கைக்குழந்தையை விமானத்தில் அழைத்து செல்ல போகிறீர்களா? அப்போ இந்த 5 விஷயங்களை தெரிஞ்சி வெச்சிக்கோங்க!!

பயணம் என்றாலே நமக்கு எங்கிருந்துதான் அத்தகைய புத்துணர்ச்சி வந்துவிடுமோ என்று தெரியாது. அதிலிலும் விமான பயணங்களை பற்றி சொல்லவே வேண்டாம்.

Recommended Video

Two-Wheeler Helmets Explained In Tamil | Types Of Helmet | உங்க வண்டிக்கு எந்த ஹெல்மெட் மேட்ச் ஆகும்? *Facts

முதல்முறையாக விரைவில் விமானத்தில் பயணிக்க போகிறோம் என நினைக்கும்போதே சந்தோஷம் தொற்றிக்கொள்ளும். ஆனால் கைக்குழந்தைகளுடன் பயணம் செய்வது உண்மையில் சற்று சிரமமான விஷயமே.

கைக்குழந்தையை விமானத்தில் அழைத்து செல்ல போகிறீர்களா? அப்போ இந்த 5 விஷயங்களை தெரிஞ்சி வெச்சிக்கோங்க!!

சிறுவர், சிறுமியர் என்றால் கூட பரவாயில்லை, ஆனால் கைக்குழந்தைகள் எப்போது எத்தகைய உணர்வை வெளிப்படுத்தும் என்பதை யூகிப்பது கஷ்டம். இருப்பினும், தனது கைக்குழந்தையை விமானத்தில் அழைத்து செல்ல வேண்டும் என நினைக்கும் தாய் பெண்மணிகள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்.

கைக்குழந்தையை விமானத்தில் அழைத்து செல்ல போகிறீர்களா? அப்போ இந்த 5 விஷயங்களை தெரிஞ்சி வெச்சிக்கோங்க!!

1. பயணிக்கும் நேரம்

நடக்க இயலாத கைக்குழந்தை உடன் விமானத்தில் பயணம் செய்யவுள்ளீர்கள் எனில், நீங்கள் பயணம் செய்யவுள்ள நேரத்தை சரியாக தேர்வு செய்வது முக்கியமாகும். அதாவது, பொதுவாக குழந்தைகள் ஒரு நாளில் பெரும்பான்மையான நேரங்களை தூங்கியே கழிக்கும் என்பது தெரிந்த விஷயமே.

கைக்குழந்தையை விமானத்தில் அழைத்து செல்ல போகிறீர்களா? அப்போ இந்த 5 விஷயங்களை தெரிஞ்சி வெச்சிக்கோங்க!!

முழித்திருக்கும் நேரமும், சாப்பிடும் நேரமும் குறைவே. இருப்பினும், உங்களது குழந்தை வழக்கமாக தினந்தோறும் நீண்ட நேரத்திற்கு தூங்கும் நேரத்தை அறிந்து வைத்திருந்து, அந்த நேரத்தில் நீங்கள் விமானத்தில் பயணம் செய்வதுபோல் டிக்கெட்டை புக் செய்தால் நல்லது. ஏனெனில், குழந்தை தூங்கினால்தான் உங்களாலும் சற்று ஓய்வு எடுத்துக்கொள்ள முடியும்.

கைக்குழந்தையை விமானத்தில் அழைத்து செல்ல போகிறீர்களா? அப்போ இந்த 5 விஷயங்களை தெரிஞ்சி வெச்சிக்கோங்க!!

2. குழந்தையின் வழக்கமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள்

கைக்குழந்தைகளால் பயணிக்கும் சூழலை எளிதாக அடையாளம் காண இயலாது. குழந்தை உடன் அதற்கு பிடித்தமான ஒருவர் உடனிருந்தால் போதும். ஆனால் நீங்கள் உணவை வழக்கமானதில் இருந்து வேறுப்படுத்தி கொடுக்கும்போது குழந்தைகளால் தாம் புதியதொரு இடத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்துக்கொள்ள இயலும்.

கைக்குழந்தையை விமானத்தில் அழைத்து செல்ல போகிறீர்களா? அப்போ இந்த 5 விஷயங்களை தெரிஞ்சி வெச்சிக்கோங்க!!

ஆதலால் குழந்தை வழக்கமாக உண்ணும் உணவை வீட்டிலேயே பேக் செய்து எடுத்து செல்லுங்கள். அதுமட்டுமின்றி விமான உணவுகள் சில நேரங்களில் பெரியவர்களுக்கே ஒத்துப்போவதில்லை. அப்படியிருக்கையில், குழந்தைகளுக்கு கொடுத்து பலப்பரீட்சை நடத்தி பார்க்காதீர்கள். வழக்கமான உணவு மட்டுமின்றி, குழந்தைக்கு அவ்வப்போது கொடுத்து பிடிவாதத்தை நிறுத்த சாக்லெட்கள் & பிஸ்கட்களையும் தயாராக எடுத்து செல்லுங்கள்.

