வயது வெறும் நம்பர் தான்!! 57 வயதில் அசத்தியுள்ள டாக்டர் - என்ன செய்துள்ளார் தெரியுமா?

கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் வெறும் 28 நாட்களில், 3 நாடுகளை கடந்து சுமார் 8,000கிமீ தொலைவுக்கு சாலை வழியாக வாகனத்தில் பயணம் செய்து பிரம்மிக்க வைத்துள்ளார். யார் இந்த மருத்துவர்? எதற்காக இந்த நீண்ட தொலைவு பயணம்? இதற்கு ஸ்பான்சர் செய்வது யார்? என்ற கேள்விகளுக்கு பதில்களை இனி பார்க்கலாம்.

நம்மில் பெரும்பாலானோருக்கு அவ்வப்போது பயணங்களை மேற்கொள்வது பிடித்திருக்கும். சிலர் அவ்வப்போது சிறு சிறு பயணங்களை மேற்கொள்வர். ஆனால் சிலரோ, ஒரு வருடத்திற்கோ அல்லது 2 வருடங்களுக்கு ஒருமுறையோ ஓர் நீண்ட தொலைவு பயணத்தை மேற்கொண்டு விடுவர். இவ்வாறு நீண்ட தொலைவு பயணங்களை மேற்கொள்வோரில் பெரும்பாலானோர் இளம் வயதினராகவே இருப்பர்.

doctor completed 8000km road trip

ஆனால் இங்கு ஒருவர் தனது 57 வயதில் சீனா வரை பயணம் செய்து அசத்தி உள்ளார். கர்நாடகா மாநிலம், கலபுராகி பகுதியை சேர்ந்த மருத்துவர் எம்.டங்கா. பொது அறுவை சிகிச்சை நிபுணரான இவர், வயது வெறும் எண் மட்டுமே என சொல்லும் விதமாக, தனது 57 வயதில் அசத்தலான ஓர் காரியத்தை செய்துள்ளார். தற்சமயம் மும்பையில் வசித்துவரும் எம். டங்கா மும்பையில் இருந்து சீனாவுக்கு சாலை வழியாக சுமார் 8,000 கிமீ-க்கு பயணம் செய்து சென்றுள்ளார்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த சாதனையை டங்கா வெறும் 28 நாட்களில் செய்து முடித்துள்ளார். மருத்துவர் டங்காவின் இந்த பயண தொலைவு சுமார் 8,000 கிமீ ஆகும். 8,000 கிமீ தொலைவு பயணத்தை 28 நாட்களில் முடிப்பது என்பது உண்மையில் ஆச்சரியமளிக்கக்கூடிய விஷயமாகும். அதாவது, ஒவ்வொரு நாளும் 285கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு இவர் பயணம் செய்துள்ளார்.

doctor completed 8000km road trip

மருத்துவர் எம். டங்காவின் இந்த நீண்ட தொலைவு பயணத்திற்கு ஸ்பான்சர் வழங்கி இருப்பது வண்டர் பியோண்ட் பவுண்டரீஸ் என்ற நிறுவனம் ஆகும். சியாட் லிமிடெட் மற்றும் மஹிந்திரா அட்வென்ச்சர் நிறுவனங்கள் உடன் கூட்டணி சேர்ந்து வண்டர் பியோண்ட் பவுண்ட்ரீஸ் நிறுவனம் இந்த பயணத்தை எம். டங்கா மூலம் நடத்தி உள்ளது.

இந்த மும்பை - சீனா பயணத்தில் எம். டங்கா மட்டுமில்லாமல், மேலும் 9 பேர் என மொத்தம் 10 பேர் கொண்ட குழுவாக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 4 பேர் பயணத்தை செயல்படுத்திய வண்டர் பியோண்ட் பவுண்ட்ரீஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். 3 பேர் முறையே அமெரிக்கா, ஹைதராபாத் மற்றும் ஹூப்பிளி பகுதிகளை சேர்ந்த அனுபவமிக்க டிராவலர்கள் ஆவர்.

doctor completed 8000km road trip

டாக்டர் டங்காவின் இந்த பயணம் மும்பையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி துவங்கியுள்ளது. கோராக்பூர் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த பயணத்தில் டாக்டர் டங்கா சென்ற குழு நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மண்டுவை 5வது நாளில் அடைந்துள்ளனர். 2 நாட்கள் நேபாளத்தில் பயணம் செய்த இந்த குழு, பின்னர் 9வது நாளில் சீனாவிற்குள் நுழைந்தனர். அதன்பின், கிட்டத்தட்ட 20 நாட்கள் சீனாவில் தான் இவர்களது பயணம் இருந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நீண்ட தொலைவு பயணத்திற்கான காரணம் என்ன? என்பது சரியாக தெரியவில்லை. ஒருவேளை மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு பயணமாக இது இருக்கலாம். அத்துடன், இந்த பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களில், 'ரோடு டூ சைபீரியா' என்ற வாசகம் அடங்கிய டீ சர்ட்டை டாக்டர் டங்கா அணிந்துள்ளார். ஆதலால், சீனாவுடன் இந்த பயணம் முடியுமா அல்லது சைபீரியாவுக்கும் சாலை வழியாக இந்த பயணம் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Article Published On: Monday, September 11, 2023, 20:18 [IST]
English summary
57 year old doctor completed 8000 km road trip
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X