இந்திய ரயில்வே துறை பற்றி 50 சுவாரஸ்யத் தகவல்கள்!

Written By:

இந்திய போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் ரயில்வே துறை உலகிலேயே மிகப்பெரிய கட்டமைப்பு கொண்டது.  இன்று 170 ஆண்டு பாரம்பரியம் கொண்ட உலகின் மிகப்பெரிய அமைப்பாக விளங்குகிறது.

இன்று இந்திய மக்களின் போக்குவரத்தில் இன்றியமையாத சாதனமாகவும், மலிவான கட்டணம் கொண்ட போக்குவரத்து சேவையையும் ரயில்வே துறை வழங்கி வருகிறது. இந்தநிலையில், ரயில் பிரயாணம் எப்படி இனிமையானதோ, அதே அளவு ரயில்வே துறையின் பாரம்பரியத்திலும் பல சுவாரஸ்யங்கள், சாதனைகள் உள்ளன. அதுபற்றிய சுவாரஸ்யத் தகவல்களுடன் ஒரு இனிய செய்திப் பயணம் செல்லலாம் வாருங்கள்.

01. அதி வேகமான ரயில்

01. அதி வேகமான ரயில்

புது டெல்லி- போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் அதிவேகமான ரயில். பரீதாபாத்- ஆக்ரா தடத்தில் இந்த ரயில் மணிக்கு 150 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. புது டெல்லி- போபால் இடையிலான 704 கிமீ தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது. அதாவது, மணிக்கு சராசரியாக 89.87 கிமீ வேகத்தில் செல்கிறது. இதுதான், இந்தியாவில் வணிக ரீதியிலும் மிக வேகமான ரயிலாக குறிப்பிடப்படுகிறது.

Picture credit: Bahnfrend/Wiki Commons

02. ஆமை வேக ரயில்

02. ஆமை வேக ரயில்

இந்தியாவின் மிக குறைவான வேகம் கொண்ட ரயில் மேட்டுப்பாளையும்- ஊட்டி இடையில் இயக்கப்படும் நீலகிரி மலை ரயில்தான். மணிக்கு 10 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்தியாவின் அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது 15 மடங்கு குறைவான வேகத்தில் இயக்கப்படுகிறது.

Picture credit: Gcheruvath/Wiki Commons

03. அதிக தூரம் செல்லும் ரயில்

03. அதிக தூரம் செல்லும் ரயில்

இந்தியாவிலேயே அதிக தூரம் செல்லும் ரயில் என்ற பெருமையை திப்ரூகர்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பெறுகிறது. இந்த ரயில் 4,273 கிமீ தூரத்தை கடக்கிறது. அதிக நேரம் பயணிக்கும் ரயிலும் இதுதான்.

Picture credit: kochigallan

04. குறைந்த தூர ரயில்

04. குறைந்த தூர ரயில்

குறைவான தூரம் கொண்ட ரயில் நிலையங்கள் நாக்பூர்- அஜ்னி இடையிலான தூரம்தான். வெறும் 2.8 கிமீ இடையில் இந்த இரு ரயில் நிலையங்களும் அமைந்துள்ளன. ஆரம்பத்தில் அஜ்னியில் உள்ள ஒர்க்ஷாப்பிற்கு செல்லும் பணியாளர்களுக்கு ஏதுவாக இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டது.

Picture credit: YouTube

05. அதிக தூரம் இடைநில்லாமல் செல்லும் ரயில்

05. அதிக தூரம் இடைநில்லாமல் செல்லும் ரயில்

இந்தியாவிலேயே அதிக தூரத்திற்கு இடைநிற்காமல் செல்லும் ரயில் திருவனந்தபுரம்- நிஜாமூதீன் இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ்தான். இந்த ரயில் வதோதரா- கோட்டா இடையிலான 528 கிமீ தூரத்திற்கு இடைநில்லாமல் இயக்கப்படுகிறது. இரண்டாவது ரயில் மும்பை - டெல்லி இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், கோட்டா- டெல்லி இடையிலான தூரத்தை இடைநில்லாமல் கடக்கிறது.

