சாலைகள் விரிவாக்கத்தில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! இந்த ஆண்டில் 5,600கிமீ-க்கு போடப்பட்டுள்ள புதிய சாலைகள்

திட்டமிடப்பட்ட 12,000 கிமீ-களில் கிட்டத்தட்ட 5,600கிமீ-க்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதாக இந்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சாலைகள் விரிவாக்கத்தில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! இந்த ஆண்டில் 5,600கிமீ-க்கு போடப்பட்டுள்ள புதிய சாலைகள்

நாட்டின் விரிவாக்கம் என்பதன் அர்த்தங்களில், கிராமப்புறங்களில் இருந்து மாநகரங்கள் வரையில் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதும் அடங்குகிறது. இதனாலேயே ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட கிமீ தொலைவிலான சாலை பணிகளை செய்து முடிக்க வேண்டும் என இந்திய அரசாங்கம் நிதியாண்டின் துவக்கத்திலேயே திட்டமிடுகிறது.

சாலைகள் விரிவாக்கத்தில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! இந்த ஆண்டில் 5,600கிமீ-க்கு போடப்பட்டுள்ள புதிய சாலைகள்

இந்த வகையில் இந்த 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தமாக 12,000 கிமீ-களுக்கு சாலை கட்டுமான பணிகளை முடிக்க இந்தியா சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம் திட்டமிட்டது. இதில் தற்போதுவரையில் 5,600கிமீ-கள் நிறைவடைந்துள்ளதாக இந்த அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் விரிவாக்கத்தில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! இந்த ஆண்டில் 5,600கிமீ-க்கு போடப்பட்டுள்ள புதிய சாலைகள்

இந்த ஆண்டு இறுதியில் பல தென் மாநிலங்களில் கனமழை பெய்த போதிலும், இத்தகைய டார்க்கெட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட மொத்த கி.மீ-களில் முழுமையாக 50% கூட இன்னும் முடிக்கப்படவில்லை என்றாலும், "மொத்த இலக்கையும் இந்த நிதியாண்டு முடிவதற்குள்ளாக நிறைவு செய்துவிடுவோம்" என நம்புவதாக ஒன்றிய சாலை செயலாளர் கிரிதர் அரமானே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சாலைகள் விரிவாக்கத்தில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! இந்த ஆண்டில் 5,600கிமீ-க்கு போடப்பட்டுள்ள புதிய சாலைகள்

பிரபல செய்திதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மேலும் பேசிய அவர், இந்த ஆண்டிற்கான 12,000 கிமீ-களில் இதுவரை, நாங்கள் ஏற்கனவே 5,600கிமீ-களை முடித்துவிட்டோம். மீதமுள்ளவை நிறைவடையும் நிலையில் உள்ளன. நடப்பு 2021-22 நிதியாண்டின் இறுதிக்குள் முழு இலக்கையும் நிறைவு செய்துவிடுவோம் என நம்புகிறோம்" என்றார். 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளை காட்டிலும் கொரோனாவிற்கு பிந்தைய மாதங்களில் சாலை கட்டமைப்பு & விரிவாக்க பணிகள் சிறப்பாக நடைப்பெற்று வருவதாக ஒன்றிய அரசாங்கம் தெரிவிக்கிறது.

சாலைகள் விரிவாக்கத்தில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! இந்த ஆண்டில் 5,600கிமீ-க்கு போடப்பட்டுள்ள புதிய சாலைகள்

தங்களுக்கான இலக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறும் அராமனே, தாங்கள் தற்போது 6-பாதை & 8-பாதைகளை கொண்ட நெடுஞ்சாலைகளை கட்டமைத்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிரிதர் அராமனே பேசுகையில், 2018 மற்றும் 2019ஆம் நிதியாண்டை காட்டிலும் எங்களின் பணி கடினமாகியுள்ளது, மற்றும் எங்களின் இலக்கு அதிகரித்துள்ளது.

