பிஸியான சாலையில் பேட்டரி காரை தனியாக ஓட்டி வந்த 5 வயது சிறுவன்: சுற்றி வளைத்த போக்குவரத்து போலீஸார்!

ஆந்திர மாநிலத்தில் 5 வயது சிறுவன் தனது டாய் பேட்டரி காரை இயக்கிக்கொண்டு, அப்பகுதியின் மிகவும் பிஸியான சாலைக்குள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஸியான சாலையில் பேட்டரி காரை தனியாக ஓட்டி வந்த 5 வயது சிறுவன்: சுற்றி வளைத்த போக்குவரத்து போலீஸார்...!

இந்திய வாகன சட்டத்தின்படி, வாகனங்களை இயக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். இதன்பின்னர் தான், சாலையில் வாகனத்தை இயக்கும் உரிமம் பெற அவர் தகுதியானவராக கருதப்படுவார். மேலும், உரிமத்திற்காக விண்ணப்பிப்பவர்கள், போக்குவரத்து விதிகளுக்கு ஏற்ப சில பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, சாலையில் வாகனத்தை இயக்குவதர்க்கான உரிமம் வழங்கப்படும்.

பிஸியான சாலையில் பேட்டரி காரை தனியாக ஓட்டி வந்த 5 வயது சிறுவன்: சுற்றி வளைத்த போக்குவரத்து போலீஸார்...!

ஆனால், சிலரோ ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதில், வயது முதிர்ந்த சிலரும் லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை திருட்டுத்தனமாக இயக்குகின்றனர். போக்குவரத்து சட்டத்தின்படி, இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.

பிஸியான சாலையில் பேட்டரி காரை தனியாக ஓட்டி வந்த 5 வயது சிறுவன்: சுற்றி வளைத்த போக்குவரத்து போலீஸார்...!

இந்த நிலையில், சமீபகாலமாக சிறுவர்களால் ஏற்படும் விபத்து அதிகளவில் அரங்கேறி வருவதாக பல்வேறுபட்ட தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழும்பிய வண்ணம் உள்ளது. இதுபோன்று சம்பவங்களையும் நாம் சில முறை செய்தி தாள்களிலும், டிவியிலும் பார்த்திருப்போம். இத்தகைய, குற்றத்தை தவிர்க்கும் விதமாக, சிறுவர்கள் சாலையில் வாகனத்தை இயக்கினால், அவர்களின் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்ற புதிய உத்தரவை நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியது. இந்த புதிய விதியால் பத்துக்கும் மேற்பட்டோர் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஸியான சாலையில் பேட்டரி காரை தனியாக ஓட்டி வந்த 5 வயது சிறுவன்: சுற்றி வளைத்த போக்குவரத்து போலீஸார்...!

இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதில் எந்த குறைபாடுமில்லாமல் நடைபெற்று வருகிறது. அவ்வாறு சமீபத்தில் சென்னையில் சொகுசு கார் ஒன்றை இயக்கிய சிறுவன் தாருமாறாக காரை ஓட்டிச் சென்று சாலையில் இருந்த அனைத்து வாகனங்களையும் முட்டி மோதி தள்ளியுள்ளான். அப்போது, அந்த சிறுவனை விரட்டிச்சென்று பிடித்த அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும், அந்த காரை சின்னாபின்னமாக அடித்து துவம்சமும் செய்தனர்.

பிஸியான சாலையில் பேட்டரி காரை தனியாக ஓட்டி வந்த 5 வயது சிறுவன்: சுற்றி வளைத்த போக்குவரத்து போலீஸார்...!

இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஒரு வித்தியாசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால், இந்த சம்பவத்தால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிஸியான சாலையில் பேட்டரி காரை தனியாக ஓட்டி வந்த 5 வயது சிறுவன்: சுற்றி வளைத்த போக்குவரத்து போலீஸார்...!

விஜயாவாடாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்களது 5 வயது மகனுக்கு பேட்டரியால் இயங்கக்கூடிய டாய் காரை வாங்கிக் கொடுத்துள்ளனர். இந்த சூழலில், நேற்று முன்தினம் சிறுவன் மிகவும் அடம்பிடித்ததன் காரணமாக சிறுவனிடம் பேட்டரி காரை கொடுத்த அவனது வீட்டார், வீட்டிற்கு அருகிலேயே வைத்து விளையாடும் கூறியுள்ளனர். பின்னர், அவரது வேலையை கவனிக்க அவர் சென்றுவிட்டார்.

பிஸியான சாலையில் பேட்டரி காரை தனியாக ஓட்டி வந்த 5 வயது சிறுவன்: சுற்றி வளைத்த போக்குவரத்து போலீஸார்...!

அப்போது, வீட்டுக்கு அருகிலேயே விளையாடிய சிறுவன், சிறிது சிறிதாக அங்கிருந்து நகர்ந்து பென்ஸ் சர்க்கில் எனப்படும் பிஸியான சாலைக்குள் நுழைந்துள்ளான். சிறுவன் தனியொருவனாக காரை ஓட்டிச் செல்லும் காட்சியைக் கண்ட வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவனை மடக்கிய பொதுமக்கள் மற்றும் போலீஸார் சிறுவனிடம் விசாரணை செய்தனர்.

ஆனால், எதுவும் அறியாத அந்த மழலைச் சிறுவனோ ஜாலியாக தனது காரில் அமர்ந்துக்கொண்டு ஹாயாக பேசியுள்ளான். பின்னர், அவனை ஆட்டோ ஏற்றியப் போலீஸார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பிஸியான சாலையில் பேட்டரி காரை தனியாக ஓட்டி வந்த 5 வயது சிறுவன்: சுற்றி வளைத்த போக்குவரத்து போலீஸார்...!

பீக் ஹவர் எனப்படும் அதிகம் பிஸியான நேரத்தில் சிறுவன் காருடன் சாலையில் நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இவ்வளவு சிறிய குழந்தையிடம் காரைக் கொடுத்துவிட்டு பெற்றோர்கள் எங்கே சென்றார்கள் என்று சிறுவனின் பெற்றோர்களைச் சிலர் கரைத்துக் கொட்டவும் ஆரம்பித்தனர். மேலும், இச்சம்பவத்தில் சிறுவனின் பெற்றோர் வழக்கு பதியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: MS Entertainments

More from DriveSpark

Article Published On: Friday, March 1, 2019, 11:52 [IST]
English summary
5 Year Old Kid Drives His Toy Car On A Busy Road. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+