Picture credit: V Malik/Wiki Commons

06. நீளமான பெயர்

06. நீளமான பெயர்

அரக்கோணம்- ரேணிகுண்டா இடையில் அமைந்திருக்கும் ஸ்ரீவெங்கடனரசிம்ஹரஜுவரிபெட்டா என்ற ரயில் நிலையம்தான் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம்.

Picture credit: topworldfact

07. குறைவான நீளமுடைய பெயர்

07. குறைவான நீளமுடைய பெயர்

ஒடிஷா மாநிலத்திலுள்ள இப் என்ற ரயில் நிலையமும், குஜராத்தில் உள்ள ஆட் என்ற ரயில் நிலையமும் குறைவான நீளமுடைய பெயர்களை கொண்டுள்ளன.

Picture credit: storyglitz

08. அதிக இடத்தில் நின்று செல்லும் ரயில்

08. அதிக இடத்தில் நின்று செல்லும் ரயில்

எக்ஸ்பிரஸ்- மெயில் வகையில், அதிக இடத்தில் நின்று செல்லும் ரயிலாக ஹவுரா- அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கப்படுகிறது. இந்த ரயில் 115 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

Picture credit: Smeet Chowdhury/Wiki Commons

09. இந்தியாவின் லேட் கம்மர்

09. இந்தியாவின் லேட் கம்மர்

இந்தியாவிலேயே மிகவும் தாமதமாக செல்லும் ரயில் குவஹாட்டி- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில். இந்த ரயில் 65 மணிநேரம் 5 நிமிடங்களில் செல்லும் என்றாலும், குறைந்தது 10 முதல் 12 மணி நேர தாமதத்திற்கு பின்னரே, கடைசி ரயில் நிலையத்தை எட்டிப் பிடிக்கிறதாம்.

Picture credit: indiarailinfo

10. எதிரெதிர் ரயில் நிலையங்கள்

10. எதிரெதிர் ரயில் நிலையங்கள்

ஒரே இடத்தில் அமையப்பெற்ற இரண்டு ரயில் நிலையங்களாக மஹாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் உள்ள பெலாபூர் மற்றும் ஸ்ரீராம்பூர் ரயில் நிலையங்கள் தெரிவிக்கப்படுகின்றன. ரயில் வழித்தடத்தின் இரு மருங்கிலும், இரண்டு ரயில் நிலையங்களும் எதிரெதிரே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Picture credit: railyatri

11. அதிக சக்திவாய்ந்த ரயில் எஞ்சின்

11. அதிக சக்திவாய்ந்த ரயில் எஞ்சின்

இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ரயில் எஞ்சின் என்ற பெருமையை WAG-9 மாடல் பெறுகிறது. சரக்கு ரயில்களல் இந்த எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரயில் எஞ்சின் 6,350 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதில் மாறுதல்கள் செய்யப்பட்ட மாடலான WAP-7 எஞ்சின் அதிவேக ரயில்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 24 பெட்டிகளை இழுக்கும் வல்லமை கொண்டது என்பதுடன் மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

Picture credit: Adityamadhav83/Wiki Commons

12. கடைகோடி நிலையங்கள்

12. கடைகோடி நிலையங்கள்

நாட்டின் வட கோடி ரயில் நிலையமாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ல பாரமுல்லாவும், மேற்கு பகுதியின் கடைகோடி ரயில் நிலையமாக குஜராத் மாநிலம் புத் அருகிலுள்ள நலியாவும், கிழக்கில் லெடோ ரயில் நிலையமும், தெற்கில் கன்னியாகுமரியும் கடைகோடி ரயில் நிலையங்களாக அமைந்து இருக்கின்றன.