சாலைகள் விரிவாக்கத்தில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! இந்த ஆண்டில் 5,600கிமீ-க்கு போடப்பட்டுள்ள புதிய சாலைகள்

2018 & 2019ஆம் ஆண்டுகளில் நாங்கள் கட்டிய நான்கு வழிச்சாலை மற்றும் இருவழி சாலைகளுடன் ஒப்பிடுகையில், இப்போது நாங்கள் பெரும்பாலும் எட்டு வழிகள், விரைவுச்சாலைகள் மற்றும் எளிதாக அணுகக்கூடிய கட்டுப்பாட்டு சாலைகள் மற்றும் ஆறு வழி சாலைகளை பல பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களில் கட்டுகிறோம். எனவே இந்த ஆண்டு சாலை கட்டுமானங்கள் மிக அதிகமாக உள்ளது.

சாலைகள் விரிவாக்கத்தில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! இந்த ஆண்டில் 5,600கிமீ-க்கு போடப்பட்டுள்ள புதிய சாலைகள்

இது கடந்த ஆண்டுகளை காட்டிலும் 1.5- 1.8% அதிகமாகும். இதுவரை, 5,600 கிமீ-க்கு கட்டுமான பணிகளை முடித்துள்ளோம். இந்த காலாண்டர் ஆண்டு இறுதிக்குள் மேலும் 1,100- 1,200 கிமீ-களை நிறைவு செய்வோம். எனவே, 2021ஆம் ஆண்டு முடிவதற்குள் சாலை விரிவாக்கத்தில் 7,800 - 8,000 கிமீ-களை தொடுவோம். ஒட்டுமொத்தமாக 5 ஆண்டிற்குள் 34,000 கிமீ தொலைவிற்கு சாலை கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தோம்.இதில் 19,500ஐ முடித்துள்ளோம்.

சாலைகள் விரிவாக்கத்தில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! இந்த ஆண்டில் 5,600கிமீ-க்கு போடப்பட்டுள்ள புதிய சாலைகள்

நடப்பு நிதியாண்டிற்குள் குறைந்தப்பட்சம் 21,600கிமீ தொலைவிலான கட்டுமான பணிகளையாவது முடிப்போம்" என்றார். சுங்க வரிகளின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் & பணமாக்குதல் பற்றி அரமனே கூறுகையில், டிஒடி எனப்படும் டோல் ஆப்பிரேட் டிரான்ஸ்ஃபர் மூலம் நாங்கள் ஏற்கனவே சுமார் 2,200 கோடி ரூபாயை பெற்றுள்ளோம். மேலும் இந்த ஆண்டு உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை (InvIT) மூலம் சுமார் 8,000 கோடி ரூபாயை திரட்டியுள்ளோம். மேலும், ஏல செயல்முறைக்கு டிஒடி தயாராக உள்ளது" என்றார்.

சாலைகள் விரிவாக்கத்தில் தீவிரம் காட்டும் ஒன்றிய அரசு!! இந்த ஆண்டில் 5,600கிமீ-க்கு போடப்பட்டுள்ள புதிய சாலைகள்

தற்போதைய திட்டங்களை பற்றி மேலும் விரிவாக கூறிய ஒன்றிய அரசு அதிகாரி, "இதுதவிர, நாங்கள் சில கிரீன்ஃபீல்ட் விரைவுச்சாலைகளையும் பாதுக்காக்கிறோம். டெல்லி- மும்பை விரைவு சாலை, ராய்ப்பூர்- வைசாக் விரைவுச்சாலை மற்றும் டெல்லி- அமிர்தசரஸ் - கத்ரா விரைவுச்சாலை ஆகியவை தற்போதைக்கு மூன்று முக்கியமான விரைவுச்சாலைகள் ஆகும். இவற்றின் மூலமாக பெறப்படும் டோல் வருவாய் எதிர்கால திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளன" என்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
5600 km highway construction completed out of 12000 km details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X