இந்தியாவே தமிழ்நாட்டை தான் திரும்பி பார்க்க போகுது! வேற லெவல்ல 100 பஸ் ரெடியாகிட்டு இருக்குது!

தமிழகத்திற்காக விரைவில் 500 எலெக்ட்ரிக் பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் முதல் கட்டமாக 100 எலெக்ட்ரிக் பஸ்கள் சோதனை முறையில் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டீசல் பஸ்களை விட எலெக்ட்ரிக் பஸ்கள் குறைவான செலவில் அதிக தூரம் பயணிக்க கூடியது அதே நேரம் இது சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது மாசை ஏற்படுத்தாது. இதனால் டீசல் பஸ்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகப்படுத்த பல்வேறு தரப்பிலிருந்து முயற்சிகள் எடுத்து எடுக்கப்பட்டு வருகிறது.

electric bus in chennai

இந்நிலையில் மத்திய அரசு பிரதம மந்திரியின் மின்சார பஸ் சேவை திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூபாய் 57,613 கோடியை செலவு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் பத்தாயிரம் எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை அரசு மட்டும் தனியாக செய்யாமல் அரசும் தனியாரும் கூட்டு சேர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி இந்தியா முழுவதும் உள்ள மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

electric bus in chennai

இதன் படி தமிழகத்திலும் விரைவில் இந்த மின்சார பஸ்கள் எல்லாம் ஓட போகிறது. இதற்காக ஜெர்மன் நாட்டில் உள்ள வங்கியின் நிதி உதவியுடன் 500 மின்சார பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை முயற்சியாக முதலில் 100 மின்சார பஸ்களை மட்டும் வாங்கி அதை சோதனை செய்து அதன் மூலம் கிடைக்கும் முடிவுகளை வைத்து பாக்கி பஸ்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதலில் இந்த பஸ்கள் எல்லாம் சென்னையில் தான் சோதனை செய்யப்பட உள்ளன. பின்னர் இது தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த பஸ்களை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது மூலம் பெட்ரோல் பஸ்களுக்கு முடிவு கட்டப்படும் என தெரிகிறது.

சென்னையின் முக்கிய பகுதிகளில் இந்த எலெக்ட்ரிக் பஸ் இயக்கப்படும் போது இதில் பயணிகள் சொகுசாக பயணம் செய்ய முடியும் இந்த பஸ் முழுவதும் ஏசி வசதி கொண்ட பஸ் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பஸ்ஸில் சிறப்பான இருக்கை வசதிகள் மற்றும் அதிக நபர்கள் நின்று செல்லும் வகையில் இந்த பஸ் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் தற்போது 3000 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறன. இதில் சுமார் 30 லட்சம் பயணிகள் தினமும் பயணித்து வருகிறார்கள். இந்த பஸ்கள் எல்லாம் படிப்படியாக எலெக்ட்ரிக் பஸ்கள் ஆக மாற்ற முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் எல்லாம் அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

அதே நேரம் இந்த பஸ்கள் தற்போது முதல் அடுத்த 15 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் 35 பயணிகள் அமர்ந்து செல்ல முடியும் 35 பயணிகள் நின்று கொண்டு செல்ல முடியும் ஆக மொத்தம் 70 பேர் இந்த பஸ்ஸில் பயணிக்க முடியும்.

இந்த பஸ்ஸில் ஊனமுற்றவர்களுக்கான சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் முழுமையாக சார்ஜ் ஏற இரண்டு மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறது. சென்னையில் ஓடும் பஸ்கள் எல்லாம் தற்போது ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 250 முதல் 300 கிலோமீட்டர் வரை பயணிக்கின்றனர் அதற்கு ஏற்றார் போல் பேட்டரி மற்றும் சார்ஜிங் ஸ்டேஷனுக்கு அமைத்து இந்த பஸ்கள் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசின் டீசல் பஸ்கள் மிக மோசமான பராமரிப்பு காரணமாக மிக மோசமான நிலையில் இயங்கி வருகிறது இதற்கெல்லாம் மாற்றாக எலெக்ட்ரிக் பஸ்களை கொண்டு வருவது சிறந்த திட்டம் தான். எலெக்ட்ரிக் பஸ்களின் பராமரிப்பு குறைவாக இருக்கிறது. விரைவில் இது தமிழகம் முழுவதும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கலாம்.

Article Published On: Saturday, August 19, 2023, 15:45 [IST]
English summary
500 electric buses coming to tamil nadu chennai to operate 100 in phase one
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+