இந்த வேனில் எத்தனை பேர் போகலாம்... சொல்லுங்க பார்க்கலாம்!
இங்கிலாந்தில் நடந்த ஃபோக்ஸ்வேகன் டிரான்ஸ்போர்ட்டர் வேன் உரிமையாளர்களுக்கான திருவிழாவில், ஒரு கேம்பர்வேனில் 51 பேர் பயணித்து புதிய உலக சாதனை படைத்தனர்.
பேரீட்சை பழங்களை அடைத்த டப்பா போன்று அந்த பயணிகள், ஊர்ந்து சென்று புதிய உலக சாதனையை பதிவு செய்தது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வேன் திருவிழா
இங்கிலாந்தில் உள்ள மால்வெர்ன் என்ற இடத்தில் ஃபோக்ஸ்வேகன் டிரான்ஸ்போர்ட்டர் பயணிகள் வேன்களுக்கான பிரத்யேக திருவிழா நடக்கிறது.

கிளாசிக் வேன்களுக்கான விழா
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவில் ஃபோக்ஸ்வேகன் டிரான்ஸ்போர்ட்டர் டைப்2 வேன் உரிமையாளர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.

பழைய வேனில் சாதனை
இந்த திருவிழாவில் ஒரு நல்ல காரியத்துக்காக உலக சாதனை படைக்க திட்டமிட்டனர். அதன்படி, 1974ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் கேம்பர் வேனில் 51 பேர் பயணித்து புதிய சாதனை படைத்தனர். இதில், அனைத்து வயதினரும் அடக்கம்.

பெரும்பாடு
இந்த சாதனையின்போது, காருக்குள் அனைவரும் ஏறிய பின், இரண்டு பேர் பெரும்பாடுபட்டு கதவுகளை மூடினர்.

சாதனை
உலக சாதனை படைத்த பின் ஒன்றாக படமெடுத்துக் கொண்ட குழுவினர்.

நலநிதி
இந்த கின்னஸ் சாதனை மூலம் கிடைக்கும் நிதியை 'மேக் எ விஷ்' என்ற புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு வழங்கப்பட உள்ளது.

திருவிழா
இந்த திருவிழாவில் 5,000 ஃபோக்ஸ்வேகன் கேம்பர் வேன்களும், 25,000 கேம்பர் வேன் ஆர்வலர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Photo Credit: Daily mail


Click it and Unblock the Notifications








