உல்லாச கப்பலான தமிழக அரசு பஸ்கள்... படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்!

By Arun

தமிழகத்தில் முதல் முறையாக படுக்கை, கழிவறை, ஏசி, ஜிபிஎஸ், சிசிடிவி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார், அருகில் வரும் வாகனங்கள் குறித்த தகவல்களை டிரைவருக்கு தெரியப்படுத்தும் சென்சார் என தனியார் ஆம்னி பஸ்களை மிஞ்சும் வகையிலான வசதிகளுடன் கூடிய அரசு பேருந்துகளின் சேவை தொடங்கியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள இந்த பஸ்களில் உள்ள வசதிகள் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மீள முடியாத நஷ்டத்தில் சிக்கி கொண்டுள்ளன. ஒரு ஆண்டுக்கு மட்டும் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சுமார் 3,960 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

உயர் அதிகாரிகள் மட்டத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் ஊழல், நிர்வாக திறமையின்மை உள்ளிட்ட காரணங்களால்தான், தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் தமிழக அரசு பஸ்களின் தரம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

தமிழகத்தில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை உடைசல்களாக உள்ளன. குறிப்பிட்ட அளவிலான பஸ்கள் காலாவதியாகி விட்டன. எனவே புதிய பஸ்களை வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், புதிய பஸ்களை வாங்க முடியவில்லை.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

எனவே தனியார் பஸ்களில் பயணிப்பதையே மக்கள் விரும்பி வருகின்றனர். இதன் காரணமாகவும் அரசு பஸ்களின் மூலம் போதிய வருமானம் கிடைப்பதில்லை. இந்த சூழலில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் அதிநவீன பஸ்களை இயக்க தொடங்கின.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

அம்மாநில அரசுகளால் இயக்கப்படும் அதிநவீன சொகுசு பஸ்களில் பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் தமிழக அரசு பஸ்களில் மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்தபடி அச்ச உணர்வுடன்தான் பயணித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு மீது மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

இதை போக்குவதற்காக தனியார் பஸ்களை மிஞ்சும் வகையில், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பஸ்கள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதிநவீன வசதிகள் அடங்கிய பஸ் மாதிரியை கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

இந்நிலையில், முதற்கட்டமாக 515 புதிய அரசு பஸ் சேவை இன்று தொடங்கப்பட்டது. சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, புதிய அரசு பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

இந்த பஸ்களில் பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன. இதில், படுக்கை மற்றும் குளிர்சாதன வசதி குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக வரலாற்றில், முதல் முறையாக படுக்கை, குளிர்சாதன வசதியுடன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 14 படுக்கைகள் இடம்பெற்றிருக்கும்.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

இதுதவிர கழிப்பறை வசதி கொண்ட பஸ்களும் இதில் அடங்கும். மேலும் இந்த பஸ்களில் ஜிபிஎஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் அடுத்த நிறுத்தம் குறித்த குரல் அறிவிப்பை கேட்டு விட்டு, பயணிகள் இறங்க தயாராகலாம். அதுமட்டுமல்லாமல் பேருந்து நிறுத்தம் குறித்த டிஜிட்டல் போர்டும் இடம்பெற்றுள்ளது.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

சென்சாருடன் கூடிய தானியங்கி கதவுகள், தானியங்கி படிக்கட்டுகள், மாற்று திறனாளிகளுக்கு என பிரத்யேகமான தாழ்தள படிக்கட்டு வசதிகளும் இந்த பஸ்களில் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் பஸ்களின் முன்புறமும், பின்புறமும் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

இந்த சென்சார்கள் மூலமாக அருகில் வரும் வாகனங்கள் குறித்த தகவல் டிரைவருக்கு தெரியப்படுத்தப்படும். டிரைவர் தூங்கினால் எச்சரிக்கை செய்யும் வகையிலான சென்சார் கருவியும் கூட தொலை தூரம் செல்லும் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ளது.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

அத்துடன் பயணிகளின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் தனியார் ஆம்னி பஸ்களை தூக்கி சாப்பிட்டு விடும் வகையிலான அதிநவீன சொகுசு வசதிகளை, தமிழக அரசு புதிதாக வாங்கியுள்ள பஸ்கள் உள்ளடக்கியுள்ளன.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

எனவே அரசு பஸ்களில், பயணிகளின் வருகை இனி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலமாக தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாய் உயரும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

இதுமட்டுமல்லாமல் பஸ்களின் நிறம் மாற்றப்பட்டிருப்பதும் கூட கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமாக தமிழக அரசு பஸ்கள் பச்சை, காவி உள்ளிட்ட நிறங்களில் இயக்கப்படுகின்றன. ஆனால் புதிய பஸ்களில் வெள்ளை, நீலம், சாம்பல் உள்ளிட்ட நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

மொத்தமாக 515 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், 40 பஸ்கள் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு (சென்னை) ஒதுக்கப்பட்டுள்ளது. இதர அரசு போக்குவரத்து கழகங்களான விழுப்புரத்திற்கு 60, சேலத்திற்கு 78, கோவைக்கு 172 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

இதுதவிர கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 64 பஸ்களும், மதுரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு 32 பஸ்களும், திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்திற்கு 69 பஸ்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 134 கோடியே 53 லட்ச ரூபாய்.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

இதனிடையே சென்னையில் இருந்து மட்டும் 266 பஸ் சேவைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ்கள் சென்னையில் இருந்து விழுப்புரம், சேலம், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

எஞ்சிய பஸ் சேவைகள் அந்தந்த மாவட்டங்களில் இருந்தே தொடங்கி வைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்து துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்கு முன்னதாக, எதிர்கட்சிகளின் வாயை அடைக்கும் வகையில், புதிய பஸ் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டன.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜு உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக 515 பஸ்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. எஞ்சிய பஸ்களையும் தமிழக அரசு விரைவாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படுக்கை, கழிவறை, ஏசி, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் சென்சார்! மலைக்க வைக்கும் தமிழக அரசு பஸ்கள்...

அப்படி தமிழக அரசு மிக வேகமாக எஞ்சிய பஸ்களையும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால், தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்களால் கல்லா கட்டா முடியாது என்பது மட்டும் நிதர்சனம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

01.திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...

02.இனி லைசென்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும் ; இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

03.டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
515 bus service with bed and toilet facility in tamilnadu. Read in tamil
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more