ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

ஹெல்மெட் வாங்கும்போது, என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது மிகவும் அவசியம். பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதிமுறை. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு கருதிதான் இத்தகைய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏதோ ஒரு ஹெல்மெட்டை அணிந்தால் போதும் என்று நினைப்பது தவறு.

ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

நீங்கள் எப்பேர்பட்ட மோசமான விபத்தில் சிக்கினாலும் கூட ஒரு சரியான ஹெல்மெட் உங்கள் தலையை பாதுகாத்து விடும். ஆனால் ஒரு தவறான ஹெல்மெட் சூழ்நிலையை இன்னும் மோசமாக்கி விடும். எனவே சரியான ஹெல்மெட்டை அணிவது முக்கியம். ஹெல்மெட் வாங்கும்போது ஒரு சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொண்டால்தான், சரியான ஹெல்மெட்டை உங்களால் தேர்வு செய்ய முடியும்.

ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

ஆனால் ஹெல்மெட் வாங்கும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஹெல்மெட் விற்பனை செய்யும் கடைக்கு சென்று ஏதோ ஒன்றை வாங்கி வந்து விடுகின்றனர். எனவே ஹெல்மெட் வாங்கும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? என்ற தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தகவல்கள் உங்களுக்கு நிச்சயமாக பலன் அளிக்கும்.

ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

1. ஐஎஸ்ஐ தரச்சான்று!

சந்தையில் நிறைய ஹெல்மெட்கள் கிடைக்கின்றன. ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்களது ஹெல்மெட்கள் ரைடர்களுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்கும் என தெரிவிக்கின்றன. ஆனால் ஐஎஸ்ஐ (ISI - Indian Standards Institute) முத்திரை பதிக்கப்பட்ட ஹெல்மெட்கள் இந்த விஷயத்தில் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

ஐஎஸ்ஐ லோகோ உள்ள ஹெல்மெட்களை வாங்குவதுதான் நல்லது. ஏனெனில் வரையறுக்கப்பட்ட தர நிர்ணயங்களுக்கு ஹெல்மெட் இணங்குகிறது என்பதை ஐஎஸ்ஐ முத்திரை நமக்கு உறுதியளிக்கிறது. எனினும் சாதாரண ஹெல்மெட்களை விட ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற ஹெல்மெட்களின் விலை சற்று அதிகமாக இருக்கலாம். இருப்பினும் ஐஎஸ்ஐ ஹெல்மெட்களை வாங்குவதுதான் உங்களுக்கு நன்மை பயக்கும்.

ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு சிலர் ஐஎஸ்ஐ முத்திரை மட்டும் இருந்தால் போதும் என நினைத்து கொள்கின்றனர். ஆனால் அந்த ஹெல்மெட் உங்களுக்கு சரியானதா? என்பதையும் கண்டறிய வேண்டும். அதற்கு கீழே உள்ள காரணிகளை நீங்கள் கவனத்தில் கொள்வது அவசியம். ஐஎஸ்ஐ முத்திரையுடன், இந்த காரணிகளையும் கவனத்தில் கொண்டால், உங்களுக்கு நல்ல ஹெல்மெட் கிடைக்கும்.

ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

2. தலையின் அளவு மற்றும் வடிவம்!

ஒவ்வொருவருடைய தலையின் அளவு மற்றும் வடிவம் மாறுபடும். அதை நாம் தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. பெரும்பாலும் தலையின் வடிவத்தில் 3 வகைகள்தான் இருக்கின்றன. அவை ரவுண்ட் ஓவல் (Round Oval), இன்டர்மீடியேட் ஓவல் (Intermediate Oval) மற்றும் லாங் ஓவல் (Long Oval) என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

இதில் உங்கள் தலை எந்த வகையை சேர்ந்தது? என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். அதாவது தலையின் கட்டமைப்பை நீங்களே நன்கு கவனித்து முடிவு செய்யலாம். அல்லது நண்பர்களிடம் ஆலோசனையும் கூட கேட்கலாம். உங்கள் தலையில் தவறான பாயிண்ட்களில் ஹெல்மெட் அழுத்தம் கொடுக்கிறது என்றால், அது நிச்சயமாக நீங்கள் அணிய வேண்டிய ஹெல்மெட் கிடையாது.

ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

எனவே உங்கள் தலையில் ஹெல்மெட் எங்கு அழுத்தம் கொடுக்கிறது என்பதை பொறுத்து அந்த ஹெல்மெட் ஏற்றதா? என்பதை தீர்மானியுங்கள். சரியான அளவுடைய ஒரு ஹெல்மெட் உங்கள் தலையில் கீரிடம் போல துல்லியமாக பொருந்தும். உங்கள் தலைக்கு ஏற்ற சரியான அளவுடைய ஹெல்மெட்டை தேர்வு செய்வது சிறந்தது.

ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

3. வைசர்!

புதிய ஹெல்மெட்களை வாங்கும்போது அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டிய பாகங்களில் வைசரும் ஒன்று. இதுதான் உங்களுக்கு தெளிவான விஷனை வழங்கும். அதாவது தெளிவான பார்வையை வழங்கும். எனவே வைசர் 'க்ளியர்' ஆக இருக்க வேண்டும். கவர்ச்சிகரமாக இருக்கிறது என்பதற்காக வைசரை தேர்வு செய்யாமல், பார்வை தெளிவாக உள்ளதா? என்பதை பார்த்து தேர்வு செய்யுங்கள்.

ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

4. குஷனிங்!

விபத்து நேரிட்டால் மண்டை ஓட்டில் சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதற்காகதான் ஹெல்மெட்டை அணிகிறோம். இந்த விஷயத்தில் ஹெல்மெட்டின் உட்புற குஷனிங் (Inner Cushioning) முக்கிய பங்கு வகிக்கிறது. எனவெ ஹெல்மெட்டில் முறையான குஷனிங் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். விசையை குறிப்பிடத்தக்க அளவில் உறிஞ்சி கொள்ளும் திறன் அதற்கு இருக்கும்.

ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

அதேபோல் ஹெல்மெட்டின் உட்புற மேற்பரப்பு தட்டையாக இல்லை என்பதையும் நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இரு சக்கர வாகனங்களுக்கான ஹெல்மெட்கள் எதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளனவோ, அந்த பாதுகாப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்காது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

5. பிடிமானம்!

மோசமான சூழ்நிலைகளின்போது உங்கள் தலையிலேயே இருக்கும் ஹெல்மெட்கள்தான் உங்களை பாதுகாப்பவையாக கருதப்படுகின்றன. மற்றவை எல்லாம் உங்கள் தலை மீது தேவையில்லாமல் இருக்கும் சுமைதான். அதாவது அந்த ஹெல்மெட்களை அணிந்திருப்பதும் ஒன்றுதான். அணியாமல் இருப்பதும் ஒன்றுதான்.

ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

நீங்கள் ஒரு ஹெல்மெட்டை வாங்குவதாக முடிவு செய்தால், அதன் நாடாவை இறுக்கமாக கட்டி கொள்ளுங்கள். அதற்கு பிறகு பின்னால் இருந்து அதனை இழுக்க முயற்சி செய்யுங்கள். அப்போது ஹெல்மெட் உங்கள் தலையில் இருந்து உருண்டு வருவதை போன்று தோன்றுகிறதா? என்பதை பரிசோதனை செய்யுங்கள். அப்போது ஹெல்மெட் உருண்டு வந்தால், நாடாவை மீண்டும் அட்ஜெஸ்ட் செய்யுங்கள்.

ISI முத்திரை மட்டும் போதாது! ஹெல்மெட் வாங்கும்போது இந்த 4 விஷயங்களையும் பாக்கணும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

ஆனால் நாடாவை மீண்டும் அட்ஜெஸ்ட் செய்த பின்னரும் இது தொடர்ந்து நடந்தால் அது நிச்சயமாக உங்கள் பயணத்திற்கு ஏற்ற ஹெல்மெட் கிடையாது. பிடிமானம் சரியாக இல்லாவிட்டால் அந்த ஹெல்மெட்டை அணிந்தாலும் ஒரு பலனும் கிடைக்காது. அதாவது ஒருவேளை விபத்து நேரிட்டால் ஹெல்மெட் உங்கள் தலையில் இருந்து வெளியேறாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பு கிடைக்கும்.

Article Published On: Wednesday, February 2, 2022, 16:31 [IST]
English summary
5 things to consider when buying a two wheeler helmet
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+