Picture credit: indiarailinfo

13. அதிக தடங்கள்

13. அதிக தடங்கள்

இந்தியாவில் அதிக தடங்கள் துவங்கும் ரயில் நிலையமாக மதுரா சந்திப்பு உள்ளது. இங்கிருந்து 7 தடங்கள் துவங்குகின்றன. அதில், பரத்பூர், ஆல்வார், டெல்லி ஆகிய இடங்களுக்கு அகல ரயில் பாதையும், அச்நெரா, விருந்தாவன், ஹத்ரஸ், கஸ்கன்ச் ஆகிய இடங்களுக்கு மீட்டர்கேஜ் தடங்களும் துவங்குகின்றன. அதற்கடுத்து, 6 தடங்கள் கொண்ட ரயில் சந்திப்பாக பதின்டாவும், 5 தடங்கள் கொண்ட ரயில் சந்திப்புகளாக விழுப்புரம், லக்ணோ, குண்டக்கல், கத்னி, வாரணாசி, கான்பூர் சென்ட்ரல், தபோய் மற்றும் நாக்பூர் ஆகியவை உள்ளன.

Picture credit: Superfast1111/Wiki Commons

14. இணை தடங்கள்

14. இணை தடங்கள்

அதிக இணை தடங்கள் கொண்ட வழித்தடமாக பந்த்ரா டெர்மினஸிலிருந்து அந்தேரி வரையான ரயில் பாதை கூறப்படுகிறது. இந்த இரு ரயில் நிலையங்களுக்கு இடையிலான 10 கிமீ தூரத்திற்கு 7 தடங்கள் கொண்டதாக ரயில் பாதை அமைந்துள்ளது.

Picture credit: Superfast1111/Wiki Commons

15. பரபரப்பான ரயில் நிலையம்

15. பரபரப்பான ரயில் நிலையம்

உத்தரபிரதேச தலைநகர் லக்ணோதான் இந்தியாவின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையம். இங்கு நாள்தோறும் 64 ரயில்கள் கடந்து செல்கின்றன.

Picture credit: Mohit/Wiki Commons

16. நீளமான பிளாட்ஃபார்ம்

16. நீளமான பிளாட்ஃபார்ம்

பாடப்புத்தகங்களிலேயே இதனை படித்திருப்பீர்கள். ஆம், இந்தியாவின் மிக நீளமான நடைமேடை அமையப்பெற்ற ரயில் நிலையம் உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் ரயில் நிலையம்தான். இந்த ரயில் நிலையத்தில் 2,733 அடி நீளமுடைய, அதாவது ஒரு கிமீ நீளத்திற்கும் அதிகமான நடைமேடை அமைந்துள்ளது.

Picture credit: Benison P Baby/Wiki Commons

17. பழமையான ரயில் எஞ்சின்

17. பழமையான ரயில் எஞ்சின்

இயங்கும் நிலையில் உள்ள இந்தியாவின் பழமையான ரயில் எஞ்சின் என்ற பெருமையை ஃபேரி குயின் நீராவி எஞ்சின் பெறுகிறது. 1855ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த எஞ்சின் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறது.

Picture credit: Arup1981/Wiki Commons

18. முதல் ரயில் ரோடு

18. முதல் ரயில் ரோடு

முதல் ரயில் பாதையை அமைத்தவர்கள் ஆங்கிலேயர்கள் இல்லையாம். மும்பையை சேர்ந்த ஜாம்செட்ஜி ஜீஜீபாய் மற்றும் ஜெகன்னாத் ஷங்கர்சேத் என்ற இரு இந்தியர்கள்தான் முதல் ரயில் பாதையை அமைத்தவர்களாம். ரூர்க்கி மற்றும் அதிலிருந்து 10 கிமீ தூரத்திலுள்ள பிரன் கலியர் என்ற இடத்திற்கு இடையே 10 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டதாம். 1,851ம் ஆண்டு டிசம்பர் 22ந் தேதி இந்த வழித்தடத்தில் இந்தியாவின் முதல் ரயில் இயக்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஏற்பட்ட தண்ணீர் பாசனத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்வதற்காக பிரன் கலியரிலிருந்து களிமண்ணை ரூர்க்கி நகருக்கு எடுத்து வந்து பிரச்னையை தற்காலிகமாக சமாளிக்க இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Picture credit: rediff/Wiki Commons

19. பணியாளர் திறன்

19. பணியாளர் திறன்

உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்ட 9வது மிகப்பெரிய நிறுவனமாக இந்திய ரயில்வே துறை விளங்குகிறது. 14 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களை கொண்டது.

