அம்பானியின் பாதுகாப்பிற்கு இவ்வளவு உயர் ரக கார்களா? எல்லாம் யார் வீட்டு காசு?

இந்திய தொழில் அதிபர் அம்பானி குடும்பத்தினரின் பாதுகாப்பு பல உயர் ரக கார்கள் பயன்படுத்தப்பட்டுகிறது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிளஸ் செக்யூரிட்டி அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக இது பயன்படுகிறது.

By Balasubramanian

இந்திய தொழில் அதிபர் அம்பானி குடும்பத்தினரின் பாதுகாப்பு பல உயர் ரக கார்கள் பயன்படுத்தப்பட்டுகிறது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிளஸ் செக்யூரிட்டி அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக அம்பானியே சில விலை உயர்ந்த கார்களை வாங்கி கொடுத்துள்ளார். அவர் பாதுகாப்பு படையில் அணி வகுக்கும் கார்கள் குறித்த தகவல்களை இங்கே நாம் அணிவகுப்போம் வாருங்கள்.

அம்பானியின் பாதுகாப்பிற்கு இவ்வளவு உயர் ரக கார்களா? எல்லாம் யார் வீட்டு காசு தெரியுமா?

இந்தியாவின் மிக முக்கிய தொழில் அதிபராக உள்ள முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் அந்து பாதுகாப்பு படையில் உள்ள அதிகாரிகள் தான் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவர். அவருக்கு வரும் பல மரட்டல்களுக்காக இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அம்பானியின் பாதுகாப்பிற்கு இவ்வளவு உயர் ரக கார்களா? எல்லாம் யார் வீட்டு காசு தெரியுமா?

அவரும் எப்பொழுதும் குண்டு துளைக்காத மெர்சிடியஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், கார் மற்றம் பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் கார்களிலேயே பயணம் மேற்கொள்வார். ஆம்பானியிடம் இது போன்ற பல வகையான ஆடம்பர கார்கள் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் அம்பானி குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கும் இசட் பிளஸ் காவலர்கள் எதில் பயணம் செய்கிறார்கள் தெரியுமா?

அம்பானியின் பாதுகாப்பிற்கு இவ்வளவு உயர் ரக கார்களா? எல்லாம் யார் வீட்டு காசு தெரியுமா?

பிஎம்டபிள்யூ எக்ஸ் 5

அம்பானிகுடும்பத்தினரின் பாதுகாப்பு அதிகாரிகள் பயன்படுத்தும் காரில் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 கார் மிக அதிக அளவில் இருக்கிறது. மிக விலை உயர்ந்த காரான இந்த காரை இது வரை இந்திய போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தியதே இல்லை முதல் முறையாக அம்பானியின் இசட் பிளஸ் பாதுகாப்பு அதிகாரிகள் தான் இதை பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் பயன்பாட்டிற்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் அம்பானி தான் இந்த காரை வழங்கியுள்ளார்.

இந்த கார் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் இன்ஜினை கொண்டது. இது டிவின் ஸ்கோரோல் டர்போ சக்தியை பெற்றது. இது 258 பி.எச்.பி பவரையும், 560 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ 70 லட்சம். இந்த கார் தான் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள் பயன்படுத்தும் விலை உயர்ந்த கார்

அம்பானியின் பாதுகாப்பிற்கு இவ்வளவு உயர் ரக கார்களா? எல்லாம் யார் வீட்டு காசு தெரியுமா?

ஃபோர்டு என்டெவர்

அம்பானியின் குடும்பத்தினர் அவ்வப்போது தனித்தனியாக வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அவ்வாறான சமயங்களில் அவர்களுக்க பாதுகாப்பு வழங் அதிக கார்கள் தேவைப்படும். ஃபோர்டு என்டெவர் கார் தான் அவர்கள் பயன்படுத்தும் இரண்டாவது விலை அதிகமான கார்.

இந்த கார் 3.2 லிட்டர் இன்ஜின் கொண்டது. இது 197 பிஎச்பி பவரையும், 470 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்திய மார்க்கெட்டில் இதை விட குறைந்த அம்சங்கள் அடங்கிய என்டெவர் கார்விற்பனையாகி வருகிறது.

அம்பானியின் பாதுகாப்பிற்கு இவ்வளவு உயர் ரக கார்களா? எல்லாம் யார் வீட்டு காசு தெரியுமா?

மஹேந்திர ஸ்கார்ப்பியோ

பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்திய போலீசார் இந்த ஸ்கார்ப்பியோ காரை பயன்படுத்தி வருகின்றனர். மஹாராஷ்டிரா போலீஸிற்கு சொந்தமான இந்த காரில் அம்பானி குடும்பத்தினர் மும்பையில் இருக்கும் போது இந்த காரில் அம்மாநில போலீசாரும் பாதுகாப்பில் இணைந்து விடுவார்கள். அவர் இந்தியாவில் இருக்கும் நேரத்தில் பெரும்பாலான நேரம் மும்பையில் இருப்பதால் இந்த ஏற்பாடு.

இந்த கார் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்டது. இது 118 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் அம்மாநிலத்தில் உள்ள எல்லா போலீஸ் காரிலும் உள்ளது போல மேல சைரன் பொருத்தப்பட்டுள்ளது.

அம்பானியின் பாதுகாப்பிற்கு இவ்வளவு உயர் ரக கார்களா? எல்லாம் யார் வீட்டு காசு தெரியுமா?

டொயோட்டா பார்ச்சூனர்

அம்பானியில் பாதுகாப்பு படையில் டொயோட்டா பார்ச்சூனர் காருக்கும் ஒரு முக்கிய இடம் உள்ளது. புதிய மற்றும் பழைய மாடல் பார்ச்சூனர் கார்களை அம்பானியின் பாதுகாப்பு படையில் உள்ளது. இந்த கார் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது. இது 147 பிஎச்பி பவரையும் 400 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மற்றொரு மாடலில் 2.7 லிட்டர் டீசல் இன்ஜினுடன் 161 பிஎச்பி பவரையும் 242 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இவரது பாதுகாப்பு படையில் உள்ள எல்லா பார்ச்சூனர் காரும் வெள்ளை நிற கார்கள் தான். இதில் எதிலும் சைரன்கள் பொருத்தப்படவில்லை.

இந்தியாவில் இரண்டு வித பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களும் இந்த கார் கிடைக்கிறது. 2டபிள்யூடி என்ற வேரியண்ட் 2.0 லிட்டர் 4 லிட்டர் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டது. இது 154 பிஎச்பி பவரையும்-190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. மற்றொரு வேரியன்டான 4டபிள்யூடி மாடல் 2.4 லிட்டர் இன்ஜினுடன் 187 பி.எச்.பி பவரையும் 226 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Article Published On: Sunday, May 27, 2018, 11:23 [IST]
English summary
5 SUVs that Ambani’s security guards use: BMW X5 to Toyota Fortuner, caught on video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+