51 ஊழியர்களுக்கு சொகுசு கார் பரிசு! கெத்து காட்டிய மருந்து கம்பெனி அதிபர்!
தன் நிறுவனத்தில் பணியாற்றும் 51 சிறந்த ஊழியர்களுக்கு 51 சொகுசு கார்களை வாங்கி ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் பரிசளித்த சம்பவம் சமீபத்தில் வைரலாக பரவி வருகிறது. தீபாவளி முன்னிட்டு இவர் இந்த பரிசை வழங்கியுள்ளார். வழக்கமாக தீபாவளிக்கு போனஸ் கொடுப்பது சாதாரணமான விஷயம் தான். ஆனால் ஒருவர் தனது ஊழியர்களுக்கு சொந்தமாக கார் வாங்கி கொடுத்தது பலரை ஆட்சியைப் படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த எம்ஐடிஎஸ் என்ற நிறுவனத்தின் சேர்மனாக இருப்பவர் எம்கே பாத்தியா. இவர் நடத்திவரும் எம்ஐடிஎஸ் என்ற குழுமம் மருந்து தயாரிக்கும் நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிறுவனம் சண்டிகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் சிறந்த 51 ஊழியர்களுக்கு இந்நிறுவனத்தின் உரிமையாளர் எம்கே பாத்தியா சொந்தமாக சொகுசு காரை வாங்கி பரிசளித்துள்ளார்.

ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ஒவ்வொரு விதமான காரை வாங்கி பரிசளித்துள்ளார். அதில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ எஸ்யூவி காரும் அடக்கம். குறிப்பிட்ட கார் என்று இல்லாமல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காரை வாங்கி இவர் பரிசளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இதற்காக அவர் ஊழியர்களை தேர்வு செய்த விதம் பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு இவரது நிரூபணம் மிகக் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட வங்கியில் வாங்கிய கடனுக்கு மொத்த சொத்தும் பறிபோகும் நிலை ஏற்பட்டிருந்த நிலையில், இவரது நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் கடுமையான முயற்சியால் பெரும் நஷ்டத்தில் இருந்து இவரது நிறுவனம் மீண்டு வந்தது. கடந்த 2015ம் ஆண்டு தான் எம்ஐடிஎஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது இவரது பெயரில் 12 நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் இந்தியாவில் மருத்துவ தயாரிப்புகளை தயாரித்து வரும் நிலையில் தற்போது இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான உரிமத்தை நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் கனடா, லண்டன், துபாய் ஆகிய பகுதிகளுக்கு தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான உரிமமும் பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது இதனால் இந்நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டி உள்ளது.
இவ்வளவு பெரிய வளர்ச்சியை பெற முக்கியமான காரணம் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தான். இந்த ஊழியர்கள் சிறப்பான வளர்ச்சியை பெற்று தந்ததற்காக நன்றியாக சிறந்த ஊழியர்களை தேர்வு செய்து அதில் 51 பேருக்கு இந்நிறுவனம் சொந்தமாக கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளது. இதை அந்நிறுவனத்தின் உரிமையாளரே நேரடியாக ஊழியர்களுக்கு அதன் சாவியை வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். இப்படியான நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என பலர் இந்த வீடியோவிற்கு கீழே கருத்திட்டு வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெயரளாக வரை வரும் நிலையில் சிலர் இது குறித்து சந்தேகங்களையும் எழுப்பி வருகிறார்கள். இந்த வாகனங்கள் எல்லாம் முழுவதுமாக விலை கொடுத்து வாங்கப்பட்டதா அல்லது இஎம்ஐ முறையில் வாங்கப்பட்டதா எப்படியாக ஈஎம்ஐ முறையில் வாங்கி இருந்தால் அந்த இஎம்ஐக்கான பணம் அவர்களை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுமா என்ற கேள்விகள் எல்லாம் எழுப்பப்பட்டு இருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார்கள் எல்லாம் எப்படி வாங்கப்பட்டது என்ற தகவல்கள் இல்லை என்றாலும் ஊழியர்களுக்கு கார்களை பரிசளிக்க நிறுவனம் முடிவு செய்து மிகச்சிறந்த விஷயமாக இருக்கிறது. கார்கள் ஒரு மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் விதமாக இந்த செயல்பாடு இருந்தது நிச்சயம். இந்தியாவில் வாகன விற்பனை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதற்கு இது எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு தான்.


Click it and Unblock the Notifications