20. உலகின் பெரிய நெட்வொர்க்

20. உலகின் பெரிய நெட்வொர்க்

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்து இந்திய ரயில்வே உலகிலேயே 4வது பெரிய ரயில் தட கட்டமைப்பை பெற்றிருக்கிறது. இந்திய ரயில்வே 64,000 கிமீ தூரத்திற்கான ரயில் பாதையை கொண்டுள்ளது.

Picture credit: mapsofindia

21. நீராவி எஞ்சின்

21. நீராவி எஞ்சின்

1972ம் ஆண்டு ரயில்களுக்கான நீராவி எஞ்சின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

Picture credit: Wiki Commons

22. தமிழகத்தில் ரயில் சேவை

22. தமிழகத்தில் ரயில் சேவை

1853ல் தி கிரேட் சதர்ன் ரயில்வே கம்பெனி நிறுவப்பட்டது. முதலில் சென்னை ராயபுரத்திலிருந்து ஆற்காடு வரை ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டது. 1856ல் ரயில் சேவை துவங்கியது. முதலில் ராயபுரத்திலிருந்து ஆம்பூர் மற்றும் ராயபுரத்திலிருந்து அரக்கோணம் என இரு சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன. 1861ல் நாகப்பட்டினம்- திருச்சிராப்பள்ளி இடையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

23. டாய்லெட் வசதி

23. டாய்லெட் வசதி

கடந்த 1891ம் ஆண்டு ரயில்களில் முதல்முறையாக கழிவறை வசதி அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் முதல் வகுப்பினருக்கு மட்டுமே இந்த வசதி இருந்தது. 1907ம் ஆண்டு குறைந்த கட்டண வகுப்புகளுக்கும் கழிவறை வசதி கொடுக்கப்பட்டது

24. ஏசி வசதி

24. ஏசி வசதி

1874ம் ஆண்டு கிரேட் பெனின்சுலார் ரயில்வேயில் முதல்முறையாக ரயில் பெட்டிகளில் குளிர்சாதன வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

Picture credit: RegentsPark/Wiki Commons

25. நீளமான குகை

25. நீளமான குகை

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பீர் பஞ்சால் குகைதான் ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள நீளமான குகை வழிப்பாதை. இது 11.215 கிமீ நீளத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

Picture credit: Owais khursheed/Wiki Commons

26. பாதாள ரயில்ப்பாதை

26. பாதாள ரயில்ப்பாதை

கோல்கட்டா மெட்ரோதான் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் பாதாள ரயில் பாதையாக இருக்கிறது.

Picture credit: WillaMissionary/Wiki Commons

 27. கம்ப்யூட்டர் ரிசர்வேஷன்

27. கம்ப்யூட்டர் ரிசர்வேஷன்

1986ல் முதல்முறையாக டெல்லியில் கணிணிமயமாக்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

Picture credit: indianrailinfoblog.blogspot

 28. முதல் மின்சார ரயில்

28. முதல் மின்சார ரயில்

1925ம் ஆண்டு பிப்ரவரி 3ந் தேதி பாம்பே விடி மற்றும் குர்லா ரயில் நிலையங்களுக்கு இடையில் மின்சார ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.

Picture credit: Shan.H.Fernandes/Wiki Commons

29. பேலஸ் ஆன் வீல்ஸ்

29. பேலஸ் ஆன் வீல்ஸ்

1982ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்ட பேலஸ் ஆன் வீல்ஸ் என்ற சொகுசு ரயிலில் சிறிது காலத்திற்கு இந்தியர்கள் பயணிக்க அனுமதிக்கப்படவில்லையாம்.