கைக்குழந்தையை விமானத்தில் அழைத்து செல்ல போகிறீர்களா? அப்போ இந்த 5 விஷயங்களை தெரிஞ்சி வெச்சிக்கோங்க!!

3. குழந்தைக்கான பொருட்கள்

கைக்குழந்தைகளை வீட்டில் இருந்து வெளியே அழைத்து செல்லும்போது, குழந்தைகளுக்கு என்றே தனியாக துணிகளையும், கூடுதல் கைக்குட்டைகளையும் எடுத்து செல்ல வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, குழந்தைகள் திடீரென அழ துவங்கினால் சமாதானப்படுத்த குழந்தைகளுக்கு பிடித்த பொம்மை பொருட்களும் கைவசம் இருக்க வேண்டும்.

கைக்குழந்தையை விமானத்தில் அழைத்து செல்ல போகிறீர்களா? அப்போ இந்த 5 விஷயங்களை தெரிஞ்சி வெச்சிக்கோங்க!!

ஆகையால் கைக்குழந்தைகளை உடன் அழைத்து செல்லவுள்ளீர்கள் எனில், இந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டோமா என கிளம்புவதற்கு முன்னால் ஒருமுறை சோதித்து கொள்ளுங்கள். அதற்காக அளவுக்கு அதிகமாக பொருட்களை சூட்கேஸில் அடைத்து செல்லாதீர்கள். ஏனெனில் தங்களது விமானங்களில் சுமைகளை பயணிகள் உடன் எடுத்து செல்ல ஒவ்வொரு ஏர்லைன்ஸும் ஒரு வறைமுறையை வைத்துள்ளன.

கைக்குழந்தையை விமானத்தில் அழைத்து செல்ல போகிறீர்களா? அப்போ இந்த 5 விஷயங்களை தெரிஞ்சி வெச்சிக்கோங்க!!

4. குழந்தை தள்ளுவண்டி

ஏற்கனவே கூறியதுதான், வழக்கமான பொருட்கள், உணவுகள் & ஆட்கள் உடன் இருந்தால் குழந்தைகளால் தான் புதியதொரு இடத்தில் இருக்கிறோம் என்பதை எளிதில் உணர இயலாது. இதன் மூலமாக அவை திடீரென அழுவது தவிர்க்கப்படும்.

கைக்குழந்தையை விமானத்தில் அழைத்து செல்ல போகிறீர்களா? அப்போ இந்த 5 விஷயங்களை தெரிஞ்சி வெச்சிக்கோங்க!!

ஆதலால் குழந்தைகளுக்கான உணவை எவ்வாறு பேக் செய்து எடுத்து செல்கிறீர்களோ அதேபோன்று, குழந்தைகளை வெளியே அழைத்து செல்ல வழக்கமாக பயன்படுத்தும் தள்ளு வண்டியையும் விமான நிலையத்திற்குள் எடுத்து செல்ல பாருங்கள். உங்களால் இந்த வண்டியில் குழந்தையை பாதுகாப்பு வளையத்தை தாண்டி கூட அழைத்து செல்ல முடியும்.

கைக்குழந்தையை விமானத்தில் அழைத்து செல்ல போகிறீர்களா? அப்போ இந்த 5 விஷயங்களை தெரிஞ்சி வெச்சிக்கோங்க!!

5. தேர்வு செய்யப்படும் இருக்கை

விமானங்களில் ஜன்னல் இருக்கையில் பயணம் செய்வது தனி சுகம். இதைதான் பெரும்பாலானோர் விரும்புவர். ஆனால் நீங்கள் கைக்குழந்தைகளுடன் பயணம் செய்யவுள்ளீர்கள் எனில், எளிமையாக வெளியேற/ உட்புகுவதற்கு ஏற்ப நடைப்பாதைக்கு அருகில் இருக்கும் இருக்கையை முன்பதிவு செய்வது நல்லது.

கைக்குழந்தையை விமானத்தில் அழைத்து செல்ல போகிறீர்களா? அப்போ இந்த 5 விஷயங்களை தெரிஞ்சி வெச்சிக்கோங்க!!

இதற்கான காரணம் உங்களுக்கே நன்றாக தெரியும். குழந்தை வைத்திருந்தால் அவ்வப்போது வாஷ் ரூம்மிற்கும், குழந்தை அழ நேர்ந்தால் சற்று நடந்து சமாதானப்படுத்தவும் வேண்டியிருக்கும். நடைப்பாதைக்கு அருகில் இருக்கையை பெற்றால், சக பயணிகளை தொந்தரவு செய்யாமல் தேவைப்படும்போது இருக்கையில் இருந்து உடனடியாக எழ முடியும்.

Article Published On: Monday, August 22, 2022, 17:20 [IST]
English summary
5 tips for mothers who travelling with infant on flights
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+