515 கணேசனை பற்றி தான் இப்ப ஊரே பேசுது! இவரது கார் தான் ஹைலைட்!

55 ஆண்டுகளாக சொந்த காரில் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வரும் 73 வயது முதியவர் குறித்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளார். உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்காக உதவி செய்துள்ளார். இப்படியாக இவர் மிகப்பெரிய அளவில் தனது சொந்த காரை வைத்து இதையெல்லாம் செய்துள்ளார். இவர் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த 55 ஆண்டுகளாக தனது சொந்த வாகனத்தில் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வருகிறார். இவர் சிறுவயதாக இருக்கும் போது இந்த சேவையை துவங்கிய நிலையில், தற்போது வயதான நிலையிலும் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்காக உதவிகளை செய்து வருகிறார். இவரை கணேசன் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. 515 கணேசன் என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும்.

515 Ganesan Ambassador

ஏனென்றால் இவர் முதல் முதலில் வாங்கிய காரின் பதிவு எண் 515 ஆகும். அந்த வாகனத்தை அவர் வாங்கியதற்கு பின்னால் மிகப்பெரிய கதை இருக்கிறது. இவர் ஊரில் ஒரு முறை உடல்நிலை சரியில்லாத ஒருவரை அந்த காலத்தில் வாகனம் எதுவும் இல்லாததால் தவித்தனர்.

அவரை வண்டி கட்டி வைக்கோல் வைத்து அவரது உடலை போத்தி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். இப்படி சென்றால் கொண்டு செல்ல அதிக நேரம் ஆகும் என்பதை உணர்ந்த கணேசன் எப்படியாவது ஒரு காரை வாங்கி விட வேண்டும் என அவர் யோசித்தார்.

515 Ganesan Ambassador

அப்பொழுது அவர் கையில் இருந்த பொருட்களை எல்லாம் வைத்து அந்த காலத்திலேயே ரூ17,000 செலவு செய்து சொந்தமாக ஒரு காரை வாங்கினார். அந்த காரின் பதிவு எண் தான் 515. அந்த காரில் அவர் தொடர்ந்து அந்த ஊரில் உள்ள கர்ப்பிணி பெண்கள் வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், அனாதையாக உயிரிழந்தவர்கள், உள்ளிட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதும் மீண்டும் அவர்களை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும் பணியை செய்து வந்தார்.

இதை இவர் ஒரு சேவையாகவே தொடர்ந்து செய்ய துவங்கி விட்டால், கடந்த 1968-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி இவர் இந்த காரை வாங்கினார். இந்த காரை வாங்கியது முதல் இன்று வரை தொடர்ந்து இந்த காரிலேயே இவர் ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகிறார்.

515 Ganesan Ambassador

சொல்லப் போனால் பிரசவத்திற்கு இலவசம் என முதலில் தமிழகத்தில் அறிவித்தது இவர் தான் என சொல்ல வேண்டும். முதலில் இவர் காரில் பயணிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அதன் காரில் பயணிப்பதற்கான பணத்தை அவர் யாரிடமும் வசூலிப்பதில்லை.

இதன் பின்னர் அனாதையாக உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யவும். அவரது காரை பயன்படுத்தினால் இதற்காகவும் அவர் பணம் எதுவும் ஒத்துழைக்கவில்லை. தொடர்ந்து இவர் இந்த சேவையை நீண்ட ஆண்டுகளாக செய்து வருகிறார். இதுவரை 2500 கர்ப்பிணி பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று டிராப் செய்துள்ளார். இது மட்டுமல்லாமல் விபத்தில் சிக்கிய 1500 பேர்களை தனது காரில் அழைத்துச் சென்று அவர்களது உயிரை காப்பாற்றியுள்ளார்.

மேலும் 8000க்கும் அதிகமான அனாதையாக உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டுக் கொண்டு சென்று அவர்கள் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இவரது செயலை பாராட்டி அரசு இவருக்கு டாக்டர் பட்டம் எல்லாம் வழங்கி உள்ளது. மேலும் இவர் பல்வேறு விதமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

இது இவர்கள் தொழில் கிடையாது. இவர் பழைய இரும்பு வியாபாரம் தான் செய்கிறார். இன்று வரை அந்த பழைய இரும்பு வியாபாரத்தை தான் தொடர்ந்து செய்து கொண்டே வருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் இந்த இலவச சேவையையும், குடும்பத்தையும் நடத்தி வருகிறார்.

இவருக்கு ஐந்து பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தற்போது திருமணம் செய்து கொடுத்து விட்டார். தற்பொழுது இவரும் இவரது மனைவியும் மட்டுமே இருக்கிறார்கள். இந்த சேவை நடத்தியதன் மூலம் இவர் பல்வேறு விதமான கஷ்டங்களை அனுபவித்தாலும், தற்போது இவரை கண்டுபிடித்து அரசு இவருக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் வழங்கி உள்ளது.

இவர் முதல் காராக 515 என்ற பதிவில் கொண்ட காரை வாங்கினாலும், தற்போது அந்த காரை விற்பனை செய்துவிட்டு அடுத்தடுத்து கார்களை மாற்றியுள்ளார். இதுவரை 17 கார்களை மாற்றியுள்ளார். தற்பொழுது 17வது காரை தான் பயன்படுத்தி வருகிறார். இந்த கார் அம்பாஸிடர் காராகவும், இந்த காரை இவர் ரூபாய் 40 ஆயிரத்திற்கு வாங்கியதாக கூறியுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒரு காலகட்டத்தில் கார் என்பது ஆடம்பரமான விஷயமாக இருந்தது. அவசர தேவைக்கு கார் மிக அவசியமா தேவையாக இருந்தாலும், அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் பல்வேறு விதமான பிரச்சினைகள் இருந்தது கார் வைத்திருப்பவர்களும் விபத்து அவசர உதவிக்கு அவர்கள் கார்களை வழங்க தயங்குவார்கள். அந்த காலகட்டத்தில் இவர் செய்த இந்த செயல் நிச்சயம் மிகப்பெரிய அளவில் பாராட்டத்தக்கது தான்.

More from DriveSpark

Article Published On: Monday, September 23, 2024, 14:32 [IST]
English summary
515 ganesan from alangudi runs ambulance service for 55 years in his ambassador car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X