 30. மோசமான ரயில் விபத்து

30. மோசமான ரயில் விபத்து

இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தாக 1981ம் ஆண்டு ஜுன் 6ந் தேதி பீகாரில் உள்ள பாகமதி ஆற்றில் பயணிகள் ரயில் கவிழ்ந்த சம்பவம் குறிப்பிடப்படுகிறது. அந்த ரயிலில் பயணித்த 800 பேரில் 200க்கும் அதிகமானோர் சடலமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ளோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் 500 முதல் 800 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

31. கையாளும் திறன்

31. கையாளும் திறன்

இந்தியாவில் ரயில்களில் மட்டும் தினசரி 25 மில்லியன் பயணிகள் செல்கின்றனர். ஆண்டுக்கு 7.2 பில்லியன் பயணிகளை இந்திய ரயில்வே கையாளுகிறது.

32. ரயில் இயக்கம்

32. ரயில் இயக்கம்

இந்தியாவில் தினசரி 19,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், 12,000 ரயில்கள் பயணிகள் போக்குவரத்திற்கும், 7,000 ரயில்கள் சரக்குப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

33. ரயில் நிலையங்கள்

33. ரயில் நிலையங்கள்

இந்தியாவில் 7,083 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.

34. கட்டணம்

34. கட்டணம்

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், உலகிலேயே மிக குறைவான கட்டணம் கொண்ட சேவையை இந்திய ரயில்வே வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு டெல்லி- கோல்கட்டா இடையிலான 1,500 கிமீ தூரத்திற்கு சாதாரண வகுப்பில் ரூ.250 கட்டணமாக வசூலிக்ப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இதே தூரத்திற்கு 10 மடங்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

36. புராதானச் சின்னம்

36. புராதானச் சின்னம்

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம் யுனெஸ்கோ அமைப்பில் உலகின் புராதானச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு 33 மில்லியன் பயணிகளை இந்த ரயில் நிலையம் கையாள்கிறது.

37. பழமையான சேவை

37. பழமையான சேவை

1853ம் ஆண்டு துவங்கிய இந்திய ரயில் சேவை இதுவரை இடையில் எந்த தொய்வும் இல்லாமல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, உலகின் மிக பழமையான ரயில் சேவையாகவும் இந்திய ரயில் சேவை குறிப்பிடப்படுகிறது.

38. வருவாய்க்கு சின்ன சாம்பிள்

38. வருவாய்க்கு சின்ன சாம்பிள்

கடந்த 2011-12 நிதி ஆண்டு புள்ளிவிபரப்படி, பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்போரிடமிருந்து மட்டும் ரூ.581 கோடி அபராதமாக வசூலித்துள்ளதாம் இந்திய ரயில்வே.

39. ரயில் மியூசியம்

39. ரயில் மியூசியம்

1977ம் ஆண்டு டெல்லியில் அமைக்கப்பட்ட ரயில் அருங்காட்சியகம் ஆசியாவிலேயே மிகவும் தனித்தன்மை கொண்ட அருங்காட்சியகங்களில் ஒன்றாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் 11 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நீராவி எஞ்சின், ரயில் எஞ்சின், ரயில் பெட்டிகள், அரிய புகைப்படங்கள் என இங்கு வருவோரை பிரம்மில் ஆழ்த்துகிறது.

Picture credit: Bruno Corpet/Wiki Commons

40. நீளமான ரயில் பாலம்

40. நீளமான ரயில் பாலம்

கேரள மாநிலம், கொச்சியிலுள்ல வல்லர்படத்திலிருந்து எடப்பள்ளியை இணைக்கும் வேம்பநாடு ரயில் பாலம்தான் இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலம். இது 4.62 கிமீ நீளம் கொண்டது. இது சரக்கு போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

Picture credit: Rash9745/Wiki Commons

41. நீளமான கடல் ரயில் பாலம்

41. நீளமான கடல் ரயில் பாலம்

கடலில் அமைக்கப்பட்ட இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலம் ராமேஸ்வரத்திலுள்ள பாம்பன் ரயில் பாலம்தான். கப்பல்கள் கடக்கும் போது தூக்கிக் வழிவிடும் வசதியுடன் அமைந்திருப்பதும் இதன் விசேஷம்.

