துபாய் டூட்டி ஃப்ரீ-இல் பென்ஸ் காரை வென்ற நபர்.. அவருக்கு இப்ப என்ன வயசு தெரியுமா? இந்த காரையா கொடுத்தாங்க!

இந்தியாவைச் சேர்ந்த ஓர் நபருக்கு துபாய் டூட்டி ஃப்ரீ (Dubai Duty-Free) வாயிலாக மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் பரிசாக கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பரிசு கடந்த வியாழன் (அக்டோபர் 9) அன்றே அறிவிக்கப்பட்டது. ஹைதராபாத்-தைச் சேர்ந்தவர் 50 வயதான ராஜீவ் லக்ஹோத்தியா. இவருக்கே கார் பரிசாக விழுந்திருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றான ஏஎம்ஜி ஜிடி43 (Mercedes Benz AMG GT 43) மாடலே அவருக்கு பரிசாக விழுது உள்ளது. ராஜீவ் லக்ஹோத்தியா ஓர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார்.

இவர் அடிக்கடி துபாய் சென்று வருவது வழக்கம் என கூறப்படுகின்றது. மேலும், தொடர்ச்சியாக துபாய் டூட்டி ஃப்ரீ நடத்தும் 'மில்லினியம் மில்லியனர் மற்றும் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ்' டிரா போட்டிகளில் அவர் பங்கேற்று வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அவர் வாங்கிய பரிசு சீட்டு எண் 0826-க்கு பென்ஸ் கார் பரிசாக விழந்திருக்கின்றது.

Indian wins mercedes benz car in dubai duty free draw

இவருக்கு மட்டுமல்ல மற்றுமொரு இந்தியருக்கும் வாகனம் பரிசாக கிடைத்திருக்கின்றது. ஷிஹபுதீன்-னே அவர் ஆவார். இவருக்கு பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர்எஸ் (BMW R 1250 RS) பைக் பரிசாக கிடைத்திருக்கின்றது. தொடர்ந்து, இன்னும் சிலருக்கும் வாகனங்கள் பரிசாக விழுந்திருக்கின்றன. அவரும் இந்தியரே ஆவார்.

ஜோதி பாஷு மாதவன் என்பவருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்500 (Mercedes-Benz S500) சொகுசு கார் பரிசாக கிடைத்திருக்கின்றது. இத்துடன், 67 வயதான சிரியன் அலி அக்ரம் அரபோ என்பவருக்கு ஒரு மில்லியன் டாலர் தொகை பரிசாக விழுந்திருக்கின்றது. இந்த பரிசால் ஒரே நாளில் அலி அக்ரம் அரபோ பெரும் செல்வந்தராக மாறியிருக்கின்றார்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிடி 43: பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி ஜிடி லைன்-அப்பில் விற்கப்படும் மிக முக்கியமான தயாரிப்பாக ஜிடி43 காட்சியளிக்கின்றது. இது ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த அதிக ஆற்றலை வெளியேற்றும் கார் மாடல் ஆகும். இதனால்தான் உலக சந்தையில் இந்த கார் மாடலுக்கு வரவேற்பு மிக அதிகம்.

இந்த காரில் 421 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 4 சிலிண்டர் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது வெறும் 4.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் இந்திய மதிப்பு ரூ. 80.54 லட்சம் என கூறப்படுகின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்500: கார் பரிசளிப்பிலேயே மிக விலை உயர்ந்த கார் பரிசளிப்பாக இது இருக்கின்றது. இதன் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாக்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் 429 எச்பி ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட டர்போசார்ஜட் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது வெறும் 4.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடும். மேலும், மிக மிக அதிக சொகுசு அம்சங்களைத் தாங்கிய கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. இத்தகைய காரையே ஜோதி பாஷு மாதவன் பரிசாக வென்றிருக்கின்றார்.

பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர்எஸ்: இது ஓர் ஸ்போர்ட்ஸ் டூரர் பைக் மாடல் ஆகும். இந்த பைக்கில் 1254 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் பாக்ஸர் வகை எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 136 பிஎச்பி ஆற்றலையும், 143 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

இந்த மோட்டாரில் சிறப்பு அம்சமாக பிஎம்டபிள்யூ ஷிஃப்ட் கேம் டெக்னாலஜி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களைத் தாங்கிய பைக்காகவே இது காட்சியளிக்கின்றது. இதன் மதிப்பு 21,395 அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 18 லட்சம் இருக்கும் என தெரிகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முக்கிய வாகன பரிசுகளை வென்ற அனைவரும் இந்தியர்களாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. அதேவேளையில், இந்தியர்களுக்கு துபாய் டூட்டி ஃப்ரீயில் பரிசு கிடைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இந்தியர்கள் ரொக்கம் மற்றும் வாகனங்களை பரிசாக வென்றிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, October 11, 2024, 12:14 [IST]
English summary
50 year old indian from hyderabad wins a mercedes benz in the dubai duty free draw
மேலும்... #luxury cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+