இந்தியால இந்த கார்களுக்கு பாதுகாப்பு ரொம்ப ரொம்ப கம்மி! தனியா விட்டு போன திரும்பி வருவதற்குள் காணாம போயிரும்!
இந்தியாவின் தலைநகரமாக மட்டுமே டெல்லியை பல பேருக்கு தேரியும். இந்த நகரம் இன்னும் பல விஷயங்களில் முன்னணி இடத்தில் இருக்கின்றது. காற்று மாசில் கூட இந்த நகரம் முதல் இடத்தில் உள்ளது. இதுமட்டுமில்லைங்க அதிர்ச்சிகரமாக, வாகன திருட்டு நடைபெறும் இந்தியாவின் முன்னணி நகரமாகவும் டெல்லி இருக்கின்றது.
ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஓர் கார் தலைநகர் டெல்லியில் திருடு போவதாக கூறப்படுகின்றது. சமீபத்திய தகவல்கள் வாயிலாகவே இந்த உறுதியாகி இருக்கின்றது. கடந்த காலங்களில் நாட்டில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் களவு போயிருக்கின்றன. இதில் 56 சதவீதம் டெல்லியிலேயே காணாமல் போனதாக புதிய ரிப்போர்ட்டுகள் கூறுகின்றன.

இதுமட்டுமில்லைங்க, திருடர்களுக்கு பிரியமான கார் மாடல்கள் எது என்கிற தகவலும் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது, திருடர்கள் அதிகம் விரும்பி திருடும் டாப் கார் மாடல்கள் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இந்தியார்களின் ஃபேவரிட் கார் மாடலாக ஸ்விஃப்ட் இருக்கின்றது. காசு கொடுத்து வாங்குபவர்களுக்கு மட்டுமல்ல களவானிகளுக்கும் இந்த காரே பிடித்தமான காராக இருக்கின்றது. இதனால்தான் இந்தியாவில் அதிகம் திருடப்படும் கார்களின் பட்டியலில் ஸ்விஃப்ட் முன்னணி இடத்தில் உள்ளது.
பராமரிப்பு செலவு, விலை மலிவு, அதிகம் மைலேஜ் தரும் என்பது பல்வேறு காரணங்களுக்காக இந்த கார் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. விற்பனை அதிகம் என்பதால் இதன் உதிரி பாகங்களும் சேல்ஸில் அதிகமாக உள்ளது. இதன் காரணத்தினாலேயே, அதாவது, உதிரிபாகங்களுக்காகவே சில ஸ்விஃப்ட் கார்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR): இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக வேகன்ஆர் இருக்கின்றது. இதனை இந்தியர்கள் செல்லமாக டால் பாய் என்று அழைக்கின்றது. அதிக உயரமான தோற்றம் கொண்டிருப்பதனால் இந்த ஹேட்ச்பேக் காருக்கு இந்த செல்ல பெயர் உண்டு. மேலும், மிகவும் மலிவு விலைக் கொண்ட காராகவும் வேகன்ஆர் காட்சியளிக்கின்றது.
இந்த கார் கடந்த 1999 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் விற்பனையில் உள்ளது. சமீபத்திலேயே இதன் விற்பனை 3 மில்லியனைக் கடந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய அமோக வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலே திருடு போவதிலும் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கின்றது. ஆமாங்க, திருடர்களின் ஃபேவரிட் கார் மாடலாக வேகன்ஆர் இருக்கின்றது.
ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta): இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடலாக கிரெட்டா இருக்கின்றது. இதேபோல், இந்தியாவில் அதிகம் திருடும்போகும் கார் மாடலாகவும் இது இருக்கின்றது. இந்த காரும் அதிகம் ஸ்பேர் பார்ட்ஸுக்காகவே திருடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில கார்கள் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைச் செய்வதற்காகவும் திருடப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹூண்டாய் சேன்ட்ரோ (Hyundai Santro): இந்த கார் இப்போது விற்பனையில் இல்லை. இருப்பினும், சாலையில் இந்த கார் இப்போது பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த கார்களையே திருடர்கள் குறி வைத்துக் கொண்டிருக்கின்றனர். விற்பனையில் இல்லாத கார் என்பதால் செகண்ட் ஹேண்ட் சந்தையிலும், ஸ்பேர் பார்ட்ஸுக்கும் இந்த காருக்கு நல்ல வரவேற்பு நிலவுகின்றது. இதன் காரணத்தினாலேயே இந்த காரை திருடர்கள் அதிகம் விரும்பி திருடுகின்றனர்.
ஹோண்டா சிட்டி (Honda City): இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் ரக கார் மாடலாக சிட்டி இருக்கின்றது. இந்த கார் ஹைபிரிட் மற்றும் ஹைபிரிட் அல்லாதது என இரு விதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக இது இருப்பதனாலேயே திருடுபோவதிலும் இந்த கார் முன்னணி இருக்கின்றது. இந்தியாவில் நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் கார் மாடலாக இது இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்து கார் மாடல்களும் நல்ல விற்பனையைப் பெறும் கார் மாடல்களாக இருக்கின்றன. இந்த காரணத்தினாலேயே திருடுபோவதிலும் அவை முன்னணி இடத்தில் இருக்கின்றன. ஒருவேளை இந்த கார் மாடல் உங்களிடத்தில் இருக்கும் என்றால் அதை பத்திரமாக வைத்துக் கொள்வது உங்களது கடமை ஆகும்.


Click it and Unblock the Notifications








