500சிசி மோட்டார் சைக்கிளில் 58 இந்திய ராணுவர்கள் பயணித்து உலக சாதனை..!!

500சிசி மோட்டார் சைக்கிளில் 58 இந்திய ராணுவர்கள் பயணித்து உலக சாதனை..!!

By Azhagar

58 ராணுவ வீரர்கள் ஒன்று சேர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த சாகச நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் இருக்கும் இந்திய ராணுவத்தின் ஏஎஸ்சி பயிற்சி மையத்தில் தான் இந்த சாகச நிகழ்ச்சி நடந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

டர்னடோஸ் என்ற ராணுவ குழுவில் இருக்கும் 58 வீரர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று உலக சாதனை படைத்துள்ளனர்.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட இந்த சாகசத்தை செய்ய, டர்னடோஸ் ராணுவக் குழு சுமார் 6 மாத காலங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

இந்நிலையில் பெங்களூரு உள்ள ராணுவத்துக்கு சொந்தமான விமான தளத்தில் 58 பேர் ஒரே பைக்கில் பயணம் செய்யும் உலக சாதனை படைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

இதற்காக 500 சிசி கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்கில் டர்னடோஸ் ராணுவக் குழுவினர் தங்களது சாகச பயணத்தை தொடங்கினர்.

Trending On Drivespark:

Recommended Video

[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

வீரர்கள் பைக் மீது ஏறிய போது இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களை குறிக்கும் விதத்தில் ஹெல்மெட்டுகள் மற்றும் உடைகளை அணிந்திருந்தனர்.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

ராணுவ வீரர் சுபீதார் ராம்பால் யாதவ் பைக்கை ஓட்டினார். சாகச நிகழ்ச்சி தொடங்கப்பட்ட போது முதற்கட்டமாக 30 வீரர்கள் பயணித்தனர்.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

பிறகு பைக் தொடர்ந்து ஓடும்போது தலா 2 வீரர்கள் அடுத்தடுத்து ஏறினர். இதேபோல மொத்தம் 58 வீரர்களை அந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் தாங்கி சென்றது.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

உலக சாதனை படைப்பதற்கான முதல் முயற்சியில், பைக் ஓட்டுநர் சுபீதார் ராம்பால் யாதவின் கட்டுப்பாட்டை இழந்தது.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

வீரர்கள் ஒவ்வொரு பின் ஒன்றாக கீழே விழுந்தனர். மேலும் இதேபோல 2வது முறையாக வீரர்கள் முயற்சிக்க அதுவும் தோல்வியில் முடிந்தது.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

முதல் இரண்டு முயற்சிகளால் தளராத வீர்கள் 3வது முறையாக சாகசத்தை படைக்க முயன்றனர்.

58 வீரர்களும் பைக்கில் ஒவ்வொருவராக ஏறிக்கொள்ள, ஓட்டுநர் ராம்பால் யாதவ் மனதில் உறுதியுடன் ஓட்டினார்.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

இந்த 3வது முயற்சியால், 58 வீரகளும் கீழே விழாமல், ராயல் என்ஃபீல்டு பைக் சுமார் 1.20 கி.மீ தொலைவை 2 நிமிடங்கள் 14 விநாடிகளில் கடந்து புதிய உலக சாதனையாக அமைந்தது.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

‘டர்னடோஸ்' குழுவின் இந்த மோட்டார் சைக்கிள் சாகசத்தில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் சிலரும் இடம் பெற்றிருந்தனர்.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

மேலும் இந்த சாதனை லிம்கா, யுனிக்யூ உட்பட கின்னஸ் சாதனை புத்தகங்களில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

500சிசி ராயல் என்ஃபீல்டு பைக்கில், 58 ராணுவ வீரர்கள் பயணித்த இந்த உலக சாதனை முயற்சி குறித்து பேசிய உயர் ராணுவ அதிகாரி ஜெ.பி. வர்மா,

"இந்திய ராணுவ வீரகளின் இந்த சாதனை 3வது முயற்சியில் வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி. அடுத்ததாக 15 மோட்டார் சைக்கிள்களில் 300 வீரர்கள் வரை கோபுரம் அமைத்து பயணம் செய்து சாதனை படைக்க தயாராகி வருகிறோம்" என்று கூறினார்.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

2013ம் ஆண்டில் இந்திய ராணுவ வீரர்களில் 56 பேர் ஒரே பைக்கில் பயணித்து சாகசம் புரிந்தது தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

ராயல் என்ஃபீல்டு பைக்கில் இந்திய ராணுவ வீரர்கள் உலக சாதனை..!

தற்போது 2017ல் 58 ராணுவ வீரகள் பெங்களூரு ராணுவ தளத்தில், ஒரே பைக்கில் பயணித்து சாகசம் நிகழ்த்திருப்பது, 2013ம் ஆண்டு சாதனையை முறியடித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: 58 men of the Indian Army set a world record on Sunday by riding a single motorcycle at the IAF base. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X