Just In
- 32 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முதல் முறை... பிரதமர் மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் புதிய சாதனை... என்னனு தெரியுமா?
பிரதமர் மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையை பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் புதிய சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதையை (Atal Tunnel), நேற்று (டிசம்பர் 27) ஒட்டுமொத்தமாக 5,450 வாகனங்கள் கடந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடல் சுரங்கப்பாதையை பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இது ஒரு சாதனையாகும்.

மணாலி பக்கத்தில் இருந்து வந்து அடல் சுரங்கப்பாதையில் நுழைந்த வாகனங்களின் எண்ணிக்கை 2,800 ஆகும். அதே சமயம் லஹால் பக்கத்தில் இருந்து 2,650 வாகனங்கள் வந்துள்ளன. ஒட்டுமொத்தமாக நேற்று ஒரே நாளில் 5,450 வாகனங்கள் அடல் சுரங்கப்பாதையை பயன்படுத்தியுள்ளன. அடல் சுரங்கப்பாதை கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது.

அப்போதில் இருந்து ஒரே நாளில் இவ்வளவு அதிகமான வாகனங்கள் அடல் சுரங்கப்பாதையை பயன்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். காவல் துறை அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். அடல் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடிதான் திறந்து வைத்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் போக்குவரத்து முக்கியத்துவம் மிகுந்த அடல் சுரங்கப்பாதையில் ஒரு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. அடல் சுரங்கப்பாதை பிரபலமாக இருந்து வரும் நிலையில், அங்கு போட்டோ மற்றும் வீடியோக்களை எடுக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக அடல் சுரங்கப்பாதையின் உள்ளே வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

இந்த வகையில் அடல் சுரங்கப்பாதையின் உள்ளே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக நேற்று மொத்தம் 15 சுற்றுலா பயணிகளை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில், டெல்லியை சேர்ந்த 7 பேரும் அடங்குவர். சுற்றுலா பயணிகளிடம் இருந்து 2 வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய சுற்றுலா பயணிகளை காவல் துறையினர் கைது செய்வது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த டிசம்பர் 24ம் தேதியன்று, டெல்லியில் இருந்து வந்திருந்த 10 சுற்றுலா பயணிகளை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

அவர்களிடம் இருந்து மூன்று கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் 24ம் தேதி கைது செய்யப்பட்ட சுற்றுலா பயணிகள், அடல் சுரங்கப்பாதையின் உள்ளே வாகனங்களை நிறுத்தி நடனம் ஆடி கொண்டிருந்தனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவேதான் காவல் துறையினர் அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், அடல் சுரங்கப்பாதைக்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காவல் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றுகின்றனரா? என்பதை கண்காணிக்க, அடல் சுரங்கப்பாதையில் காவல் துறையினர் ரோந்து சென்று வருகின்றனர்.
Note: Images used are for representational purpose only.