Picture credit: Shubham Gupta/Wiki Commons

42. ரயில் மற்றும் சாலை பாலம்

42. ரயில் மற்றும் சாலை பாலம்

ரயில் பாதை மற்றும் சாலைப் போக்குவரத்து என இரட்டை அடுக்குடன் அமைக்கப்பட்ட முதல் பாலம் என்ற பெருமையை அஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது கட்டப்பட்ட சராய்காட் பாலம் பெறுகிறது. இது 1,492 மீட்டர் நீளம் கொண்டது. 1963ம் ஆண்டு பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

Picture credit: worldtravelserver/Wiki Commons

43. முதல் ரயில் பாலம்

43. முதல் ரயில் பாலம்

மும்பை- தானே இடையிலான தாபூரி வயாடக்ட்தான் இந்ியாவின் முதல் ரயில் பாலம்.

Picture credit: Wiki Commons

44. ரயில் நிறுவனங்கள்

44. ரயில் நிறுவனங்கள்

சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் 44 ரயில் நிறுவனங்கள் செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 44. ரயில் கம்பெனிகள்

44. ரயில் கம்பெனிகள்

சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் 44 ரயில் நிறுவனங்கள் செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

45. உயரமான ரயில் பாலம்

45. உயரமான ரயில் பாலம்

ஜம்மு-காஷ்மீர் சீனாப் ஆற்றின் மீது அமைக்கப்படும் பாலம்தான் உலகின் மிக உயரமான ரயில் பாலம் என்ற பெருமையை பெறுகிறது. இந்த ரயில் பாலம் ஆற்றின் தரைப்பகுதியிலிருந்து மலை முகடுகளுக்கு இடையில் 1,180 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. இது குதுப்மினார் கோபுரத்தை விட 5 மடங்கு கூடுதல் உயரம் பெற்றது.

Picture credit: spatialprecision

46. முதல் குகை பாதை

46. முதல் குகை பாதை

மஹாராஷ்டிர மாநிலம், தானே அருகேயுள்ள பார்சிக் குகைப்பாதைதான் இந்தியாவின் முதல் குகை ரயில் பாதை. இது 1865ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

Picture credit: indiarailinfo

47. உலக சாதனை

47. உலக சாதனை

உலகிலேயே அதிக தடம் மாறும் அமைப்பை கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையை டெல்லி பெறுகிறது.

48. சொத்து

48. சொத்து

இந்திய ரயில்வேக்கு சுமார் 10.65 லட்சம் ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. இதில், 90 சதவீதம் ரயில்வே துறை மற்றும் அதன் சார்புடைய அமைப்புகளின் பயன்பாட்டில் உள்ளது. 1.13 லட்சம் ஏக்கர் இடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

49. சமையலறை வசதி

49. சமையலறை வசதி

இந்தியாவில் ஓடும் ரயில்களில் சமயலறை வசதி கொண்ட மிகவும் பழம் பெருமை வாய்ந்த ரயில் மும்பை- புனே இடையிலான டெக்கான் குயின் என்பது குறிப்பிடத்தக்கது.

Picture credit: YouTube

50. மூன்று வகை தடங்கள்

50. மூன்று வகை தடங்கள்

அகலப்பாதை, மீட்டர் கேஜ் பாதை, நேரோகேஜ் பாதை என மூன்று வகை ரயில் தடங்களையும் கொண்ட ரயில் நிலையமாக சிலிகுரி விளங்குகிறது.

Photo Credit

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
50 interesting facts about Indian Railways.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more