ரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்

உங்கள் காரில் கட்டாயமாக இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்

காரின் உட்புறத்தையோ அல்லது வெளிப்புறத்தையோ கஸ்டமைஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் பலருக்கும் இருக்கும். அதே சமயம் கார்களுக்காக சில கூடுதல் ஆக்ஸஸெரிகளை வாங்குவதிலும் நாம் ஆர்வம் காட்டுகிறோம். இதில், ஒரு சில ஆக்ஸஸெரிகள் காரின் அழகை கூட்டும். இன்னும் சில ஆக்ஸஸெரிகள், டிரைவர் மற்றும் பயணிகளுக்கு கூடுதல் சௌகரியத்தை வழங்கும்.

ரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்

இந்த வகையில் உங்கள் காருக்கு பயன்படும் அத்தியாவசியமான ஆக்ஸஸெரிகள் சிலவற்றை, நாங்கள் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஆக்ஸஸெரிகள், 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். வாருங்கள், இனி செய்திக்குள் செல்லலாம்.

ரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்

மொபைல் போன் மவுண்ட்

தற்போது உள்ள ஒரு சில பழைய கார்களில், டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் ஸ்க்ரீன் மற்றும் ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி வசதிகள் இருப்பது கிடையாது. அத்தகைய கார்களில் பயணிக்க கூடியவர்கள் நேவிகேஷனுக்கு செல்போனை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலை உங்களுக்கு இருக்கும்பட்சத்தில், மொபைல் போன் மவுண்ட்டை வாங்கி கொள்வது நல்லது.

ரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்

இது ஒரு காரில் கட்டாயமாக இருக்க வேண்டிய கூடுதல் ஆக்ஸஸெரிகளில் முக்கியமானதாகும். மொபைல் போன் மவுண்ட் இருந்தால், நீங்கள் சாலையில் முழு கவனம் செலுத்த முடியும். இல்லாவிட்டால் அடிக்கடி சாலையில் இருந்து கண்களை எடுத்து விட்டு செல்போனை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இது விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்

மைக்ரோஃபைபர் கார் கிளீனிங் க்ளாத்

காரின் உட்புறம் அல்லது வெளிப்புறம் எதுவாயினும், அங்கு படிந்திருக்கும் தூசி மற்றும் அழுக்குகளை இந்த மைக்ரோஃபைபர் கார் கிளீனிங் க்ளாத் எளிதாக அகற்றி விடும். பாலிஸ்டர், நைலான் மெட்டீரியலால் இது உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் அத்தகைய மேற்பரப்புகளை சுத்தம் செய்வதற்கு மிகச்சிறந்த தீர்வாக மைக்ரோஃபைபர் கார் கிளீனிங் க்ளாத்கள் திகழ்கின்றன.

ரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்

கார் ஏர் வெண்ட்ஸ் க்ளீனர்

தற்போதைய சூழல்களில், கார் ஏர் வெண்ட்ஸ் க்ளீனர் மிகவும் முக்கியமானது. ஏர் வெண்ட்களுக்கு உள்ளே குவிந்து கிடக்கும் தூசியை சுத்தம் செய்வதற்கு, இது உதவி செய்கிறது. நீங்கள் காரின் ஏர் வெண்ட்களை அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால், அது கிருமிகளின் வசிப்பிடமாக மாறி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்

இதன் காரணமாகதான் ஏர் வெண்ட்ஸ் க்ளீனர்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது மிகவும் சிறிய மற்றும் மிகவும் விலை குறைவான பிரஷ் ஆகும். ஏர் வெண்ட்களின் உள்ளே நன்றாக சென்று, அவற்றை சுத்தம் செய்வதற்கு இந்த பிரஷ்கள் உதவி செய்கின்றன. உங்களிடம் ஏர் வெண்ட்ஸ் க்ளீனர் இல்லாவிட்டால், உடனடியாக அதை வாங்கி கொள்வது நல்லது.

ரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்

மினி குப்பை தொட்டி

அழுக்காகவும், குப்பைகள் நிறைந்தும் காணப்படும் ஒரு காரில் அமர்ந்து பயணம் செய்வதை யாரும் விரும்ப மாட்டார்கள். அதே சமயம் காரின் இன்டீரியரை சுத்தம் செய்வதும் அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. சில சமயங்களில் நமக்கே வெறுப்பு வந்து விடும். எனவே காரின் இன்டீரியரை முடிந்த வரைக்கும் சுத்தமாக வைத்து கொள்வதுதான் நல்ல வழி.

ரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்

இதற்கு ஆன்லைனில் கிடைக்கும் மினி குப்பை தொட்டிகளை வாங்கி காரில் பயன்படுத்துவது நல்ல தீர்வாக இருக்கும். தேவையில்லாத ரசீதுகள் மற்றும் இதர பயன்படாத பொருட்களை இந்த மினி குப்பை தொட்டியில் போட்டு கொள்ள முடியும் என்பதால், காரின் இன்டீரியரை மிகவும் சுத்தமாக பராமரிக்க முடியும். நீங்கள் சுத்தமாக பராமரித்தால், உங்கள் காரில் பயணிக்க அனைவரும் விரும்புவார்கள்.

ரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்

கார்களுக்கான தீயணைப்பான்

தீயை அணைக்க கூடிய சிறிய கேன்கள், ஒருவரின் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றாகும். ஆபத்து நேரும்போதுதான் இதன் மகத்துவத்தை நீங்கள் உணர முடியும். எனவே தேவைப்படாது என ஒதுக்காமல், கார்களுக்கான தீயணைப்பான்களை நீங்கள் வாங்கி வைத்து கொள்வது நல்லது. காரின் கோ-பாசஞ்சர் இருக்கை உள்ளிட்ட இடங்களில் இதனை வைத்து கொள்ள முடியும்.

ரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்

கார்களுக்கான தீயணைப்பான்கள் தற்போது வெவ்வேறு அளவுகளில் எளிதாக கிடைக்கின்றன. ஆன்லைன் மூலம் நீங்கள் அவற்றை எளிதாக வாங்கலாம். இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களையும் உங்களால் 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கார்டாக் செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
5 Useful Car Accessories. Read in Tamil
Story first published: Saturday, July 4, 2020, 15:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X