக் எஸ்500 மற்றும் ஆடி ஏ8எல் போன்ற கார்கள் குறிப்பிடத்தகுந்தவை. ஆனால் ஆடி க்யூ7தான் தீபிகா படுகோன் முதன் முதலில் வாங்கிய கார்.

ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

ஆடி க்யூ7 காரை தீபிகா படுகோன் பல ஆண்டுகளாக தினமும் பயன்படுத்தி வந்தார். மெர்சிடிஸ்-மேபேக் எஸ்500 காருக்கு மாறுவதற்கு முன்பாக அவரது கராஜில் இருந்த ஒரே ஒரு காரும் ஆடி க்யூ7தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தீபிகா படுகோன் ஏராளமான சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.

ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

அலியா பட் - ஆடி க்யூ7

தீபிகா படுகோனை போல், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அலியா பட்டின் முதல் காரும் ஆடி க்யூ7தான். ஆடி க்யூ7 காரை முதல் முறையாக வாங்கியபோது, அதன் புகைப்படத்தை அலியா பட் அப்லோடு செய்தார். ஆடி க்யூ7 காரை அலியா பட் தனது தினசரி பயணங்களுக்கு நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தார்.

ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

அதன்பின் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காருக்கு அவர் மாறினார். ஆனால் ஆடி க்யூ7 காரை அலியா பட் இன்னமும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக வாங்கிய கார் என்பதால், ஆடி க்யூ7 காரை அலியா பட் இன்னமும் கராஜில் பராமரிக்க கூடும்.

ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

சச்சின் டெண்டுல்கர் - மாருதி 800

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் மாருதி 800 மாடல்தான் சச்சின் டெண்டுல்கரின் முதல் கார். தற்போது அவரிடம் விலை உயர்ந்த கார்கள் பல இருக்கலாம். ஆனால் அவரது மனதில் முதல் காரான மாருதி 800க்கு எப்போதுமே தனி இடம் இருக்கிறது. கிரிக்கெட்டை போலவே கார்களையும் சச்சின் டெண்டுல்கர் அதிகம் நேசிக்க கூடியவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

மைக்கேல் சூமேக்கரிடம் இருந்து ஃபெராரி காரை சச்சின் டெண்டுல்கர் ஒரு முறை பரிசாக பெற்றுள்ளார். பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக சச்சின் தற்போது இருந்து வருகிறார். அவரிடம் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் உள்ளன. ஆனால் சாதாரணமான மாருதி 800 ஹேட்ச்பேக்தான் அவரது முதல் கார்.

ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

மாருதி 800 மட்டுமல்லாது, மாருதி சுஸுகி 1000 காரையும் சச்சின் டெண்டுல்கர் வாங்கினார். இந்த கார்தான் பின் நாட்களில், எஸ்டீம் என அறியப்பட்டது. சச்சின் மட்டுமல்லாது நம்மில் பலருக்கும் கூட அனேகமாக மாருதி 800 மாடல்தான் முதல் காராக இருந்திருக்கும். சந்தையில் இருந்து விடைபெற்று விட்டாலும் கூட, இந்தியர்களின் மனதில் மாருதி 800 காருக்கு அம்பாஸிடரை போல் எப்போதுமே தனி இடம் உண்டு.

ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

இம்தியாஸ் அலி - மாருதி 800

ஏற்கனவே சொன்னது போல, மாருதி 800 மாடல்தான் நம்மில் பலருக்கும் முதல் கார். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரை போல், பாலிவுட் திரையுலகின் இயக்குனர்களில் ஒருவரான இம்தியாஸ் அலிக்கும் மாருதி 800தான் முதல் கார். இன்ஸ்டாகிராம் மூலம் அவர் இந்த தகவலை சமீபத்தில்தான் கூறினார். ஆனால் இம்தியாஸ் அலியிடம் அந்த கார் தற்போது இல்லை என கூறப்படுகிறது.

ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

கங்கனா ரனாவத் (Kangana Ranaut)

பிஎம்டபிள்யூ 7-சீரிஸ்

பிரபல திரைப்பட நடிகையான கங்கனா ரனாவத் தனது கேரியரின் தொடக்கத்தில் மிகச்சிறப்பான பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார். இதன் மூலம் அவர் புகழின் உச்சத்தை தொட்டார். பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் கார்தான், கங்கனா ரனாவத்தின் முதல் கார். இது லக்ஸரி செடான் ரக கார் ஆகும். புத்தம் புதியதாக அவர் இந்த காரை வாங்கினார்.

ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காருடன் கங்கனா ரனாவத்தை பல முறை பார்க்க முடிந்துள்ளது. பார்ட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு கங்கனா ரனாவத் இந்த காரைதான் அதிகம் பயன்படுத்தியுள்ளார். மேலும் தனது தினசரி பயன்பாடுகளுக்கும் அவர் இந்த காரைதான் பயன்படுத்தினார். ஆனால் சமீபத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ காருக்கு அவர் மாறி விட்டார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
5 Indian Celebrities And Their First Cars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X